search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Waste stream"

    • நெல்லை மாநகர பகுதியில் பெரும்பாலான வார்டுகளில் கழிவு நீர் ஓடைகள் முறையாக தூர்வாரப்படாததால் சாக்கடை கழிவுநீர் தேங்கி கிடக்கின்றன.
    • அந்த பகுதியில் உள்ள கழிவு நீரோடையை ஒட்டி அமைந்துள்ள கடை உரிமையாளர்கள் கோரிக்கையின் படி சிறிய ரக பொக்லைன் மூலமாக கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் பெரும்பாலான வார்டுகளில் கழிவு நீர் ஓடைகள் முறையாக தூர்வாரப்படாததால் சாக்கடை கழிவுநீர் தேங்கி கிடக்கின்றன. இது தொடர்பாக அந்தந்த பகுதி வார்டு கவுன்சிலர்கள் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் ஓடைகளை தூர்வார கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன் அடிப்படையில் நெல்லை டவுன் 25-வது வார்டுக்கு உட்பட்ட நயினார் குளம் சாலையில் உள்ள கழிவு நீரோடை சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் இருந்தது.

    இதனால் அந்த பகுதியில் உள்ள கழிவு நீர் ஓடைகளை சரி செய்ய வார்டு கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அளித்த கோரிக்கை மனுவின் அடிப்படையில் இன்று மாநகராட்சி பணியாளர்களை கொண்டு கழிவு நீர் ஓடை தூர்வாரும் பணி நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை சுகாதார அலுவலர் இளங்கோ செய்திருந்தார். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கழிவு நீரோடையை ஒட்டி அமைந்துள்ள கடை உரிமையாளர்கள் கோரிக்கையின் படி சிறிய ரக பொக்லைன் மூலமாக கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    ×