என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Woman tries to set fire"
- எனது பேத்தி திவ்யா (17). எனது வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்று வந்தார். அப்போது விராலிபட்டியை சேர்ந்த மகேந்திரன் (28) என்பவரை காதலித்து அவருடன் சென்று விட்டார்.
- மைனர் பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என எடுத்துக் கூறியும், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாலும் நியாயம் கிடைக்காது என்பதால் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றேன் என்றார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பழைய வத்தலக்குண்டு மாரியம்மன் கோவில் தெருைவ சேர்ந்த தனலட்சுமி (49) என்பவர் மனு அளிக்க வந்தார்.
திடீரென அவர் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அருகில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் தெரிவிக்கையில்,
எனது மகள் பானுப்பிரியாவுக்கும், கணேசன் என்பவருக்கும் கடந்த 2002ம் ஆண்டு திருமணம் நடந்தது. கணேசன் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். எனது மகளும் சென்னையிலேயே வசித்து வருகிறார். அவர்கள் மகளான எனது பேத்தி திவ்யா (17). எனது வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்று வந்தார். அப்போது விராலிபட்டியை சேர்ந்த மகேந்திரன் (28) என்பவரை காதலித்து அவருடன் சென்று விட்டார்.
இதுகுறித்து போலீசார் மகேந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். சிறையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த மகேந்திரன் எனது பேத்தி திவ்யாவை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார். இதை அறிந்து நான் அங்கு சென்று திவ்யாவை என்னுடன் வருமாறு அழைத்தேன். அதற்கு மகேந்திரனின் குடும்பத்தினர் அனுப்ப மறுத்துவிட்டனர்.
மைனர் பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என எடுத்துக் கூறியும் அவர்கள் கேட்கவில்லை. போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாலும் நியாயம் கிடைக்காது என்பதால் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றேன் என்றார். இதனை தொடர்ந்து அவரை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆரியநல்லூரை சேர்ந்தவர் பாக்கியநாதன் (67). இவர் தனக்கு பட்டா வழங்கக் கேட்டு பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மண்ணெண்ணெய் பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு தீக்குளிக்க வந்தார். அவரிடம் இருந்த பாட்டிலை பறித்துக் கொண்ட போலீசார் மனு அளித்து செல்லுமாறு அறிவுறுத்தினர். குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அடுத்தடுத்து 2 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்