search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "VN Ravi MLA"

    அம்மாவின் வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருவதாக வி.என்.ரவி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அம்மாவின் வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருவதாக வி.என்.ரவி எம்.எல்.ஏ.  தெரிவித்துள்ளார்.

    தென்சென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. வேளச்சேரி பகுதி 178-வது வட்ட கழக செயலாளர் எம்.ஏ.மூர்த்தி தலைமையில் காவிரி உரிமையை மீடுடெடுத்த வெற்றி பொதுக்கூட்டம் வேளச்சேரியில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வி.என்.ரவி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    210 ஆண்டுகளுக்கு முன்பு மைசூர் மாகானத்திற்கும், சென்னை மாகானத்திற்கும் காவிரி நதிநீர் பங்கீட்டு கொள்வதில் ஏற்பட்ட தகராறு 210 ஆண்டுகளுக்கு பிறகு அம்மாவின் விடா முயற்சியால் 2011-ல் அம்மா உச்சநீதிமன்றம் சென்று 2013-ல் அரசிதழில் வெளியிடப்பட்டது.

    அதற்கு பிறகும் செயல்படுத்தப்படாததால் மீண்டும் நீதிமன்றம் சென்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அம்மாவின் கனவை நிறைவேற்ற அம்மாவின் வழியில் நல்லாட்சி நடத்திவரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் வெற்றி கிடைத்துள்ளது.

    தி.மு.க. ஆட்சியில் கடுகளவு கூட காவிரி பிரச்சினைக்காக செயல்பட்டதில்லை. தமிழகம் இன்று மின்சாரம் தட்டுப்பாடின்றி மின் மிகை மாநிலமாக உள்ளது. தி.மு.க. ஆட்சியில் குடிநீருக்காக வீதி வீதியாக குடங்களுடன் அலைந்த பொதுமக்களின் துயரத்தை போக்க அம்மா புதிய வீராணம் திட்டத்தை கொண்டு வந்தார். இதேபோல் பல்வேறு நல்ல திட்டங்களை அம்மாவின் வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    விருகம்பாக்கத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க கோரி அமைச்சருக்கு வி.என்.ரவி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

    சென்னை:

    சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தில் விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    விருகம்பாக்கம் தொகுதி 3 லட்சத்து 5 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட தொகுதி. விருகம்பாக்கம் தொகுதியிலே அரசு மேல்நிலைப்பள்ளி, உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, சென்னை மேல்நிலைப்பள்ளி, தனியார் மேல்நிலைப்பள்ளிகள் என சுமார் 40 பள்ளிகளுக்கு மேலாக உள்ளன.

    வசதி இல்லாத ஏழை-எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் அரசு கல்லூரிகளை நம்பி இருக்கின்றார்கள். அந்த வகையிலே, விருகம்பாக்கம் தொகுதிக்கு ஒரு அரசு கலைக்கல்லூரி தர வேண்டும் என்று அமைச்சரை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

    இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கே.பி.அன்பழகன், விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியானது சென்னை மாவட்டத்திற்குட்பட்ட பகுதியிலேயே அமைந்து இருக்கிறது.

    சென்னை மாவட்டத்தை பொறுத்தவரையில் 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 14 அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளும், 18 சுயநிதி கலைக்கல்லூரிகளும் என்று 39 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

    கடந்த கல்வி ஆண்டில் 7 அரசு கலைக் கல்லூரிகளில் சேர்க்கை இடங்கள் ஒப்பளிக்கப்பட்டதில், 1,485 இடங்கள் காலியாக இருக்கின்றன. ஆகவே தான், மேற்கண்ட விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியிலே புதியதாக ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேவை எழவில்லை.

    ஒரு கல்லூரி புதியதாக தொடங்குவதற்கு ரூ. 12 கோடியே 77 லட்சம் தேவைப்படுகின்ற சூழ்நிலையில் உறுப்பினர் விருகம்பாக்கம் தொகுதியிலே ஒரு புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்குவது குறித்து கோரிக்கை வைத்திருப்பதால் விருகம்பாக்கம் தொகுதியிலே ஒரு புதிய கலைக்கல்லூரி தொடங்குவது குறித்து தேவைக்கேற்ப ஆராய்ந்து, இந்த அரசு பரிசீலிக்கும் என்றார்.

    ×