என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "What is the cause of"
- தனுஷ் சில பாடங்களில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் சில நாட்களாக மனவேதனையுடன் காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
- சம்பவத்தன்று தனுஷ் பேனில் தனது லுங்கியால் தூக்கு மாட்டி தொங்கி கொண்டிருந்தார்.
பெருந்துறை:
நீலகிரி மாவட்டம் இடுகட்டி தோட்டானி பகுதியை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகன் தனுஷ் (வயது 18). இவர் பெருந்துறை துடுப்பதி அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனுஷ் சில பாடங்களில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் சில நாட்களாக மனவேதனையுடன் காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று காலை தனது விடுதி அறை நண்பர்களுடன் சேர்ந்து கேண்டினில் காலை உணவு சாப்பிட்டுள்ளார். மற்ற மாணவர்கள் கல்லூரிக்கு செல்ல தனுஷ் மட்டும் தான் விடுதிக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார்.
இதனையடுத்து நீண்ட நேரம் ஆகியும் தனுஷ் வகுப்புக்கு வராததால் வகுப்பு ஆசிரியர் மூலம் போன் செய்து பார்த்துள்ளனர். பலமுறை போன் செய்தும் எடுக்காததால் விடுதி வார்டன் மகேந்திரகுமார் மற்றும் காவலாளியாக வீரமணி ஆகியோர் தனுசு அறைக்கு சென்று கதவை தட்டி பார்த்துள்ளனர். அங்கு தனுஷ் ரூம் உள்புறமாக தாழ் போடப்பட்டு இருந்தது.
உடனடியாக அவர்கள் ஜன்னல் கண்ணாடியை உடைத்து பார்த்தபோது, தனுஷ் பேனில் தனது லுங்கியால் தூக்கு மாட்டி தொங்கி கொண்டிருந்தார். உடனே அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று தனுஷை கீழே இறக்கி பார்த்துள்ளனர். அவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளார்.
உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது தொடர்பாக அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துவிட்டு பெருந்துறை போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.