search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vigorous surveillance at check-posts"

    • சோதனை தீவிரபடுத்த டி.ஐ.ஜி. உத்தரவு
    • ஆந்திர எல்லையோர சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி நிலையத்தில் நேற்று மாலை வேலூர் சரக டி.ஐ.ஜி. எம்.எஸ்.முத்துசாமி திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து பரதராமி அடுத்த கன்னிகாபுரம் அருகே தமிழக ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தமிழக காவல்துறையின் சோதனை சாவடியில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் பரதராமி சோதனை சாவடி முக்கியமானது. இரவு நேரங்களில் கூடுதலாக வெளிச்சம் தேவைப்படுவதால் இங்கு உடனடியாக உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த சோதனை சாவடியில் இரவில் மிளிரும் வகையிலான நவீன பேரிகார்டுகள் அமைக்கப்படும்.

    வெளி மாநிலங்களில் வரும் வாகனங்களை கனரக வாகனங்கள், பஸ்கள், லாரிகள், கார்கள் என தனித்தனியாக அதன் பதிவு எண்களை பதிவு செய்ய வேண்டும்.

    தொடர்ந்து தினம் தோறும் வரும் வாகனங்கள் பதிவு எண்களை தனியாக குறிப்பிட்டு அதில் சந்தேகப்படுமான பொருட்கள் இருந்தாலும் சந்தேகம் இருந்தாலும் உடனடியாக உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாநில எல்லை பகுதியில் அமைந்துள்ளதால் சோதனை சாவடியில் உள்ள போலீசார் விழிப்பு டன் இருக்க வேண்டும் இரவு நேரங்களில் வாகனங்கள் மூலம் போதைப் பொருட்க ளான கஞ்சா குட்கா உள்ளிட்டவை கடத்தி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் ஒரு சப் இன்ஸ்பெக்டர் 4 போலீசார் தீவிர கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×