search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "were sent back to"

    • கேமிராவில் அந்த ஒற்றை காட்டு யானை கண்டறிய முடியவில்லை.
    • 2 கும்கி யானைகள் லாரிகளில் ஏற்றி திரும்ப முதுமலை தெப்பக்காடு முகாமிட்டு அனுப்பி வைத்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகேயுள்ள பெருமுகை ஊராட்சி அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒற்றை ஆண் காட்டு யானை வெளியேறிய வரப்பள்ளம் ஆற்றங்கரை யோர விவசாய தோட்ட பகுதியில் சுற்றி திரிந்தது.

    அப்போது அடசபாளை யம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் விவசாய கூலி வேலை செய்து கொண்டிருந்த துரை என்கிற சித்தேஷ்வரன் என்பவரை யானை மிதித்து கொன்றது.

    இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு அறிவுறுத்தலின் பேரில் அந்தியூர் வனச்சரகர் உத்திரசாமி மற்றும் டி.என்.பாளையம் வனச்சரகர் கணேஷ் பாண்டியன் தலைமையிலான வனத்து றையினர் அந்த ஒற்றை காட்டு யானையை பெரு முகை வனப்பகுதி க்குள் விரட்டி அனுப்பினர்.

    மீண்டும் அந்த காட்டு யானை ஊருக்குள் வந்து உயிர் சேதத்தை ஏற்படுத்தி விடுமோ என்று மக்கள் அச்சப்படுவதால் ஒற்றை காட்டு யானையை பிடித்து வேறு வனப்பகுதிக்குள் விடலாம் என்று வனத்துறையினர் முடிவு செய்தனர்.

    இதனையடுத்து முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பொம்மன், சீனிவாசன் என்ற 2 கும்கி யானைகளை கொண்டு வந்து பெருமுகை சஞ்சீவிராயன் கோவில் அருகேயுள்ள உரம்புகிணறு மாரியம்மன் கோவில் பகுதியில் வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் அடங்கிய முகாமில் கட்டி வைத்து உணவு கொடுத்து வந்தனர்.

    இதனையடுத்து பெருமு கை வனப்பகுதியில் ட்ரோன் கேமிரா மூலமாக அந்த ஒற்றை காட்டு யானையை கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த 5-ந் தேதி இரவு பெருமுகை ஊராட்சி சஞ்சீவிராயன் கோவில் அருகிலுள்ள உரம்புகிணறு மாரியம்மன் கோவில் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட முகாமிற்கு கொண்டு வரப்பட்ட 2 கும்கி யானைகள் 2 லாரிகளில் ஏற்றி திரும்ப முதுமலை தெப்பக்காடு முகாமிட்டு வனத்துறையினர் அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வனத்து றையினர் கூறியதாவது:-

    கேமிராபெருமுகை வனப்பகுதியில் கடந்த 6-ந் தேதி முதல் பல்வேறு இடங்களில் டிரோன் கேமிரா மூலமாக ஒற்றை காட்டு யானையை பகல், இரவாக முகாமிட்டு தேடி வந்தோம்.

    ஆனால் கேமிராவில் அந்த ஒற்றை காட்டு யானை கண்டறிய முடியவில்லை. கேமிராவில் தென்படாத வகையில் அந்த ஒற்றை காட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று இருக்கலாம்.

    இதனால் வரவழை க்கப்பட்ட பொம்மன் மற்றும் சீனிவாசன் ஆகிய 2 கும்கி யானைகள் திரும்ப முதுமலை முகாமிற்கு திருப்பி அனுப்பியதாக அந்தியூர் வனத்துறை வனச்சரகர் உத்திரசாமி தெரிவித்தனர்.

    கருப்பன் யானை தான் பெருமுகை வனப்பகுதிக்கு மற்றும் ஊருக்குள் வந்து விட்டதாகவும், அந்த யானை தான் சித்தேஷ்வரன் என்ப வரை தாக்கி கொன்ற தாகவும், சமூக வலை தளங்கள் மூலமாக பதிவிட்ட செய்தி மக்களிடத்தில் அச்ச த்தை ஏற்படுத்தி வந்தது.

    ஆனால் வனப்பகுதிக்குள் சென்ற அந்த ஒற்றை காட்டு யானை அடர்ந்த வனப்பகு திக்குள் சென்றதாக வனத்து றையினர் தெரிவித்ததை அடுத்து கருப்பன் என்ற வதந்திக்கு இது ஒரு முற்று புள்ளியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

    ×