search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife suicide attempt"

    கோவையில் தொழிலாளியை கட்டையால் அடித்து கொலை செய்த மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குனியமுத்தூர்:

    கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம் பாலமுருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாபுராஜ் (வயது 37). தச்சுதொழிலாளி. இவரது மனைவி பாக்கியம் (34). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் பாபுராஜூக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பி.கே. புதூரை சேர்ந்த ஒருபெண்ணும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் பாபுராஜ் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து கள்ளக்காதலியுடன் வசித்து வந்தார்.

    நேற்று இரவு பாக்கியம் குழந்தைகளுடன் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார். நள்ளிரவு 12 மணியளவில் பாபுராஜ் குடிபோதையில் பாக்கியத்தின் வீட்டுக்கு வந்தார். அவரை இங்கு வரக்கூடாது கள்ளக்காதலி வீட்டுக்கே செல்லுங்கள் என பாக்கியம் கூறினார்.

    இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாபுராஜ் பீர் பாட்டிலை உடைத்து பாக்கியத்தை குத்த முயன்றார். இதனை பார்த்த அவர் அங்கு கிடந்த கட்டையால் கணவனின் தலையில் அடித்தார். இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

    கணவரை கொலை செய்து விட்டோமே என்ற பயத்தில் பாக்கியம் தானும் தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டில் இருந்து கொசு விரட்டி மருந்து, மாத்திரை மற்றும் பினாயில் ஆகியவற்றை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.

    அதிகாலை 4 மணியளவில் தாயை தேடி வெளியே வந்த இவர்களது மூத்த மகள் தாய் தந்தை மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். பின்னர் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாபுராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள பாக்கியத்துக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்.

    இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சென்னை - சேலம் பசுமை வழிச்சாலைக்கு நிலம் அளவிடும் பணி நடந்து வருகிறது. நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்து மாற்றுத்திறனாளி மனைவியுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    சென்னை - சேலம் பசுமை வழிச்சாலைக்கு நிலம் அளவிடும் பணி நடந்து வருகிறது. இன்று தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மஞ்சவாடி ஊராட்சி பகுதியில் வருவாய்த்துறையினர் போலீசாரின் பாதுகாப்புடன் இன்று நிலத்தை அளக்க சென்றனர்.

    அப்போது அதே ஊரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியும், விவசாயியுமான கார்த்திக் (வயது 35), அவரது மனைவி பாலாமணி, தாயார் ஜோதி மற்றும் 2 குழந்தைகளுடன் நின்று கொண்டு அதிகாரிகளுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினார். தனது நிலத்தை அளந்தால் தீக்குளித்து விடுவேன் என்று மிரட்டினார்.

    அவரது கையில் மண்எண்ணை கேன் இருந்ததால் அதிகாரிகள் நிலத்தை அளக்கவில்லை. திடீரென்று அவரும் அவரது மனைவியும் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனே வருவாய்த்துறை ஊழியர்களும், போலீசாரும் அவர்களது உடலை தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர்.

    பின்னர் அவர்களுக்கு வேறு துணிகளை கொடுத்து அணியவைத்தனர்.

    தீக்குளிக்க முயன்ற மாற்றுத் திறனாளி விவசாயி கார்த்திக் கூறியதாவது:-

    நான் சொந்தமாக கரும்பு தோட்டம் வைத்துள்ளேன். தோட்டத்திலேயே ரூ. 15 லட்சத்துக்கு வீடு கட்டி உள்ளேன். இன்னும் கிரகப்பிரவேசம் கூட நடத்த வில்லை. அதற்குள் எனது வீடும் கரும்பு தோட்டமும் பசுமை வழி சாலைக்காக இடிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

    இந்த தோட்டத்தை வைத்து தான் பிழைப்பு நடத்தி வந்தேன். இதுவும் போய்விட்டால் நான் என்ன செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×