search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vennaimalai murugan"

    பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசித்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசித்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், 5.30 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது. விழா தொடர்ந்து 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. இன்று காலை 10.30 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வருதல், 12 மணிக்கு உச்சிகால பூஜை மற்றும் பாலாபிசேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து மாலை 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி ரத வீதி உலா நடைபெறுகிறது. முதல் நாள் திருவிழா காமராஜ் நகர் பொதுமக்கள் சார்பிலும்,2-ம் நாள் சைவ வேளாளர் சமுதாயம் சார்பிலும், 3-ம் நாள் தேவர் சமுதாயம், 4-ம் நாள் யாதவர் சமுதாயம், 5-ம் நாள் பட்டங்கட்டியார் சமுதாயம், 6-ம் நாள் அரிசன சமுதாயம், 7-ம் நாள் விஸ்வகர்மா சமுதாயம், 8-ம் நாள் செங்குந்த முதலியார் சமுதாயம், 9-ம் நாள் திருவிழா வணிக வைசிய செட்டியார் சமுதாயம், 10- நாள் திருவிழா நாடார் சமுதாயம், 11-ம் நாள் திருவிழா பிராமணர் சமுதாயம் சார்பிலும் நடைபெறுகிறது.

    10ம் நாள் திருநாளான வருகிற 19-ந் தேதி காலை கீழப்பாவூர் சிவன்கோவில், பனையடிப்பட்டி, குறும்பலாப்பேரி, செட்டியூர் ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து பால் குடங்களுடன் ஊர்வலமாக வருகின்றனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிசேகம், பூஜை, அலங்காரம் நடைபெறுகிறது.

    நிறைவு நாளான 20-ந் தேதி கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாமி, அம்பாள் தீர்த்தவாரியும், பூஞ்சப்பர காட்சி மற்றும் புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது. திருவிழாக்களின் அனைத்து நாட்களிலும் சிறப்பு பூஜைகள், கலை நிகழ்ச்சிகள் சிறப்பு சொற்பொழிவுகள்- இன்னிசை கச்சேரிகள் நடக்கிறது. திருவிழாவிற்கான எற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    ×