search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijay prabhakaran"

    தலைவரும், கட்சி தலைமையும் விரும்பினால் எந்த தேர்தலிலும் போட்டியிடுவேன் என்று விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கூறினார். #DMDK #Vijayakanth #Vijayprabhakaran
    ராயபுரம்:

    தே.மு.தி.க. வடசென்னை மாவட்டம் சார்பில் புதுவண்ணாரப்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.

    இதில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பங்கேற்றார். அப்போது விஜயகாந்த் உடல்நலம் பெற பிரார்த்தனை நடந்தது. விழாவில் விஜயபிரபாகரன் நலத்திட்ட உதவி மற்றும் பிரியாணிகளை வழங்கினார்.

    ஆதரவற்ற குழந்தைகள் கருணை இல்லத்துக்கு நிதி உதவி வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தபிறகு கூட்டணி குறித்தும், வியூகம் குறித்தும் அறிவிக்கப்படும். தலைவரும், கட்சி தலைமையும் விரும்பினால் எந்த தேர்தலிலும் போட்டியிடுவேன். தேர்தலில் போட்டியிட எந்த பயமும் எனக்கு இல்லை. எங்கள் கட்சிக்குள் குழப்பம் இல்லை. எனது வளர்ச்சிக்கு சுதீப் பக்கபலமாக இருக்கிறார். எனக்கும் அவருக்கும் பிரச்சனை இருப்பதாக கூறுவது வதந்தி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மதிவாணன், முன்னாள் எம்.எல்.ஏ, நல்ல தம்பி, பகுதி செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMDK #Vijayakanth #Vijayprabhakaran
    இடைத்தேர்தல்-பாராளுமன்ற தேர்தலில் தந்தை கூறினால் பிரசாரம் செய்வேன் என்று விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். #vijayprabhakaran #vijayakanth #dmdk

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தே.மு.தி.க. தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறதே தவிர, இறங்கவில்லை. நான் பதவிக்காக அரசியலுக்காக வரவில்லை. சேவைக்காகவே வந்தேன். என் தந்தை அழைத்தார், வந்து விட்டேன்.

    இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி குறித்து பார்த்துக் கொள்ளலாம். என் தந்தை கூறினால் தேர்தல் பிரசாரத்திற்கு செல்வேன். தேர்தல் கூட்டணி தொடர்பாக என் தந்தையிடம் கேட்டு தான் தெரிந்து கொள்ள வேண்டும். நான் இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளேன்.


    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ஆண்டவர் கோவில் அருகே செண்டை மேளம், தப்பாட்டம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ரவுண்டானா அருகே கட்சி கொடியை விஜயபிரபாகரன் ஏற்றி வைத்து கல்வெட்டை திறந்து வைத்தார். #vijayprabhakaran #vijayakanth #dmdk

    தி.மு.க.வில் மு.கருணாநிதிக்கு பிறகு மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்படுவதைபோல விஜயகாந்தும் தனது மூத்த மகன் விஜய் பிரபாகரனை முன்னிலைப்படுத்த உள்ளார். #DMDK #Vijayakanth #VijayPrabhakaran
    சென்னை:

    தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய்பிரபாகரன் பேட்மிண்டன் அணி ஒன்றை நிர்வகித்து வருகிறார். சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் நாய்களையும் வளர்த்து வருகிறார்.

    தி.மு.க.வில் மு.கருணாநிதிக்கு பிறகு மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்படுவதைபோல விஜயகாந்தும் தனது மூத்த மகன் விஜய் பிரபாகரனை முன்னிலைப்படுத்த உள்ளார்.

    இன்று அனகாபுத்தூர் அம்மன் கோயில் திடலில் தே.மு.தி.க கட்சியின் 14-வது ஆண்டு விழா மற்றும் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் விஜய்பிரபாகரன் கலந்துகொள்ள உள்ளார். அவருக்கு இது முதல் மேடை என்பதால் எப்படி பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இதுகுறித்து மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:-

    ‘விஜய் பிரபாகரனை அரசியலில் ஈடுபடுத்த வேண்டும் என விஜயகாந்த் விரும்புகிறார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் இந்த விருப்பம் உள்ளது. மகனுக்கு உடனடியாக பதவி கொடுத்து விட்டால் சர்ச்சையாகும் என்பதால் படிப்படியாக அரசியலில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளார்.

    விஜயகாந்துக்கு உருவான செல்வாக்கு அதன் பின்னர் அவரது கட்சியில் இருக்கும் யாருக்கும் உருவாகவில்லை. மகனை களம் இறக்கும்போது மக்களிடம் இழந்த செல்வாக்கையும் இளைஞர்கள் நம்பிக்கையையும் பெற முடியும் என்று நம்புகிறார். தனக்கு பின் கட்சியின் அதிகாரம் முழுவதையும் மகனுக்கு மாற்ற விரும்புகிறார்.


    விஜயகாந்த் சில மாதங்களுக்கு முன்னர் உட்கட்சி பிரச்சனையை ஆராயும் குழு என்ற குழுவைஅமைத்து அதன் தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனை நியமித்தார். இந்த குழுவுக்கு வரும் புகார்கள் அனைத்தும் விஜய் பிரபாகரன் கவனத்துக்கும் செல்கிறது.

    அந்த புகார்கள் உடனடியாக விசாரிக்கப்பட்டு உண்மை இருக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்படி மெல்ல மெல்ல மகனை கட்சியின் முக்கிய இடத்திற்கு கொண்டு வருகிறார்’

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    விஜய் பிரபாகரன் கட்சிக்கு வந்தால் அவருக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்படலாம்? என்று கேட்டபோது:-

    கட்சியில் வெகுகாலமாக இளைஞரணி செயலாளர் பொறுப்பை தலைவர் காலியாகவே வைத்துள்ளார். யாரும் நியமிக்கப்படவில்லை. அந்த பொறுப்பில் விஜய் பிரபாகரன் நியமிக்கப்பட வாய்ப்பு அதிகம் என்று அவர்கள் கூறினர். #DMDK #Vijayakanth #VijayPrabhakaran
    சமூக வலைதளங்களில் விஜயகாந்த் பற்றி பரவி வரும் தகவலை அறிந்து அவரது மகன் விஜய் பிரபாகரன் வேதனையுடன் வீடியோவில் உருக்கமாக பேசியுள்ளார். #DMDK #Vijayakanth #VijayPrabhakaran
    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். நேற்றிரவு சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ‘மியாட்’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் விஜயகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவியது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தே.மு.தி.க. தலைமை கழகம் அறிவித்தது.

    சமூக வலைதளங்களில் விஜயகாந்த் பற்றி பரவி வரும் தகவலை அறிந்து அவரது மகன் விஜய் பிரபாகரன் வேதனையுடன் வீடியோவில் உருக்கமாக பேசியுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    கேப்டன் விஜயகாந்த் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சீரியசாக இருப்பதாக தகவல் பரவி கொண்டு இருக்கிறது. அவர் நன்றாக இருக்கிறார். அவர் மருத்துவமனையில் நலமுடன் ராஜாபோல இருக்கிறார். அவருக்கு எதுவும் இல்லை. அவர் சீரியசாக இருந்தால் நான் அவருடன் இருக்க வேண்டும். ஆனால் நான் வேலை விசயமாக நெல்லூர் வந்து இருக்கிறேன். தேவையில்லாமல் தவறான தகவலை பரப்பி விடுவதால் உங்களுக்கு என்ன நன்மை?


    இந்த மக்களுக்காக கஷ்டப்பட்டு உழைத்த அப்பா உடல் நலம் சரியில்லாமல் இருந்தது உண்மைதான். ஆனால் வயதானவர் போல படுக்கையில் இருப்பதாக இஷ்டத்திற்கு பேசி வருவது வேதனை அளிக்கிறது. என் தந்தையை இப்படி கூறுவதன் மூலம் எந்த விதத்திற்கு எனக்கு வலிக்கும் என்பதை நீங்கள் உணரவில்லையா? உங்கள் வீட்டில் இப்படி யாருக்காவது இந்த நிலை ஏற்பட்டால் இப்படித்தான் பேசுவீர்களா, தேவையற்ற பேச்சுக்களால் மனவேதனை அடைகிறோம்.

    என் தந்தையை அம்மாவும் நாங்களும் அக்கறையுடன் பார்த்து வருகிறோம். அப்பாவிற்கு ஒன்றும் ஆகாது. மீண்டும் கேப்டன் வருவார் எல்லோர் முன்பும் நிற்பார். அவருக்கு ஒன்றும் ஆகாது, என் உயிரே போனாலும் அது நடக்கும். அதனால் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்.

    அவரவருக்கு சுமை, வேலைகள் இருக்கிறது. அதை பாருங்கள். நீங்கள் எதிர்பார்ப்பதை போல ஆயிரம் மடங்கு நலமுடன் அவர் சீக்கிரம் வருவார். எனக்கு வேண்டியதெல்லாம் பாசிட்டிவ்வாக நினையுங்கள். அவரை நினைத்து பெருமைப்படுங்கள். நம்பிக்கை வையுங்கள். அவர் திரும்ப வருவார்.

    இவ்வாறு பேசினார். #DMDK #Vijayakanth #VijayPrabhakaran



    ×