search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wheeling"

    • ஏராளமான இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது.
    • காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையை நெட்டிசன்கள் பாராட்டு வருகின்றனர்.

    கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த 44 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பெங்களூருவில் உள்ள பரபரப்பான சாலையில் 44 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    இதனையடுத்து பெங்களூரு போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய சாலையில் பைக்கில் ஸ்டண்ட் செய்து கொண்டிருந்த 44 பேரை கைது செய்தனர். இவர்களின் மீது 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் ‘வீலிங்’ செய்து செல்போனில் படம் எடுத்த 10 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
    • 5 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வீடியோ காமிரா பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து விதிமுறைகளில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.

    வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஜெக நாதன் ஆலோசனையின் பேரில் தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தல்லாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை நடத்தினர்.

    சொக்கிகுளம், வல்லபாய் மெயின் ரோட்டில் வாலிபர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்தும், அதிவேகமாக வாகனங்களை இயக்கியும், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    அவர்களை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் 5 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வீடியோ காமிரா பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் மேற்கண்ட 10 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் சிந்தாமணி ஆசிரியர் தெருவை சேர்ந்த பிச்சைபாண்டி மகன் மதன் (21), அவரது சகோதரர் கார்த்திக் (20), பழனிகுமார் மகன் தினேஷ்குமார் (24), இளங்கோவன் மகன் செல்லப்பாண்டி (22), உசிலம்பட்டி ஆனந்தா நகர் சுரேஷ் (26), அனுப்பானடி, கணேஷ் நகர் செல்வராஜ் மகன் ஹேமபிரபு(24), மதுரை ஆழ்வார்புரம் வைகை வடகரை சாகுல் ஹமீது மகன் முகம்மது இம்ரான் (19), நாகூர் கனி மகன் முகமது ஆசிக் (19), மாத்மா காந்தி நகர் கண்ணன் மகன் லோகேஸ்வரன் (19) கிருஷ்ணாபுரம் காலனி நயினார்ராஜ் மகன் ரமணா (19) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    ×