search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vilathikulam rain"

    விளாத்திகுளம் மற்றும் கோவில்பட்டியில் வெளுத்து வாங்கிய மழையால் சாலையில் நீர் தேங்கியது. இந்த மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கோவில்பட்டி

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் போதுமான மழை பெய்யாமல் இருந்தது. இதனால் விவசாயிகள் மழைக்காக எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இருப்பினும் கடந்த சில தினங்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. கோவில்பட்டி நகர் பகுதியை விட சுற்றுவட்டார பகுதியில் பரவலான மழை இருந்தது. 

    இந்நிலையில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் திடீரென பலத்த இடி, மின்னல் மட்டுமின்றி பலத்த காற்றோடு மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக இந்த மழை நீடித்தது. கோவில்பட்டி நகர் மட்டுமின்றி, சுற்று வட்டார பகுதிகளும் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    வெயிலின் தாக்கத்தில் இருந்து பொது மக்கள் விடுபட்டுள்ளனர். மேலும் மானாவாரி விவசாயி களுக்கு இந்த மழை ஓரளவு கை கொடுக்கும் என்பதால் அவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையில் இந்த பலத்த மழையினால் கோவில்பட்டி நகரில் சாலைகளில் மழைநீர் பெருக்கடுத்து ஓடியதால் வாகனங்கள் செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. மேலும் பொது மக்களும் நடந்து செல்வதில் சிரமப்பட்டனர்.  

    எட்டயபுரத்தில் மதியம் மிதமான மழை பெய்தது. கயத்தாறில் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. மாவட் டத்தில் நேற்று விளாத்தி குளத்தில் அதிகபட்சமாக 39 மில்லி மீட்டரும், கோவில் பட்டியில் 36 மில்லி மீட்டரும், கழுகுமலையில் 30 மில்லி மீட்டரும், ஸ்ரீவைகுண்டத்தில் 19.5 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

     தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

     விளாத்திகுளம் -39, கோவில்பட்டி -36, கழுகுமலை-30, ஸ்ரீவைகுண்டம் -19.5, எட்டயபுரம் -12, வைப்பாறு-12, குலசேகரபட்டிணம் -11, கயத்தாறு-9, ஓட்டப் பிடாரம் -6, கீழஅரசரடி-6, வேடநந்தம்-5, திருச்செந்தூர்-2.2
    ×