search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water level indecreased"

    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. #MetturDam
    சேலம்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 1092 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 1000 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு காவிரி ஆற்றில் 16 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    கடந்த 15-ந் தேதி 100 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிந்து நேற்று 96.56 அடியானது. இன்று மேலும் ஒரு அடிக்கும் மேல் சரிந்து 95.42 அடியானது.

    இதனால் கடந்த 5 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் 4.58 சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே நிலை நீடித்தால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது. #MetturDam
    ×