என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Wild Flood"
- லட்சுமணனுக்கு சொந்தமான 17 கரிமூட்டம் குவியல், உபகரணங்கள், சமையல் பாத்திரங்கள் உட்பட அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
- வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்த லட்சுமணன் - குட்டியம்மாள் தம்பதியினருக்கு ஆறுதல் கூறி, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் நிதி உதவியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.,வழங்கினார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள கே.துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (வயது 57) மற்றும் அவரது மனைவி குட்டியம்மாள் இருவரும் சேர்ந்து அதே கிராமத்தில் பல ஆண்டுகளாக கரிமூட்டம் தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நகைகளை அடகு வைத்து, பணத்தை வட்டிக்கு வாங்கி அதிக முதலீடு செய்து விறகுகள், தூர் கட்டைகளை வாங்கி கடந்த சில மாதங்களாக கரிமூட்டம் அமைத்ததில், அவற்றையெல்லாம் விற்பனை செய்யவிருக்கும் நேரத்தில் நேற்று முன்தினம் அப்பகுதியில் பெய்த கனமழை காரண மாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் லட்சுமணனுக்குச் சொந்தமான 17 கரிமூட்டம் குவியல், உபகரணங்கள், சமையல் பாத்திரங்கள் உட்பட அனைத்தும் வெள்ளத் தில் அடித்து செல்லப் பட்டது.
இதனால் ரூ.55 லட்சம் மதிப்புள்ள கரிகளை இழந்துவிட்டோமே என்று என்னசெய்வதென்று தெரியாமல் லட்சுமணனும், அவரது மனைவி குட்டியம்மாளும் கண்ணீர் விட்டு கதறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து தகவல் அறிந்த மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. உடனடியாக தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் என அரசு அதிகாரிகளுடன் சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, வாழ்வாதா ரத்தை இழந்து தவித்து வந்த லட்சுமணன் - குட்டியம்மாள் தம்பதியினருக்கு ஆறுதல் கூறி, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கி., தமிழக அரசிடமிருந்து நிதி உதவி பெற்றுத்தர உதவி செய்வதாக உறுதி அளித்தார். இதுகுறித்து நஷ்டத்தை சந்தித்த தம்பதியினர் கூறுகையில்:-
இது போன்ற வெள்ளம் இதுவரை வந்ததே இல்லை. நேற்று முன்தினம் வந்த வெள்ளத்தால் நல்ல விலைக்குப் போகவிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான கரிக்கட்டைகள் முற்றிலும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு நாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். இதிலிருந்து மீண்டு வர தமிழக அரசு தான் தங்களுக்கு உதவ வேண்டும் என கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்