search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijay Vasant"

    • KIMS மருத்துவமனையின் அறிமுக விழாவில் விஜய் வசந்த் கலந்துக் கொண்டார்.
    • குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளாரை சந்தித்த விஜய் வசந்த் வாழ்த்து பெற்றார்.

    கன்னியாகுமரி மாவட்டம், முளகுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட கோடியூர் அரசு நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் தேவை என்ற கோரிக்கை வைத்தனர்.

    இதைதொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சம் ஒதுக்கீடு செய்து அந்தப் பணிகள் நிறைவுப்பெற்றன. 

    இந்நிலையில், இந்த புதிய வகுப்பறைகளை கன்னியாகுமரி மாவட்ட எம்பி விஜய் வசந்த் திறந்து வைத்தார்.

    இதைதொடர்ந்து, நாகர்கோவிலில் புதியதாக ஆரம்பிக்கப்படவுள்ள KIMS மருத்துவமனையின் அறிமுக விழாவில் விஜய் வசந்த் கலந்துக் கொண்டார். 

    மேலும், மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மருத்துவமனை ஏழை மக்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். 

    தொடர்ந்து, ஆவணி திருவிழாவை முன்னிட்டு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளாரை சந்தித்த விஜய் வசந்த் வாழ்த்து பெற்றார்.

    • பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் இடையூறை ஏற்படுத்தி வருகிறது.
    • பலமுறை கோரிக்கைகள் வைத்தும் பலன் இல்லை.

    கன்னியாகுமரி:

    இரணியல் ரெயில் நிலையத்தில் அமைய இருக்கும் ஜல்லி யார்டு பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் இடையூறை ஏற்படுத்தி வருகிறது. அதனை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகத்திற்க்கு பலமுறை கோரிக்கைகள் வைத்தும் பலன் இல்லை.

    இதனால் இன்று கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில் இரணியல் ரெயில் நிலையத்தின் முன்பு

    கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட தலைவர் கே.டி.உதயம், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், வட்டார தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • உலக சாதனை முயற்சியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
    • வெற்றி பெற்ற கண்ணனுக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கி பாராட்டு.

    குமரி மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் உலக சாதனை செய்யும் வகையில் லாரி ஒன்றை கயிறு மூலம் இழுத்து செல்லும் முயற்சியில் ஈடுபட்டார். இதை கன்னியாகுமரி எம்.பி.விஜய்வசந்த் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் சாதனை செய்த கண்ணனுக்கு கோப்பை மற்றும் சான்றிதழை அவர் வழங்கி பாராட்டினார். 


    இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள விஜய்வசந்த் எம்.பி., தனது உடல் மற்றும் தசை பலத்தால் பல சாதனைகளை புரிந்து வரும் குமரி மாவட்டத்தை சேர்ந்த கண்ணன், இன்று 13.5 டன் எடை கொண்ட லாரியை 4 நிமிடங்களில் தனது கரங்களால் 111 மீட்டர் இழுத்து சென்று சாதனை செய்துள்ளார். அவரால் தமிழகத்திற்க்கும், குமரி மாவட்டத்திற்கும் பெருமை என்று குறிப்பிட்டுள்ளார்.

    ×