search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Welfare Assitance"

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மகளிர் தொண்டரணி திரேஸ்புரம் பகுதி 6-வது வட்ட தி.மு.க. சார்பில் பாக்கியநாதன் விளையில் சமத்துவ பொங்கல் நடைபெற்றது.
    • இன்றைய தலைமுறை மட்டுமின்றி அடுத்த தலைமுறைப்பற்றி சிந்தித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் பணியாற்றுகிறார். இவ்வாறு கனிமொழி எம்.பி,பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மகளிர் தொண்டரணி திரேஸ்புரம் பகுதி 6-வது வட்ட தி.மு.க. சார்பில் பாக்கியநாதன் விளையில் சமத்துவ பொங்கல் நடைபெற்றது.

    விழாவில் 15 பொங்க பாணை வைக்கப்பட்டு அதில் தி.மு.க. மாநில துணைப் பொதுச் செய லாளர் கனிமொழி எம்.பி., வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பொங்கலிட்டனர்.

    பின்னர் ஆயிரம் பெண்களுக்கு சேலை வழங்கி கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    பொங்கல் என்பது ஒவ்வொரு பகுதிகளிலும் மக்கள் கொண்டாடும் திருநாளாகும். இந்த திருவிழா என்பது ஒவ்வொரு தமிழர்களையும் ஒருங்கிணைக்கும் விழாவாக நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தி.மு.க. பொங்கலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கவர்னர் தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று சர்ச்சை கருத்து மூலம் நம்முடைய அடையாளம் கலாச்சாரம் போன்றவற்றில் மூக்கை நுழைப்பது தேவையற்றது. ஒற்றுமையாக தமிழர்கள் இருந்து வருகிறோம். இதுபோன்ற கலாச்சாரங் களை பேணி பாதுகாக்க அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டு சூழுரை யேற்போம்.

    தமிழன் அடையாளம், பெருமை, திறமை, வரலாறு இவற்றை பின்பற்றுவோம். இங்கு பொங்கலிடும் போது பெண்கள் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. அவர்கள் இமையை கசக்கி கொண்டு நின்றனர். இது போன்ற விறகு அடுப்பில் பெண்கள் சிரமப்படக்கூடாது என்று கியாஸ் அடுப்பு உங்களுக்கு எல்லாம் கலைஞர் கொடுத்தார். இன்றைய தலைமுறையை பற்றி கலைஞர் சிந்தித்து செயல்பட்டார். தற்போது இன்றைய தலைமுறை மட்டுமின்றி அடுத்த தலைமுறைப்பற்றி சிந்தித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் பணியாற்றுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

    கீதாஜீவன் பேசுகையில் தைபிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் அதுபோல் உங்களுடைய வாழ்வில் எல்லா செல்வங்களும், கிடைக்க பெற்று நலமுடன் அனைவரும் வாழ வேண்டும் என்று பேசினார்.

    விழாவில் சண்முகையா எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், பிரமிளா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் கஸ்தூரிதங்கம், உமா தேவி,பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, கவிதாதேவி, சேர்மபாண்டியன், உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பரதநாட்டியம், சிலம்பாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஆசிரி யர்கள் கவுரவிக்கப் பட்ட னர். திரேஸ்புரம் பகுதி துணைச்செயலாளர் சோலை யப்பன் நன்றி கூறினார்.

    ×