search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Winner of the Asian Champion Title"

    • போட்டிகள் நேற்று தொடங்கி 5 தினங்கள் 9 சுற்றுகளாக நடைபெறுகிறது.
    • முதலிடம் பெறுகின்றவர்கள் தேசிய போட்டிக்கு தமிழகத்தின் சார்பில் தேர்வு செய்து அனுப்பப்பட உள்ளனர்.

    திருவாரூர்:

    தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் மற்றும் மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து நடத்துகின்ற 52 வது தமிழ்நாடு மாநில அளவிலான மகளிர் சதுரங்க போட்டிகள் திருவாரூர் ராசம்மாள் திருமண அரங்கில் நேற்று (26.4.23) தொடங்கியது.

    போட்டிகளில் ஆறு முறை மாநில சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற சென்னையைச் சேர்ந்த ஜெ .சரண்யா, ஏசியன் சாம்பியன் பட்டம் வென்ற அரியலூர் மாவட்டத்தை சார்ந்த மாவட்டத்தை சேர்ந்த சர்வாணிக்கா, காமன்வெல்த் வெங்கலப் பதக்கம் வென்ற செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த பிரியதர்ஷினி உள்ளிட்ட 24 மாவட்டங்களைச் சார்ந்த 121 பேர் கலந்து கொண்டு விளையாடு கின்றனர்.

    போட்டிகள் நேற்று தொடங்கி 5 தினங்கள் 9 சுற்றுகளாக நடைபெறுகிறது.

    போட்டிகளில் முதலிடம் பெறுகின்றவர்கள் நான்கு பேர் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள தேசிய போட்டிக்கு தமிழகத்தின் சார்பில் தேர்வு செய்து அனுப்பப்பட உள்ளனர்.

    இந்த போட்டிகளின் தொடக்க. விழா திருவாரூர் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் தலைவர் எஸ் வி.டி.ஜெ.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது.

    தமிழ்நாடு சதுரங்க கழக இணைச் செயலாளர் ஆர்.கே.பால குணசேகரன் அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் நாராயணி நிதி லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் கார்த்திகேயன், திருவாரூர் டாக்டர் பி.செந்தில், திருவாரூர் மாவட்ட சதுரங்க கழக தலைவர் என்.சாந்தகுமார், திருவாரூர் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் ராஜா, திருவாரூர் நகர்மன்ற உறுப்பினர் கலியபெருமாள், சதுரங்க கழக மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போட்டிகளை முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ தொடக்கி வைத்தார்.

    முடிவில் திருவாரூர் மாவட்ட சதுரங்க கழகத்தின் துணைத் தலைவர் என்.முரளிதரன் நன்றிகூறினார்.

    ×