search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Work intensity of setting up"

    • பழைய சந்தையில் ஜவுளி கடை வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
    • அந்த இடத்தை மாநகராட்சி சார்பில் அளவீடு செய்யும் பணி நடந்தது.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ரூ.54 கோடி மதிப்பில் 4 தளத்துடன் கூடிய 292 கடைகள் அடங்கிய புதிய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.

    ஆனால் இதில் கனி மார்க்கெட் வியாபாரி களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்யாமல் பொது ஏலத்தில் தான் கடைகள் வழங்கப்படும் என மாநகராட்சி அறிவி த்தது. இதனால் புதிய வணிக வளாகம் கடைகள் ஏலம் போகாமல் தொட ர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

    இந்நிலையில் கனி மார்க்கெட் வியாபாரிகளின் வாழ்வாதாரம் கருதி மாநகராட்சியின் சார்பில் தற்காலிக கடை அமைத்து கொடுக்கப்பட்டது. தற்போது புதிய வணிக வளாகம் அருகே உள்ள கடைகளை காலி செய்து புதிய வணிக வளாக கடைகளை ஏலத்தில் விட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதற்காக மாநகராட்சி அதிகாரிகள் ஜவுளி வியாபாரிகள் கடைகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கினர். இதனால் ஜவுளி வியாபாரிகள் அமைச்சர் முத்துசாமியை சந்தித்து முறையிட்டனர்.

    இதையடுத்து ஜவுளி வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஈரோடு நாச்சிப்பா வீதியில் உள்ள சின்ன மார்க்கெட் பகுதியில் கடைகளில் ஒதுக்கீடு செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது.

    மேலும் சின்ன மார்க்கெ ட்டில் வியாபாரம் செய்யும் கடைக்காரர்களுக்கு எதிரே உள்ள காலி இடத்தில் கடை வைத்து கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் இதற்கு சின்ன மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் சந்தித்து முறையிட்டனர். 2 தரப்பு நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து அமைச்சர் முத்துசாமி பேசினார்.

    இதில் ஜவுளி வியாபாரிகளுக்கு கனி மார்க்கெட் அருகே உள்ள மகிமாலீஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள பழைய சந்தையில் ஜவுளி கடை வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த இடத்தை மாநகராட்சி சார்பில் அளவீடு செய்யும் பணி நடந்தது.

    இதைத்தொடர்ந்து இன்று மாநகராட்சி சார்பில் அந்த இடத்தில் 120 ஜவுளி க்க டைகள் அமைப்பதற்கான தகர செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்று முடிந்ததும் நாளை முதல் அங்கு கனி மார்க்கெட் செயல்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

    ×