search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "victims families"

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரிடம் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர். #Thoothukudifiring
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் கயமடைந்தனர். இந்த சம்பவத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறது.

    இற்காக தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் போலீஸ் சூப்பிரண்டு புபுல் தத்தா பிரசாத், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்பீர்சிங், இன்ஸ்பெக்டர்கள் லால் பகர், நிதின்குமார், அருண் தியாகி ஆகிய 5 பேர் கொண்ட குழுவினர் தூத்துக்குடியில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஏற்கனவே துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று இந்த குழுவினர் 144 தடை உத்தரவு அமல்படுத்துவதற்காக பணியமர்த்தப்பட்டு இருந்த தாசில்தார் மற்றும் துணை தாசில்தார்கள் 9 பேரிடம் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பில் இருந்தவர்கள், துப்பாக்கி சூட்டின்போது ஏற்பட்ட வன்முறையில் காயம் அடைந்த 29 பெண் போலீசார் உள்பட 99 போலீசாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் பற்றிய விவரம், பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் துப்பாக்கி சூடு, தடியடி சம்பவத்துக்கு பிறகு எடுத்த நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டன.



    இதனிடையே துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் பலியானவர்களின் குடும்பத்தினரை விசாரணைக்கு வருமாறு தேசிய மனித உரிமை ஆணையத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் அவர்கள் விசாரணைக்கு வரவில்லை.

    இதையடுத்து தேசிய மனித உரிமை ஆணையத்தினர், பலியான அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்த அந்தோணி செல்வராஜ், லூர்தம்மாள் புரத்தை சேர்ந்த கிளாஸ்டன், லயன்ஸ் டவுனை சேர்ந்த மாணவி சுனோலின், தாமோதரன் நகர் மணிராஜ் ஆகியோரது வீடுகளுக்கு சென்றனர். அங்கு இறந்தவர்களின் உறவினர்களை சந்தித்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    பலியான மற்ற 9 பேரின் வீடுகளுக்கும் சென்று அவர்களது உறவினர்களிடம் விசாரணை நடத்த மனித உரிமை ஆணைய அதிகாரிகள் திட்டமிட்டனர். அதன்படி பலியானவர்களின் வீடுகளுக்கு சென்று இன்றும் விசாரணை நடத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சம்பவம் நடந்த அன்று பொறுப்பில் இருந்த கலெக்டர் வெங்கடேஷ், போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் ஆகியோரிடமும் விசாரணை நடத்த மனித உரிமை ஆணைய குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள்.  #Thoothukudifiring
    ×