என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veterinary"

    • பாப்பாக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குமாரசாமியாபுரம் கிராமத்தில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • கால்நடை சுகாதார உதவி இயக்குனர் டாக்டர் தங்கராஜ் முகாமை பார்வையிட்டார்.

    முக்கூடல்:

    பாப்பாக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குமாரசாமியாபுரம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமை பாப்பாக்குடி பஞ்சாயத்து தலைவர் ஆனைக்குட்டி பாண்டியன் தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடைகள், கோழி ஆகியவற்றிற்கு சிறப்பு மருத்துவம் அளிக்கப்பட்டது. சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளை மருத்துவத்திற்காக மக்கள் கொண்டு வந்தனர்.

    கால்நடை சுகாதார உதவி இயக்குனர் டாக்டர் தங்கராஜ் முகாமை பார்வையிட்டார். முக்கூடல் கால்நடை உதவி மருத்துவர் ஹேமாசாயி, அத்தாள நல்லூர் கால்நடை உதவி மருத்துவர் முயல்வி ஆகியோர் கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர். முகாம் ஏற்பாடுகளை உதவியாளர் தர்மலிங்கம் மற்றும் பஞ்சாயத்து கவுன்சிலர் பார்த்திபன் ஆகியோர் செய்திருந்தனர். 

    • இந்திய கால்நடை மருந்தியல் மற்றும் நற்செயல் சொசைட்டி சார்பில் 22-வது அகில இந்திய மருந்தியல் நச்சியல் துறை தேசிய கருத்தரங்கம் நாமக்கல்லில் நடைபெற்றது.
    • தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் இந்திய கால்நடை மருந்தியல் மற்றும் நற்செயல் சொசைட்டி சார்பில் 22-வது அகில இந்திய மருந்தியல் நச்சியல் துறை தேசிய கருத்தரங்கம் நாமக்கல்லில் நடைபெற்றது.

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் தலைமை தாங்கினார். நாமக்கல் கால்நடை மருத்து வக் கல்லூரி முதல்வர் செல்வராஜ் வரவேற்றார். இதில் உத்தர பிரதேச கால்நடை மருத்துவக் பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ வஸ்தவர, ராஜஸ்தான் பல்கலை துணை வேந்தர் சதீஷ் கே கர்க், ஐ.எஸ்.வி.பி.டி தலைவர் தாக்கர், கருத்தரங்க அமைப்புச் செயலாளர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    கருத்தரங்கம் முடிவில், தமிழ்நாடு கால்நடை மருத்துவர் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் செல்வகுமார் கூறியதாவது:-

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை மூலம் தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் இளநிலை பிரிவில் பி.வி.எஸ்.சி கால்நடை மருத்துவம் மற்றும் பி.டெக் தொழில்நுட்ப பிரிவில் பி.டெக் உணவு தொழில்நுட்பம், பி.டெக் பால்வளம், பி.டெக் கோழி வளர்ப்பு ஆகிய பாடப்பிரிவுகள் நடைபெற்று வருகிறது.

    தற்போது 2023-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகளின் தரவரிசை பட்டியல் ஏற்கனவே கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

    கிராமப்புற மற்றும் 7.5 சதவீத அரசு ஒதுக்கீடுகள் வழங்கப்படும் இடங்கள் விரைவில் நிரப்பப்படும். பொது பிரிவு மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை இந்த வாரத்தில் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார். 

    • மானூர் யூனியன் பேட்டை ரூரல் ஊராட்சி கொண்டாள வளவு சமுதாய நலக்கூடத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
    • முகாமில் ஆடு, மாடு ஆகிய கால்நடைகளுக்கு தடுப்பூசி , சத்து மாவு மற்றும் சினை ஊசி போடப்பட்டது.

    நெல்லை:

    மானூர் யூனியன் பேட்டை ரூரல் ஊராட்சி கொண்டாள வளவு சமுதாய நலக்கூடத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.பேட்டை ரூரல் பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை முன்னிலை வகித்தார். நெல்லை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பொன்னுவேல் வரவேற்று பேசினார். ஊராட்சி துணைத்தலைவர் சுப்புலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட கால்நடைத்துறை துணை இயக்குனர் தியோபிலஸ் ரோஜர், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் கலையரசி, நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் ஜான் சுபாஷ் தொழில்நுட்ப உரை ஆற்றினர். சிறப்பு விருந்தினராக சென்னை முதன்மை நோய் நிகழ்வியல் அலுவலர் சத்யநாராயணன் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார்.

    முகாமில் பேட்டை ரூரல் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் மணிகண்டன், ஹரி நாராயணன்,அம்பை உதவி இயக்குனர் தங்கராஜ், ஊராட்சி அளவிலான மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கால்நடை உதவி மருத்துவர் ரேவதி நன்றி கூறினார்.இந்த முகாமில் ஆடு, மாடு ஆகிய கால்நடைகளுக்கு தடுப்பூசி , சத்து மாவு மற்றும் சினை ஊசி போடப்பட்டது.

    • திருமங்கலம் அடுத்த எஸ். புளியங்குளம் கிராமத்தில் கால்நடை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • இதனைத்தொடர்ந்து சிறந்த கால்நடை வளர்ப்போர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மதுரை

    திருமங்கலம் அடுத்த எஸ். புளியங்குளம் கிராமத்தில் கால்நடை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் திருமங்கலம் கோட்ட கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் ரவிச்சந்திரன், மதுரை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் கிரிஜா, விடத்தகுளம் உதவி மருத்துவர் கஜேந்திரன், கால்நடை ஆய்வாளர்கள் பிரபாகரன், சீனிவாச பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், செயற்கை கருவூட்டல், சினை பரிசோதனை மற்றும் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சிறந்த கால்நடை வளர்ப்போர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • ஊராட்சிமன்ற தலைவர் பொன்னுச்சாமி பாண்டியன் தலைமை தாங்கினார்.
    • கால்நடைகளுக்கு பல்வேறு வகையான தடுப்பூசிகளும், மருந்து- மாத்திரைகள் வழங்கினர்

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே பன்னீர்குளம் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சிமன்ற தலைவர் பொன்னுச்சாமி பாண்டியன் தலைமை தாங்கினார். முகாமை தூத்துக்குடி மண்டல இணை இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கோவில்பட்டி உதவி இயக்குனர் டாக்டர் விஜய்ஸ்ரீ, கால்நடை உதவி மருத்துவர்கள் டாக்டர் மனோஜ் குமார், புனிதா ஆகியோர் கொண்ட குழுவினர் கால்நடைகளுக்கு பல்வேறு வகையான தடுப்பூசிகளும், மருந்து- மாத்திரைகள் வழங்கினர். இதில் 550 பசு மாடுகள், 1700 செம்மறி ஆடுகள், 360 வெள்ளாடுகள், 400 கோழிகள் ஆகியவற்றிற்கு தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் கொடுக்கப்பட்டன. முகாமிற்கான ஏற்பாடுகளை கயத்தாறு கால்நடை மருத்துவ அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் செய்திருந்தனர்.

    • கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
    • சிறந்த கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழச்சாக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மேலமானாங்கரை கிராமத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கீழச்சாக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி முகாமை தொடங்கி வைத்தார். கால்நடை உதவி மருத்துவர்கள் அகத்தியன், சுந்தரமூர்த்தி, கால்நடை ஆய்வாளர் இளமதி, கால்நடை உதவியாளர்கள் அன்னலட்சுமி, தங்கராசு ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    193 மாடுகளும், 486 வெள்ளாடுகளுக்கும், 235 செம்மறியாடுகளுக்கும், 38 நாய்களுக்கும், 415 கோழிகளுக்கும் சிகிச்சை தரப்பட்டது. சிறந்த கிடேரி கன்று வளர்த்த உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சிறந்த கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    • பூவளத்தூரில் அரசு சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
    • கால்நடை வளர்பவர்களுக்கு கால்நடை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.

    பரமக்குடி

    பரமக்குடி அருகே பூவளத்தூர் கிராமத்தில் அரசு சார்பில் கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமை வகித்தார். ஒன்றிய குழு துணைத்தலைவர் பூமிநாதன் முன்னிலை வகித்தார்.

    முகாமினை போகலூர் ஒன்றிய குழு தலைவர் சத்யா குணசேகரன் தொடங்கி வைத்தார். கால்நடை மருத்துவர்கள் நந்தினி, ரஜினி ஆகியோர் குடற்புழு நீக்கம், மலடு நீக்க சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சைகளை அளித்தனர்.

    இந்த முகாமில் சிறந்த கால்நடை பராமரிப்பாளர் மற்றும் கன்றுகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி வழங்கினார். மேலும், ஊட்டச்சத்து குறைபாடுடைய கால்நடை களுக்கு தாது உப்பு கலவைகளும், ஊறுகாய் புற்களும் வழங்கப்பட்டது.

    கால்நடை வளர்பவர்களுக்கு கால்நடை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.

    முகாமில் வழக்கறிஞர் பரமசிவம், கால்நடை ஆய்வாளர் சுப்புகாளிமுத்து, ஊராட்சி செயலர் பயனா ளிகளும்,பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    • பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஒன்றியம், கு.அய்யம்பாளையம் கிராமத்தில் கால்நடை சுகாதார சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • இம்முகாமில் கு.அய்யம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அழைத்து வந்த 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஒன்றியம், கு.அய்யம்பாளையம் கிராமத்தில் கால்நடை சுகாதார சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் கால்நடை மருத்துவர்கள் மணிவேல், தனவேல், செந்தில்குமார், கால்நடை ஆய்வாளர் பொன்னம்மாள், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சுரேஷ் , துரைசாமி, தடுப்பூசி பணியாளர்கள் பிரபு மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கான சிறப்பு சிகிச்சை மற்றும் ஆலோ சனைகள் வழங்கினார்.

    இதில், சிறந்த முறையில் கால்நடை வளர்ப்பு முறைகளை கையாளும் முன்னோடி விவசாயி களுக்கு, அ.குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் விருதுகள் வழங்கி னார். இம்முகாமில் கு.அய்யம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அழைத்து வந்த 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. முகாமிற்கு தேவையான ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட கிராமத்தினர் செய்திருந்தனர்.

    • கடையம் அருகே உள்ள கோதாண்டராமபுரத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • கால்நடை மருத்துவர் சொர்ண ராணி கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தார்.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள கோதாண்டராமபுரத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. தெற்கு மடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம ராதா ஜெயம் தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவர் சொர்ண ராணி கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தார்.

    முகாமில் பசுமாடுகளுக்கு சினை ஊசி போடுதல், மற்றும் சத்து மாத்திரைகள், கிருமி ஒழிப்பு டானிக்குகள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முகாமில் கலந்து கொண்ட 204 மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    • துரைசாமி உட்பட விவசாயிகள், கால்நடை மருத்துவ பணியாளர்கள்அ,லுவலர்கள் கலந்து கொண்டனர்.

     வெள்ளகோவில்.டிச.28-

    வெள்ளகோவில் ஒன்றியம், வேலப்பநாயக்கன் வலசு ஊராட்சி கள்ளமடை என்ற இடத்தில் திருப்பூர் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் பிரகாசம் தலைமையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.முகாமில் கலந்து கொண்ட 204 மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. 865 செம்மறி ஆடுகள், 137 வெள்ளாடுகளுக்கு பெரியம்மை தடுப்பூசி போடப்பட்டது.

    நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டது. தற்போது கால்நடைகளை அம்மை நோய் தாக்கி வருவதால் வெள்ளகோவில் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள 8 கால்நடை மருந்தகங்களில்,கால்நடைகளுக்கு பெரியம்மை தடுப்பூசி போட்டு நோய்களிலிருந்து கால்நடைகளை காப்பாற்றி கொள்ள வேண்டும் என கால்நடை மருத்துவர் பகலவன் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த முகாமில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சோமசுந்தரம் மற்றும் முன்னாள் பாசன சபை தலைவர் துரைசாமி உட்பட விவசாயிகள், கால்நடை மருத்துவ பணியாளர்கள்அ,லுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • முகாமில் 100-க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    • பொதுமக்களுக்கு கால்நடை பராமரிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம் தேத்தாகுடி தெற்கு கிராமத்தில் நடைபெற்றது.

    கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ், உதவி இயக்குனர் ஆசான் இப்ராகிம் அறிவுரை பேரில் நடைபெற்ற முகாமில் 100-க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் வனஜா சண்முகம் தலைமை தாங்கினார்.

    மாவட்ட கவுன்சிலர் சோழன், கால்நடை உதவி மருத்துவர்கள் முருகேசன், சண்முகநாதன், சரவணகுமார், கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர், ஊராட்சி மன்ற துணை தலைவர் அழகேசன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கால்நடை உரிமையாளர்கள் பலர் ஆகியோர் கலந்துகொண்டனர். முகாமில் பொதுமக்களுக்கு கால்நடை பராமரிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    • மலடு நீக்கம், குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
    • 500 -க்கும் மேற்பட்ட கால்நடை கலந்து கொண்டு பயன்பெற்றன.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா செம்போடை ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இம்முகாம் கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ், உதவி இயக்குனர் ஆசான் இப்ராகிம் ஆகியோாரின் ஆலோசனை பேரில் நடைப்பெற்றது.

    முகாமை ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் தொடங்கி வைத்தார்.

    இதில் கால்நடை உதவி டாக்டர்கள் சண்முகநாதன், முருகேசன் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல், பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்கம், குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சை அளித்தனர்.

    இதில் 500 -க்கும் மேற்பட்ட கால்நடை கலந்து கொண்டு பயன்பெற்றன.

    முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் பரிசு வழங்கினார்.

    இதில் கால்நடை ஆய்வாளர் மாசிலாமணி மற்றும் வார்டு உறுப்பினர்கள், கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×