search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman engineer"

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மேல்வில்வராயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பெண் என்ஜினீயர் ராஜினாமா செய்துள்ளார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மேல்வில்வராயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக என்ஜினீயரிங் பட்டதாரி நிலவழகி பொய்யாமொழி வெற்றி பெற்று பணியில் இருந்து வந்தார்.

    தற்போது சென்னையில் அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் அவருக்கு வேலை கிடைத்தது. இதனால் தனது ஊராட்சி மன்ற தலைவர் பதவியை நிலவழகி பொய்யாமொழி ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை கலசப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜுலுவிடம் வழங்கினார்.

    எனது பணியை கிராம மக்களுக்கு செவ்வனே செய்து வந்தேன். இருப்பினும் நான் என்ஜீனியரிங் படித்து உள்ளதால் எனக்கு சென்னையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணி கிடைத்துள்ளது.

    எனவே எனது பஞ்சாயத்து தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். நான் மக்கள் சேவை பணியை செய்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    தற்போது சூழ்நிலை காரணமாக எனது பதவியை ராஜினாமா செய்வது மிகவும் வருத்தமாக உள்ளதாக என்றார். அப்போது ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் உடனிருந்தனர்.
    காதல் திருமணத்தை பெற்றோர் ஏற்காததால் பெண் என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #WomanSuicide
    போரூர்:

    மதுரவாயல் ராஜீவ் காந்தி நகர் 2-வது மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் பிரகாஷ் என்கிற ஞான பிரகாஷ் மெக்கானிக்கல் என்ஜினீயர்.

    இவரது மனைவி காயத்ரி (25) ஒரகடத்தில் என்பீல்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஞானபிரகாஷ் மற்றும் காயத்ரி இருவரும் காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணத்திற்கு பிறகு இரண்டு பேர் வீட்டிலும் சேர்க்கவில்லை. இருவரும் தனியாக வசித்து வந்தனர். இதனால் காயத்ரி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு கணவர் ஞான பிரகாஷ் அலுவலக வேலை காரணமாக புனே சென்று இருந்தார்.

    இந்த நிலையில், நேற்று மாலை வீட்டின் படுக்கை அறையில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும், மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

    உடல் மருத்துவ பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது. திருமணம் நடந்து ஒரு வருடமே ஆவதால் திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்துகிறார். #WomanSuicide

    ×