என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "wetlands"
- ராம்சர் பட்டியலில் பள்ளிக்கரனை உள்ளிட்ட 3 இடங்கள் இடம் பிடித்தன.
- மிசோரம், மத்தியப்பிரதேச மாநிலங்களை சேர்ந்த இரண்டு இடங்கள் பட்டியலில் இடம் பெற்றன.
தமிழ்நாட்டில் கரிக்கிளி பறவைகள் சரணாலயம், பள்ளிக்கரனை சதுப்பு நிலக்காடு, பிச்சாவரம் சதுப்ப நிலக்காடு ஆகியவை உட்பட 3 இடங்களை, ராம்சர் எனப்படும் சர்வதேச அங்கீகார பட்டியலில் இந்தியா சார்பில் இடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதேபோல் மிசோரமில் பாலா சதுப்பு நிலம், மத்தியப்பிரதேசத்தில் சாக்கிய சாகர் சதுப் புநிலம் ஆகிய இரண்டு பகுதிகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் ராம்சர் அங்கீகார பட்டியலில் இடம் பெற்றுள்ள பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலங்களின் எண்ணிக்கை 49-லிருந்து 54-ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை மந்திரி பூபேந்தர் யாதவ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பிரதமர்நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள முன்முயற்சி சதுப்பு நிலங்களை இந்தியா எவ்வாறு பராமரித்து முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சர் அங்கீகார பட்டியலில் மேலும் 5 இந்திய சதுப்பு நிலங்கள் அறிவிக்கப்பட்டது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.