என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » water entered in rameshwaram temple
நீங்கள் தேடியது "Water Entered In Rameshwaram Temple"
ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக ராமநாதசாமி கோவில் முதல் பிரகாரத்தில் மழைநீர் புகுந்தது. #Rameswaramtemple
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் தொடர் மழை காரணமாக நேற்று இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
இலங்கை மற்றும் தமிழக கடற்பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்றும், இன்றும் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ராமநாதபுரம் நகர், சாயல்குடி, கமுதி, பரமக்குடி ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்தது. குறிப்பாக ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விட்டு விட்டு பலத்த மழை மற்றும் லேசான மழை பெய்தது.
ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. ராமநாதசாமி கோவில் முதல் பிரகாரத்தில் மழைநீர் புகுந்தது. இன்று காலையில் ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு ராமேசுவரத்தில் மழை பெய்த சில மணி நேரத்திலேயே மின்தடை ஏற்பட்டது. இதனால் கோவில், பஸ் நிலையம் மற்றும் முக்கிய பகுதிகள் இருளில் மூழ்கின.
இரவு 10 மணிக்கு ஏற்பட்ட மின்தடை இன்று காலை 9 மணி வரை சரி செய்யப்படவில்லை. இதனால் இரவு முழுவதும் பொதுமக்கள் தூக்கத்தை இழந்து தவித்தனர். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மின் தடையால் கடும் அவதியடைந்தனர்.
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. நகரில் பெய்த மழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
சில இடங்களில் மழை காரணமாக மின் தடையும் ஏற்பட்டது. வாடிப்பட்டி, சோழவந்தான், மேலூர், சமயநல்லூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. 2 நாட்கள் பெய்து வரும் மழையால் மதுரை மாவட்டத்தில் இதமான வானிலை நிலவியது. #Rameswaramtemple

×

X