search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wearing Garland"

    • அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று வருவது வழக்கம்.
    • மணலூர் அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.

    சுவாமிமலை:

    கார்த்திகை முதல் தேதியில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று அய்யப்பசுவாமியை தரிசனம் செய்வது வழக்கம்.

    அதன்படி இன்று கார்த்தினை முதல் தேதி என்பதால் கும்பகோணம் யானையடி அய்யனார் கோயிலில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

    திருவிடைமருதூர் தாலுக்கா மணலூர் அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.

    மண்டல விரதத்தை தொடங்குவதற்காக குருசாமியின் முன்னிலையில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து தங்களது விரதத்தை தொடங்கினர்.

    சுவாமிமலையில் அய்யப்ப பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி காவி மற்றும் கருப்பு வேஷ்டி அணிந்து நீண்ட வரிசையில் நின்று குருசாமி, குருக்கள் கைகளால் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர்.

    கும்பகோணம் திருவிடைமருதூர் தாலுகா பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சரணம் அய்யப்பா என்ற சரண கோஷம் முழங்க மாலை அணிந்து கொண்டனர்.

    ×