search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman lawyer"

    • உங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதால் நீங்கள் செல்போன் வீடியோ அழைப்பை ஆன் செய்து வைக்க வேண்டும்.
    • போலீசார் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    பெங்களூருவை சேர்ந்த 29 வயது பெண் வக்கீல் ஒருவரின் செல்போனுக்கு கடந்த 3-ந்தேதி அழைப்பு வந்தது. அதில் கூரியர் நிறுவனமான பெடெக்ஸ் நிறுவன ஊழியர் பேசுவதாகவும், உங்களது முகவரியிட்டு அனுப்பப்பட்ட பார்சலில் 140 கிராம் போதை பொருள் இருந்ததாகவும், உங்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக கூறி அழைப்பை வேறு ஒரு நபருக்கு திருப்பிவிட்டார்.

    இதையடுத்து மும்பை சி.பி.ஐ. அதிகாரி பேசுவதாக கூறி தனது பெயர் அபிஷேக் சவுகான் என அடையாளப்படுத்திக் கொண்டு அழைப்பில் இணைந்தார். அப்போது அவர் நீங்கள் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு உள்ளீர்கள். வழக்கில் இருந்து விடுவிக்க நாங்கள் சொல்வதை போல் செய்யுங்கள் என கூறி அந்த பெண்ணிடம் ஸ்கைப் பதிவிறக்கம் செய்து சாட்டிங் தொடங்கும்படி கட்டாயப்படுத்தினார். மேலும் உங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதால் நீங்கள் செல்போன் வீடியோ அழைப்பை ஆன் செய்து வைக்க வேண்டும் என தெரிவித்தார்.

    இதையடுத்து கடந்த 3-ந் தேதி மதியம் 2.15 மணி முதல் 5-ந் தேதி அதிகாலை 1.15 மணி வரை சுமார் 35 மணி நேரத்தில் தொலைபேசி மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் மர்ம நபர்கள் பயத்தைகாட்டினர். அப்போது அபிஷேக் சவுகான் அந்த பெண்ணிடம் போதைப்பொருள் சோதனைக்காக ஆடைகளை அகற்ற வேண்டும் என கூறினார். ஏறக்குறைய 36 மணி நேரம் நீடித்த ஒரே அழைப்பில், அந்த பெண் நிர்வாணமாக பதிவு செய்யப்பட்டு மிரட்டப்பட்டார். ரூ. 15 லட்சம் கொடுத்தால் உங்களை விட்டு விடுவதாக அபிஷேக் சவுகான் அந்த பெண்ணிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து அந்த பெண் ஒரு வங்கிக்கு சென்று தனது கணக்கில் இருந்து ரூ.10.7 லட்சத்தை அபிஷேக் சவுகான கொடுத்த வங்கி கணக்கிற்கு அனுப்பினார். பின்னர் கிரெடிட் கார்டில் இருந்து சுமார் 4 லட்சம் ரூபாயை 2 பரிவர்த்தனைகளாக அனுப்பி வைத்தார். இதனிடையே அபிஷேக் சவுகான் மேலும் ரூ.10 லட்சம் தருமாறு கேட்டார். இல்லையொன்றால் வீடியோவை வலைதளங்களில் வெளியிடப்படும். நீங்களும், உங்களுடைய குடும்ப உறுப்பினர்களும் கிரிமினல் வழக்குகளில் கைது செய்யப்படுவார்கள் என கூறி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதனால் பயந்துபோன அந்த பெண் கடந்த 5-ந் தேதி அதிகாலை 1.15 மணியளவில் அழைப்பை துண்டித்துவிட்டு போலீசாரை அணுகினார்.

    இதையடுத்து போலீசார் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில் கூரியர் மோசடி தொடர்பாக எந்தவொரு தனிப்பட்ட விவரங்களையும் வெளியிட வேண்டாம், உடனடியாக சைபர் காவல்துறையை தொடர்பு கொள்ளவும் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    கர்நாடகாவில் கடந்த சில ஆண்டுகளில், போலி கூரியர் மோசடி மூலம் சந்தேகத்திற்கு இடமில்லாத ஒரு நபரை அழைத்து தங்கள் பெயரில் ஒரு கூரியரில் போதைப்பொருள் அல்லது பிற சட்டவிரோத பொருட்களுடன் பிடிபட்டதாக தெரிவிக்கிறார்கள். மோசடி செய்பவர்கள் கூரியர் நிறுவன ஊழியர்களாக காட்டிக்கொண்டு பணமோசடி அல்லது பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி பெண்களுக்கு பயத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    சீர்காழி பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பெண் வக்கீலிடம் ரூ.25 ஆயிரம் பணத்தை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது 28). வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். பரமேஸ்வரி நேற்று சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது இவரது பின்னால் நின்றிருந்த ஒரு வாலிபர் திடீரென பரமேஸ்வரி வைத்திருந்த கைப்பையை பறித்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு தப்பி சென்றார். கைப்பையில் ரூ.25 ஆயிரம் பணம் இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பரமேஸ்வரி சீர்காழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் புதிய பஸ் நிலையம் பின்புறத்தில் சந்தேகப் படும்படியாக நின்றிருந்த கார்த்தி (25) என்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் பரமேஸ்வரியிடம் பணத்தை பறித்து சென்றவர் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டெல்லியில் கோர்ட்டில் உள்ள வக்கீல்கள் அறையில் மதுபோதையில் பெண் வக்கீலை கற்பழிப்பு செய்தது தொடர்பாக மூத்த வக்கீலை போலீசார் கைது செய்தனர்.
    புதுடெல்லி:

    டெல்லியில், சாகேத் கோர்ட்டில் வக்கீலாக பயிற்சி பெறும் ஒரு பெண், நேற்று முன்தினம் நள்ளிரவு, போலீசாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அதே கோர்ட்டில் மூத்த வக்கீலாக தொழில் செய்யும் 50 வயதை தாண்டிய ஒருவர், கோர்ட்டில் உள்ள வக்கீல்கள் அறையில் மதுபோதையில் தன்னை கற்பழித்து விட்டதாக அவர் கூறினார்.

    அதன்பேரில், மூத்த வக்கீலை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பாதிக்கப்பட்ட பெண் வக்கீலின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அறைக்கு சீல் வைக்கப்பட்டது. அறையை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். 
    புனேவில் பெண் வழக்கறிஞர் ஒருவர் ஆப்பிள் வாட்ச் கொடுத்த இறுதி நேர எச்சரிக்கை காரணமாக காப்பாற்றப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. #AppleSmartWatch #AppleWatchSavesLife

    மும்பை:

    பிரபல அமெரிக்கக் கணினி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் நிறுவனமான ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப்பிள் வாட்சை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். இது நமது உடலின் வெட்பநிலை, இரத்த அழுத்தம், இதய துடிப்பு உள்ளிட்டவற்றை தொடர்ந்து பதிவு செய்து, வேறுபாடுகள் இருப்பின் உடனடியாக தெரிவிக்கும் திறன் கொண்டது.

    இந்த ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் புனேவில் பெண் வழக்கறிஞர் ஒருவரின் உயிரை காப்பாற்றி உதவியுள்ளது. அந்த பெண்ணின் இதய துடிப்பின் வேகத்தை கணக்கிட்டு அதன் மூலம் அவரது உயிரை காப்பாற்றி இருக்கிறது. 

    புனேவை சேர்ந்தவர் ஆர்த்தி ஜொஜெல்கர் (53). வழக்கறிஞரான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆப்பிள் வாட்சை வாங்கியுள்ளார். அந்த வாட்ச்சின் மூலம் தனது உடல்நிலை, இதயத்துடிப்பு ஆகியவற்றை கண்காணித்து வந்துள்ளார். மேலும், எப்போதெல்லாம் இதயம் மோசமாகிறது என்பதையும் கவனித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு அவரது ஆப்பிள் வாட்ச் அவரது உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்துள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு அவரது இதயம் திடீரென்று வேகமாக துடிப்பதாக காட்டியிருக்கிறது. அந்த நேரத்தில் அவர் அலுவலக பிரச்சனை காரணமாக மோசமான மனநிலையில் இருந்திருக்கிறார். இதயம் திடீர் என்று வேகமாக துடிப்பதாக வாட்ச் காட்டியதை அடுத்து அவருக்கு சந்தேகம் வரவே மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவரது இதயம் நிமிடத்திற்கு 140 முறை துடித்துள்ளது.

    அந்த வாட்ச்சின் உதவியினால் வேகமாக மருத்துவமனைக்கு சென்றதால் அவர் காப்பாற்றப்பட்டார். இதையடுத்து ஆப்பிள் நிறுவனத்திற்கு அந்த பெண் நன்றி தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவன சிஏஓ டிம் கூக்கிற்கு, நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். ஏற்கனவே ஆப்பிள் வாட்ச் மூலம் சிலர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  #AppleSmartWatch #AppleWatchSavesLife
    ×