என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "woman dies"
- நிலை தடுமாறிய அப்பெண் ஜிம் கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.
- தலையில் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தோனேசியாவில் 22 வயது இளம்பெண் ஒருவர் டிரெட்மில்லில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தனில் உள்ள போண்டியானக்கில் உள்ள ஜிம் ஒன்றில் 22 வயது இளம்பெண் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். அப்போது, டிரெட்மில்லில் ஓடிக்கொண்டு இருந்த சமயத்தில் அப்பெண் நிலை தடுமாறி பின்னாடி உள்ள ஜன்னலை நோக்கி மெதுவாக நகர்கிறார்.
ஜன்னலை திறந்த நிலையில் இருந்ததால் கீழே விழுவதற்கு முன்பு ஜன்னலை பிடிக்க முயன்றபோதிலும், நிலை தடுமாறிய அப்பெண் ஜிம் கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த அப்பெண் தனது சகோதரர் மற்றும் காதலனுடன் ஜிம்மிற்குச் சென்றிருந்தார் என்றும் காதலன் இரண்டாவது மாடியில் அவருடன் உடற்பயிற்சி செய்ய சொன்னதாகவும் ஆனால், அந்த பெண் மேல் மாடியில் உள்ள டிரெட்மில்லைப் பயன்படுத்த விரும்புவதாகக் கூறி சென்ற நிலையில், பரிதாபமாக கீழே விழுந்து உயிரிழந்தார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இச்சம்பவம் கடந்த 18-ந்தேதி நடந்ததாக கூறப்படுகிறது.
- ஓட்டலில் மீன் பிரியாணியை பார்சல் வாங்கி வீட்டுக்கு கொண்டு சென்று சாப்பிட்டனர்.
- மீன் பிரியாணி சாப்பிட்டதால் பெண் இறந்ததாக உறவினர்கள் டாக்டர்களிடம் தெரிவித்தனர்.
திருச்சூர்:
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் அருகே பெரிஞ்சனம் ஊராட்சி பகுதியில் ஓட்டல் உள்ளது. இங்கு கடந்த 25-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த சிலர் மீன் பிரியாணி சாப்பிட்டனர். மேலும் ஓட்டலில் மீன் பிரியாணியை பார்சல் வாங்கி வீட்டுக்கு கொண்டு சென்று சாப்பிட்டனர். ஆனால் அந்த ஓட்டலில் மீன் பிரியாணி சாப்பிட்ட 178 பேருக்கு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
அவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஓட்டலுக்கு சென்று உணவு மாதிரியை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பினர். மேலும் அந்த ஓட்டலை மூடி 'சீல்' வைத்தனர்.
பெரிஞ்சனம் அருகே குற்றியக்கடவு பகுதியை சேர்ந்த நுசைபா (வயது 56) என்பவரும் அதே ஓட்டலில் 25-ந்தேதி மீன் பிரியாணி பார்சல் வாங்கி வந்து வீட்டில் சாப்பிட்டு உள்ளார். மறுநாள் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
மீன் பிரியாணி சாப்பிட்டதால் பெண் இறந்ததாக உறவினர்கள் டாக்டர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் உடலை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து திருச்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- துணி துவைக்க சென்றபோது பரிதாபம்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
ஆரணி:
ஆரணி அருகே இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த கபூர், டீக்கடையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷர்மிளா (வயது 45). இவர் வீட்டின் எதிரே உள்ள இரும்பேடு பெரிய ஏரியில் துணி துவைக்க சென்றார். அப்போது ஏரியில் இறங்கியபோது தவறி உள்ளே விழுந்தார்.
அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கிவிட்டார். பின்னர் ஆரணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி ஷர்மிளாவை பிணமாக மீட்டனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஷர்மிளாவின் உடல் ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்று கொண்டு இருந்தனர்.
- கார் எதிர்பாராத விதமாக பாலத்தில் மோதி கார் கவிழ்ந்தது.
பேராவூரணி:
மதுரை பழைய குயவர் பாளையம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராஜன் (வயது 50), இவரது மனைவி சகாயராணி (45), மகன் ஜெரோம் (15), மாமியார் சூசைமேரி(65) ஆகியோருடன் வேளாங்கண்ணி சென்று பேராலயத்தில் சாமி கும்பிட்டு விட்டு திரும்பி மதுரைக்கு செல்வதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்று கொண்டு இருந்தார்.
காரை அந்தோணி ராஜன் ஓட்டினார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் பிள்ளையார்திடல் சோதனை சாவடி அருகே சென்ற போது கார் எதிர்பாராத விதமாக பாலத்தில் மோதி கார் கவிழ்ந்தது.
இதில் காரில் பயணம் செய்த 4 பேரும் காயம் அடைந்தனர்.
பலத்த காயமடைந்த சூசைமேரி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாம்பு கடித்து பெண் இறந்தார்.
- இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
சாத்தூர் அருகே உள்ள எம்.மேட்டுப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் வசந்தா (64). இவர் அங்குள்ள வயக்காட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்தது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- இருசக்கர வாகனம் மீது வேன் எதிர்பாராத விதமாக மோதியது.
- பூங்கொடி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
டி.என்.பாளையம்:
கோபி அருகே உள்ள கூகலூர் கிரீன் நகரை சேர்ந்தவர் மணி (வயது 55). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (50).
இன்று காலை மணி தனது மனைவியுடன் டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூருக்கு வேலைக்காக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார். பூங்கொடி இரு சக்கர வாகனத்தின் பின் பகுதியில் அமர்ந்து வந்தார்.
இதை தொடர்ந்து அவர்கள் டி.என்.பாளையம் கொன்னகொடிக்கால் என்ற பகுதியில் சென்றனர். அப்போது அங்கு ஒரு தனியார் நிறுவனத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் பின்னால் சென்றது.
அந்த வேனை கூகலூர் அருகே உள்ள தாழைக்கொம்புதூர் கொன்னமடையை சேர்ந்த இளையகுமார் (30) ஓட்டினார். திடீரென மணி மற்றும் அவரது மனைவி பூங்கொடி சென்று கொண்டு இருந்த இருசக்கர வாகனம் மீது வேன் எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மணியின் மனைவி பூங்கொடி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் தூக்கி வீசப்பட்ட மணி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். காயம் அடைந்த மணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்பு லன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
டி.என்.பாளையம் அருகே இன்று காலை கணவர் கண் முன்னே மனைவி விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- விவசாய நிலத்தில் காவலுக்காக சென்றபோது பரிதாபம்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தை சேர்ந்த வர் சதீஷ்குமார், கட்டிட சென்ட்ரிங் தொழிலாளி. மனைவி ஜானகி (வயது 31).
இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர் பேரணாம்பட்டு அருகே சொலப்பல்லி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென் றார். இரவு தாய்க்கு சொந்தமான விவசாய நிலத்தில் காவலுக்காக சென்றிருந்தார்.
அப்போது ஜானகியை கண்ணாடி விரியன் விஷ பாம்பு கடித்தது. அவர், பாம்பை பார்த்ததும் அதிர்ச்சியில் கதறினார். சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனி யார் மருத்துவமனையில் நேற்று அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ஜானகி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெந்நீர் போடுவதற்காக அடுப்பு பற்ற வைத்தபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆரணி:
களம்பூர் அருகே கீழ்ப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன், தச்சு தொழிலாளி. இவரது மனைவி லதா (வயது 46) இவர்க ளுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். லதா திருமலை கிராமத்தில் உள்ள பள்ளியில் குழந்தைகளை பராமரிக்கும் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி வெந்நீர் போடுவதற்காக அடுப்பு பற்ற வைத்தார். அப்போது அடுப்பு சரியாக எரியவில்லை என எண்ணெய் ஊற்றியபோது லதா அணிந்திருந்த சேலையில் தீப்பிடித்தது.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைத்து, அவரை சிகிச் சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- குக்கர் வெடித்த சத்தம் கேட்டு ஓடியபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஐயனேரி மேடுவை சேர்ந்தவர் சரவணன். கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி செல்வி (வயது 40). இவர் நேற்று கியாஸ் அடுப்பில் குக்கர் மூலம் சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென குக்கர் வெடித்தது. இதனால் அலறி அடித்துக் கொண்டு செல்வி வெளியே ஓடினார். இதில் கால் தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக செல்வி இறந்தார்.
இது குறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சரக்கு வேன் சரஸ்வதி மீது மோதியது.
- டாக்டர் வரும் வழியிலேயே சரஸ்வதி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
சென்னிமலை:
சென்னிமலையில் உள்ள ஈங்கூர் ரோடு டி.எம்.எம்.புரத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சரஸ்வதி (வயது 65). இவர் சம்பவத்தன்று இரவு சுமார் 8 மணி அளவில் ஈங்கூர் ரோட்டில் உள்ள மாரியப்பா நகர் ஆஞ்சநேயர் கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பெருந்துறை சிப்காட்டில் இருந்து கால்நடை தீவனங்களை ஏற்றிக்கொண்டு ஒட்டன்சத்திரத்திற்கு சென்று கொண்டிருந்த ஒரு சரக்கு வேன் சரஸ்வதி மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த சரஸ்வதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே சரஸ்வதி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்
- போலீசார் விசாரணை
கலவை,
ஆற்காடு அருகே தாழனூர் இந்திராநகரை சேர்ந்தவர் வெங்கடேசன் கட்டிடமேஸ்திரி. இவரது மனைவி மகேஸ்வரி(வயது 39).கண்பார்வை குறைபாடு உடையவர் என கூறப்படுகிறது.
வீட்டின் அருகே உள்ள தொட்டியில் தண்ணீர் எடுக்க மகேஸ்வரி சென்றார்.
அப்போது கால் தவறி தொட்டியில் விழுந்தார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மகேஸ்வரி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடையை விரித்தபோது பரிதாபம்
- சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி (வயது 50), தொழிலாளி.
இவரது மனைவி சுகுணா (45). வீரமணி மற்றும் சுகுணா ஆகியோர் நேற்று பைக்கில் வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்றனர். பைக் வீரமணி ஓட்ட, சுகுணா பின்புறத்தில் உட்கார்ந்து சென்றார்.
பொன்னேரி அருகே சென்ற போது லேசான தூரல் மழை பெய்தது. அப்போது சுகுணா, கையில் வைத்திருந்த குடையை விரித்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.
அவரை வீரமணி மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சுகுணா சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்