search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wild buffaloes"

    • பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
    • பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. கோத்தகிரி காம்பாய்க்கடை குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக 20-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக பகல் நேரங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக உலா வருகிறது. இரவு நேரங்களிலும் அந்த காட்டெருமைகள் சுற்றி வருவதால் சாலையில் வாகனயொட்டிகள் செல்ல முடிவது இல்லை. பின்னர் முகாமிட்டு இருந்த காட்டெருமை கூட்டம் அங்கிருந்த தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. எனவே வனத்துறையினர் காட்டெருமைகள் ஊருக்குள் வராதவாறு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கொடைக்கானல் சீனிவாசபுரத்தில் உலா வந்த காட்டெருமைகளால் பொது மக்கள் அலறியடித்து ஓடினார்கள்
    • வனத்துறையிடம் தெரிவித்தும் நீண்ட நேரம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் நகர்ப்பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து வனவிலங்கு களின் நடமாட்டம் அதி கரித்து வருகிறது. வன விலங்கு களின் நடமாட்ட த்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு ள்ளது.

    இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டெ ருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளால் விவசாய நிலங்களும் தொடர்ந்து பாழ்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கொடைக்கானல் சீனிவாசபுரம் பகுதியில் காட்டெருமை கூட்டமாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் அலறி ஓட்டம் பிடித்தனர்.

    மேலும் வனத்துறையிடம் தெரிவித்தும் நீண்ட நேரம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். எனவே காட்டெ ருமை கூட்டத்தை கண்காணித்து வனப்பகுதி க்குள் விரட்ட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    • கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டெருமைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதும், நகர்பகுதிக்குள் உலா வருவதும் வாடிக்கையாக உள்ளது.
    • சாலையில் காட்டெருமை உலா வந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டெருமைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதும், நகர்பகுதிக்குள் உலா வருவதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் முக்கிய நகர்ப்பகுதிகளில் ஒன்றான ஏரிச்சாலை சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் நிறைந்து எப்போதும் பரபரப்பாக காணப்படும் ப‌குதியாகும்.

    இந்நிலையில் ஏரிச்சாலையில் ஒற்றைக்காட்டெருமை திடீரென உலா வந்தது. இதனைப்பார்த்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனர். மேலும் சாலையில் காட்டெருமை உலா வந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

    இதனை வனத்துறை கூடுதல் கவனம் செலுத்தி பெரும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் நகர்ப்பகுதி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அடிக்க‌டி உலா வரும் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×