என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "voter awareness"
- தாசில்தாரும் துணை வாக்காளர் பதிவு அதிகாரியுமான கோபால கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
- வாக்காளர் அடையாள அட்டைக்கு ஹெல்ப் லைன் அலைபேசி செயலி மூலமாக விண்ணப்பிக்கலாம் என்பது பற்றி செயல் விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை மணப்பட்டு கிருஷ்ணசாமி மகளிர் கல்வியியல் கல்லூரியில் புதுச்சேரி அரசின் தேர்தல் துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைப்பெற்றது.
உதவி பேராசிரியரும் நோடல் அலுவலருமான பாரதி வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் மஞ்சுளா தலைமை உரையாற்றினார்.
பாகூர் தாசில்தாரும் துணை வாக்காளர் பதிவு அதிகாரியுமான கோபால கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். சிறப்பு வாக்காளர் பதிவு அதிகாரி வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கினார் . முகாமில் 18 வயது நிரம்பியவர்கள் புதிய வாக்காளர்கள் எவ்வாறு வாக்காளர் அடையாள அட்டைக்கு ஹெல்ப் லைன் அலைபேசி செயலி மூலமாக விண்ணப்பிக்கலாம் என்பது பற்றி செயல் விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் மாணவிகளின், கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.
முகாம் நிறைவில் துணை முதல்வர் மஞ்சுளா நன்றி கூறினார்.
- வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்துகொண்டனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாட்டறம்பள்ளி அருகே அக்ராகரம் கிராமத்தில் அமைந்துள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஓவிய போட்டிகள் நடைப்பெற்றது.
திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி முன்னிலையில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே வாக்காளர்கள் விழிப்புணர்வு ஓவிய போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர் இதில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், தேர்தல் துணை தாசில்தார் நிர்மலா, கல்லூரி முதல்வர் பூங்கோதை, வருவாய் ஆய்வாளர் கவுரி, அக்ரா கரம் கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதையொட்டி இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்கினை தவறாது அளித்திடும் வகையில், விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டு உள்ள வாக்காளர் விழிப்புணர்வு குறித்த 5 நிமிடம் 10 வினாடிகள் ஓடக்கூடிய விளம்பர படம், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒளிபரப்பப்படுகிறது. இந்த விழிப்புணர்வு விளம்பர படம் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் பகுதியில் ஒளிபரப்பப்பட்டது.
இதை கலெக்டர் உமா மகேஸ்வரி நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், இதேபோல உள்ளூர் கேபிள் டி.வி.களிலும், திரையரங்குகளிலும் வாக்காளர் விழிப்புணர்வு விளம்பர படம் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்