search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "West Zone I.G."

    • ஈரோடு ஆனைக்கல் பாளையத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்திற்கு இன்று காலை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் வந்தார்.
    • பின்னர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று கோப்புகளை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோ சனையில் ஈடுபட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு ஆனைக்கல் பாளையத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்திற்கு இன்று காலை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் வந்தார். அங்கு போலீசாரின் உபகரணங்களை பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசாரின் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பார்வை யிட்டார். வாகனங்களின் தற்போதைய நிலை, அவற்றின் பராமரிப்பு முறை குறித்து கேட்டறிந்தார். போலீசாரின் வஜ்ரா வாகனங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் ஆயுதப்படை போலீசாரிடம் குறைகளை கேட்டு அறிந்து அவர்கள் கொடுத்த மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் பணியிடம் மாறுதல் குறித்தும் அதிகாரிகளுடன் பேசினார்.

    பின்னர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்று கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதனைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ஐ.ஜி. சுதாகர் வந்தார். அங்கு ரோந்து பணிக்காக புதிதாக வாங்கப்பட்டுள்ள 6 வாகனங்களை பார்வையிட்டார்.

    பின்னர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று கோப்புகளை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோ சனையில் ஈடுபட்டார்.

    இந்த ஆய்வின்போது ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், டி.எஸ்.பி. சேகர் உள்பட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • அமைச்சர் முத்துசாமி, மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பி–ரண்டு சசிமோகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
    • மேற்கு மண்டல சுதாகர் மற்றும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆய்வின்போது கோபி டி.எஸ்.பி. சியாமளாதேவி, இன்ஸ்பெக்டர்கள் வடிவேல்குமார், சண்முகவேலு உள்ளிட்டார் உடன் பிறந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.என். பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை மற்றும் கலைஞர் படிப்பகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ந் தேதி மாலை திறந்து வைக்கிறார்.

    இந்நிலையில் அமைச்சர் முத்துசாமி, மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். முதல்-அமைச்சர் கோவையில் இருந்து குன்னத்தூர், கெட்டிசெவியூர், கொளப்பலூர் வழியாக கோபியை வந்தடைந்து அதன்பின் நஞ்ச கவுண்டன் பாளையம் வழியாக பவானி ஆற்றை கடந்து கள்ளிப்பட்டி செல்லும் வரை உள்ள சாலை பாதுகாப்பு பணியை ஐ.ஜி. சுதாகர் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது முதல்-அமைச்சர் வரும் வழியில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள். சிலை திறப்பு நடைபெறும் இடத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள். பொதுமக்கள், கட்சியினர் வாகனங்களை நிறுத்தும் பகுதி. சிலை மற்றும் படிப்பகத்தை திறந்து வைத்த பின்பு முதல்-அமைச்சர் செல்லும் அத்தாணி, ஜம்பை வழியாக ஈரோடு செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு செய்தனர்.

    மேற்கு மண்டல சுதாகர் மற்றும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆய்வின்போது கோபி டி.எஸ்.பி. சியாமளாதேவி, இன்ஸ்பெக்டர்கள் வடிவேல்குமார், சண்முகவேலு உள்ளிட்டார் உடன் பிறந்தனர்.

    அதனைத் தொடர்ந்து 40 அடி உயரக் கொடி கம்பம் நிறுவும் பணியை அமைச்சர் முத்துசாமி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம், டி.என்.பாளையம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சிவபாலன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

    ×