search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "watchman died"

    தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் காவலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த வல்லம் ஸ்ரீஅம்மன் நகரை சேர்ந்தவர் சமுத்திரராஜன் (வயது55 ). இவர் அருகே உள்ள ஒரு தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மாலை இவர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றபோது தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் எதிரே வந்த லாரி மோதி பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சமுத்திரராஜன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது மகன் வினோத்குமார் வல்லம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    காலாப்பட்டு பல்கலைக் கழகத்தில் காவலாளி மயங்கி விழுந்து இறந்து போனார்.

    சேதராப்பட்டு:

    புதுவை முதலியார்பேட்டை அன்சாரி துரை சாமிநகரை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 49). இவர் காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் தனியார் நிறுவன காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று காலை வழக்கம் போல் பல்கலைக்கழக 2-வது வாயிலில் ரங்கநாதன் காவல்பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென ரங்கநாதன் மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த மற்ற காவலாளிகள் ரங்கநாதனை மீட்டு பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ரங்கநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ரங்கநாதன் மனைவி பூங்குழலி காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் வழக்குபதிவு செய்து ரங்கநாதன் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தவளக்குப்பம் அருகே சைக்கிள் மீது கார் மோதியதில் தனியார் நிறுவன காவலாளி பலியானார்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் அருகே கொருக்குமேடு காந்திநகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது74). இவர் தவளக்குப்பம்- புதுவை மெயின்ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார்.

    நேற்று மதியம் இவர் மற்றொரு கம்பெனியில் காவலாளியாக வேலைபார்த்து வரும் நண்பரை பார்க்க சைக்கிளில் சென்றார்.

    சாலையை கடக்க முயன்ற போது புதுவையில் இருந்து கடலூர் நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த பிரான்சிசை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரான்சிஸ் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மகன் அந்தோணி கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேட்ரிக் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×