என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » woman tired self immolation
நீங்கள் தேடியது "woman tired self immolation. கிருஷ்ணகிரி"
கட்டப்பஞ்சாயத்து பேசி ஊரை விட்டு தள்ளி வைத்ததாக புகார் கூறி, குடும்பத்துடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் சூரன்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் அசோகன்(55). இவரது மனைவி லலிதா(50). இவர்கள் நேற்று தனது மகன்கள் மற்றும் மகள்களுடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்தனர். பின்னர் திடீரென லலிதா தனது உடலிலும் குழந்தைகள் உடலிலும் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
அந்த நேரம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி உடலில் தண்ணீரை ஊற்றினார்கள். பிறகு அவர்களை கலெக்டரிடம் அழைத்து சென்றனர்.
இது தொடர்பாக லலிதா கூறியதாவது:-
எனது மகன் சிவக்குமார் கடந்த 2011-ம் ஆண்டு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எங்கள் கிராமத்தில் காதல் திருமணம் செய்து கொண்டால் கிராமத்தில் உள்ளவர்களுக்கு விருந்து வைக்க வேண்டும் அல்லது ரூ. 50 ஆயிரம் ஊர் கவுண்டரிடம் கொடுக்க வேண்டும். ஆனால் அந்த பணத்தை நாங்கள் கொடுக்காததால், கட்டப்பஞ்சாயத்து பேசி, எங்கள் குடும்பத்தினரை ஊரை விட்டு தள்ளி வைத்தனர்.
எங்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் தரவில்லை. பண்டிகை காலங்களிலும், கோவிலுக்குள்ளும் விட மறுக்கின்றனர். என்னுடைய மாமியார் இறந்த போதும், சடங்குகள் செய்ய கூட யாரும் வரவில்லை. மேலும் கிராமத்தில் நீங்கள் இல்லை. அதனால் உங்களுக்கு வீடு தேவை இல்லை என்று எங்கள் வீட்டை ஆக்கிரமித்துள்ளனர்.
கடந்த ஆண்டு எங்களுக்கு அரசு வழங்கிய இடத்தையும் ஆக்கிரமித்து எங்களை துன்புறுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக நாங்கள் கந்திகுப்பம் போலீசில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, எங்கள் வீடு மற்றும் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குடும்பத்தினருடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
×

X