search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wind power generation"

    பருவக்காற்று வீசத்தொடங்கியிருப்பதால் காற்றாலை மூலம் சராசரியாக 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
    சென்னை:

    தமிழகத்தில் பருவக்காற்று வீசிவருவதால் காற்றலை மின்உற்பத்தி தொடங்கி உள்ளது. இதனால் அனைத்து பகுதிகளுக்கும் தடையற்ற மின்சாரம் வினியோகம் செய்யவும் மின்சார வாரியம் திட்டமிட்டு உள்ளது. அனல் மின் உற்பத்தியை சற்று குறைத்துக்கொண்டு, காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சூரியசக்தி மூலமும் சராசரியாக ஒரு நாளைக்கு 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    காற்றாலைகளின் மின் உற்பத்தி காரணமாக மின்தேவை முழுமையாக பூர்த்தியாகியுள்ளது. தேவைக்கு அதிகமாக உள்ள உபரி மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்கு விற்பதற்கும் மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்து இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் டாக்டர் கே.கஸ்தூரி ரெங்கையன் கூறியதாவது:-

    காற்றாலை மின்உற்பத்தி நடப்பாண்டில் இந்த மாத தொடக்கத்திலேயே தொடங்கி படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது 3 ஆயிரம் மெகாவாட் வரை உற்பத்தியாகிறது.

    அகில இந்திய அளவில் அனைத்து வகை மின்சார உற்பத்தி கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.3.80 என்பது ரூ.3.10 ஆக குறைந்துவிட்டது. இதற்கு காற்றாலை உள்ளிட்ட அனைத்து வகை மின்உற்பத்தியும் அதிகரித்திருப்பது தான் காரணமாகும்.

    2 ஆண்டுகளுக்கு முன்பு வரை காற்றாலை மின்சாரம் ஆண்டுக்கு 12,500 மில்லியன் யூனிட் வரை உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு இது 11 ஆயிரம் மில்லியன் யூனிட்டாக குறைந்தது. நடப்பாண்டு இம்மாத தொடக்கத்திலேயே உற்பத்தி தொடங்கிவிட்டதால் 12 ஆயிரம் மில்லியன் யூனிட் என்ற அளவை தாண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

    தற்போது மாலை நேரத்தில் தான் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. வருகிற நாட்களில் காற்றின் வேகம் இன்னும் அதிகரிக்கும். அனைத்து காற்றாலைகளும் முழுமையாக இயங்கினால் மின் உற்பத்தி சிறப்பாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தேசிய அளவில் காற்றாலை மின்சார உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் இருந்துவருகிறது. நெல்லை, கன்னியாகுமரி, பல்லடம், உடுமலை, கயத்தாறு மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளில் 8,152 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட 11,800 காற்றாலைகள் இயங்கி வருகின்றன.

    காற்றாலை மின் உற்பத்தி மே மாத இறுதியில் தொடங்கி அக்டோபர் மாதம் முதல் வாரம் வரை இருக்கும். பொதுவாக காற்றாலைகள் மூலம் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். காற்றாலை மின் உற்பத்தி முழு அளவை எட்டும்போது அனல் மின்நிலையங்களை பராமரிப்பு பணிக்காக சுழற்சி முறையில் நிறுத்தவும் திட்டமிட்டு உள்ளோம்.

    தற்போது பகலில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருப்பதால் சூரியசக்தி மூலம் சராசரியாக 2 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் தமிழகத்தில் எங்கும் மின்தடை இல்லை. உபரி மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசும் காலங்களில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும். அதன்படி காற்றாலைகள் மூலம் மட்டும் 3660 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தோவாளை, ஆரல்வாய்மொழி, செண்பகராமன் புதூர் பகுதிகளில் ஏராள மான காற்றாலைகள் உள்ளன. தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசும் காலங்களில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும். அதன்படி ஜூன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் ஜூன் மாதம் ஆரம்பம் முதலே காற்றாலைகள் இயங்கத் தொடங்கின.

    ஒரு காற்றாலையில் 500 முதல் 1000 யூனிட் அளவுக்கு மின் உற்பத்தி இருக்கும். இது காற்றின் வேகம் அதிகரிக்கும் போது இன்னும் அதிகமாக மின் உற்பத்தி செய்யப்படும். அதன்படி தற்போது காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் ஒரு நாளைக்கு சராசரியாக 4 ஆயிரம் யூனிட் அளவுக்கு மின் உற்பத்தி நடந்து வருகிறது. தமிழகத்தில் நெல்லை, குமரி, தூத்துக்குடி மட்டும் இன்றி கோவை மாவட்டங்களிலும் காற்றாலை மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது காற்றாலைகள் மூலம் மட்டும் 3660 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களில் காற்றாலை மின் உற்பத்தி குறைவாகவே நடந்து வருகிறது. ஆந்திராவில் தற்போது 2814 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. கர்நாடகாவில் 2222 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. கேரளாவில் காற்றாலைகள் மூலம் 34 மெகாவாட் அளவிற்கே மின் உற்பத்தி நடக்கிறது. தமிழகத்தில் மட்டும் தான் அதிகபட்ச மின் உற்பத்தி காற்றாலைகள் மூலம் கிடைக்கிறது.
    தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்திருப்பதால் அனல் மின்நிலையங்களில் உற்பத்தி குறைக்கப்பட்டு உள்ளது.
    சென்னை:

    இந்திய அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, பல்லடம், உடுமலை, தேனி உள்ளிட்ட இடங்களில் 8,152 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 11,800 காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன. காற்றாலை மின் உற்பத்தி ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இருக்கும்.

    ஆனால் இந்த ஆண்டு காற்றாலை மின் உற்பத்தி கடந்த மாதம் 15-ந் தேதியே தொடங்கிவிட்டது. தற்போது காற்றாலைகள் மூலம் படிப்படியாக மின்சார உற்பத்தி அதிகரித்து வருகிறது.

    இதுகுறித்து எரிசக்தி துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    காற்றலை மின்உற்பத்தி அதிகரித்து இருப்பதால் தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் தடையற்ற மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. அனல் மின் உற்பத்தியை சற்று குறைத்துக்கொண்டு, காற்றாலை மின்சாரம் முழுஅளவில் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், சூரியசக்தி மூலம் மின் உற்பத்தியும் சராசரியாக ஒரு நாளைக்கு 1,500 மெகாவாட் வரை நடந்துவருகிறது.

    காற்றாலைகளின் அதிகமான மின் உற்பத்தி காரணமாக தமிழகத்தின் மின்தேவை முழுமையாக பூர்த்தியாகியுள்ளது. தேவைக்கு அதிகமாக உள்ள உபரி மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்கு விற்பதற்கும் மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

    இதுகுறித்து அகில இந்திய காற்றாலை சங்க தலைவர் கஸ்தூரி ரெங்கையன் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த ஆண்டு காற்று சீசன் காலங்களில் மொத்த மின்சார உற்பத்தியில் 12 சதவீதம் (1,300 கோடி யூனிட்) காற்றாலை மூலம் வினியோகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டில் கடந்த ஒரு வாரமாக காற்றாலை மின்சார உற்பத்தி அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் காற்றாலை மூலம் 6.5 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

    கடந்த வாரம் ஒரே நாளில் 8.5 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. சராசரியாக ஒரு நாளைக்கு காற்றாலை மூலம் 2,500 முதல் 3 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டைவிட கூடுதலாக காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ×