என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "who threatened to bomb the"
- சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று ஒரு போன் அழைப்பு வந்தது.
- ஈரோடு பஸ் நிலையம், மணிக்கூண்டு, ரெயில் நிலையம் ஆகிய 3 இடங்களில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
ஈரோடு:
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று ஒரு போன் அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர் ஈரோடு பஸ் நிலையம், மணிக்கூண்டு, ரெயில் நிலையம் ஆகிய 3 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், இந்த 3 இடங்களிலும் இன்னும் சில நேரத்தில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இது குறித்து சென்னை போலீசார் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு போலீசாரை உஷார்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து போலீசார் ஈரோடு பஸ் நிலையம், மணிக்கூண்டு ஆகிய பகுதிகளில் மோப்பநாய் உதவியுடன் ஒவ்வொரு இடமாக அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டனர். நேற்று இரவு 8 மணி அளவில் ஈரோடு பஸ் நிலையத்திற்குள் 30-க்கும் மேற்பட்ட போலீசார் மோப்ப நாயுடன் ஒவ்வொரு இடமாக சோதனையில் ஈடுபட்டனர்.
இதனால் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் பதட்டம் அடைந்தனர். பஸ் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு ரேக்காக சென்று போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர்.
பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைகளிலும் சோதனையிட்டனர். சுமார் 2 மணி நேரமாக பஸ் நிலை யத்தில் சோதனையிட்டனர்.
இதேப்போல் மணிக்கூண்டு பகுதிக்கும் நேற்று இரவு மற்றொரு போலீஸ் பிரிவினர் சென்று சோதனையில் ஈடுபட்டனர். பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு பகுதி வரை சாலையின் இருபுற மும் போலீசார் ஒவ்வொரு இடமாக மெட்டல் டிடெக்டர் கருவிகள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
இதேபோல் டவுன் டி.எஸ்பி. ஆனந்தகுமார் தலைமையான போலீசார் ரெயில் நிலையத்திற்கு சென்று அதிரடி சோதனை ஈடுபட்டனர். இரவு 8 மணிக்கு ரெயில் நிலையத்திற்குள் சென்று சோதனையில் ஈடுபட தொடங்கினார்.
ரெயில் நிலைய நுழை வாயில் பகுதி, பயணிகள் உடமைகள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடைமேடை பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனையிட்டனர். மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு பணிகள் உடமைகள் சோதனை செய்யப்பட்டன.
மேலும் ஈரோடு வழியாக சென்ற அனைத்து ெரயில்களிலும் ஒவ்வொரு பெட்டியாக சென்று போலீசார் பயணிகள் உடைமைகளை சோதனை யிட்டனர். இரவு 11 மணி வரை கிட்டத்தட்ட 3 மணி நேரமாக ரெயில் நிலையம் முழுவதும் போலீசார் சோதனை செய்ததில் வெடி குண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது.
இதனையடுத்தே போலீசார் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை மே ற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே இதே போல் 2 முறை ஈரோடு பஸ் நிலையம், மணிக்கூண்டு, ெரயில் நிலையம் பகுதிக்கு வெடிகுண்டல் மிரட்டல் விடுத்த சம்பவம் நடந்து ள்ளது. மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒரு வாலிபர் சிறையில் 3 வேளையும் சாப்பாடு நல்லா கிடைக்கும் என்பதால் இது போன்ற மிரட்டல் விடு த்தேன் என்று கூறியிருந்தார்.
அந்த நபர்தான் இந்த முறையும் மிரட்டல் விடுத்திருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரபடுத்தி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்