search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "works"

    • 3 இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்க மண் பரிசோதனை பணி தீவிரம்
    • போக்குவரத்து நெரிசலை தவிர்க்க

    திருச்சி:

    தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.ேநரு, திருச்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் மூன்று இடங்களில் உயர் மட்டப் பாலம் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

    அதன்படி கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பும் வெளியானது. தமிழக நெடுஞ்சாலைத்துறை திருச்சி கோட்டம் சார்பில் அண்ணாசிலை முதல் ஜங்சன் மற்றம் போஸ்ட் ஆபீஸ் முதல் அரசு தலைமை மருத்துவமனை வரை என இரண்டு உயர்மட்ட பாலம் பணிகளையும், தமிழக நெடுஞ்சாலைத்துறை திருச்சி கோட்டம் சார்ப்பில் காவரி பாலம் முதல் குடமுருட்டி வரையிலான உயர்மட்டப் பாலப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன..

    விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக நிலம் ஆர்ஜித கணக்கெடுப்பு மற்றும் மண்ணின் உறுதித்தன்மை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயர் மட்டப் பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த 2 வாரங்களாக இந்த வழித்தடங்களில் 25 முதல் 50 மீட்டர் வரையிலான இடைவெளியில் மண் பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக அண்ணா சிலை முதல் ஜங்சன் வரை ரூ.2.7 கோடியும், போஸ்ட் ஆபீஸ் முதல் அரசு மருத்துவமனை வரையில் ரூ.1.24 கோடியும், காவிரி பாலம் முதல் குடமுருட்டி வரை ரூ.1.20 கோடி என மொத்தம் ரூ.5.14 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறும் போது, உயர்மட்ட பாலம் அமைக்க நில ஆர்ஜிதம் செய்வதற்கான கணக்கெடுப்பு பணிகள், மண் பரிசோதனை பணிகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் மாதத்துக்குள் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்படும். டி.பி.ஆர். தயாரான பிறகுதான் பாலம் கட்ட எத்தனை கோடி செலவாகும் என தெரியவரும்.

    மேலும் திருச்சி நகரில் உள்ள ப ாலக்கரை, புத்தூர் சுரங்கப்பாதைகளுக்கு மேல் உயர்மட்ட பாலம் அமைய உள்ளது. 9 மீட்டர் அகலத்தில் இரு வழிப்பாதையில் இப்பாலம் அமைக்கிறது. இந்த உயர்மட்டப்பாலம் வந்தால் திருச்சியின் தோற்றம் புதுப்பொலிவு பெறுவதோடு, போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்றார்.

    • அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ரூ.7.46 கோடியில் புதிய கட்டுமானப் பணிகள் தொடங்கின
    • அமைச்சர் சிவசங்கர் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், அரியலூர் மற்றும் ெஜயங்கொண்டம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ரூ.7.46 கோடி மதிப்பீட்டில் புதிய பணிமனைகள் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    பொதுப் பணித்துறை சார்பில் நடைபெற்ற பூமி பூஜையில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தலா ரூ.3.73 கோடி என மொத்தம் ரூ.7.46 கோடி மதிப்பீட்டில் இரண்டு புதிய கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், இந்த பணிமனைகள் ஒவ்வொன்றின் தரைத்தளம் தலா 982.25 ச.மீ பரப்பளவு கொண்டது. இந்த தரைத்தளத்தில் நான்கு வகுப்பறைகள், பணிமனை அரங்கம், கூட்டரங்கம், பணியாளர் அறை, கணினி அறை மற்றும் கழிவறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் எழிலுற கட்டப்படவுள்ளது என்றார்.

    செந்துறை-சேலம் பேருந்து சேவை தொடக்கம்... செந்துறையில், நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சிவசங்கர், செந்துறையில் இருந்து அரியலூர், குன்னம், பெரம்பலூர், துறையூர், நாமக்கல் வழியாக சேலத்துக்கு பேருந்து சேவையை கொடியசைத்து தொடக்கி வைத்தார். தொடர்ந்து அய்யூர் துணை மின்நிலையத்தில் இருந்து புக்குழி கிராமத்துக்கு மின் விநியோகத்தை இயக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர்கள் தேவேந்திரன், அன்பரசி மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கழிவு நீர் வாய்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்றது
    • 9-வது வார்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடந்தது

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டில் உள்ள குளத்து பாளையம், திட்ட சாலை, பெரியார் காலனி, பிள்ளையார் கோவில் தெரு, சந்தை உட்பட பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால்களில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவையால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீருடன் மழை நீர் வெளியேறியதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இது குறித்து தகவல் அறிந்த கரூர் மாநகராட்சியின் 9-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், கரூர் வடக்கு நகர காங்கிரஸ் தலைவருமான ஸ்டீபன் பாபு கழிவுநீர் வெளியேறிய பகுதிகளை பார்வையிட்டு அதனை மாநகராட்சியின் சிறிய பொக்லைன் இயந்திரம் வரவழைத்து உடனடியாக தீர்வு காணப்பட்டது. இதனை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் கழிவுநீர் கால்வாய்களை சரி செய்து கொடுத்த மாநகராட்சி உறுப்பினர் ஸ்டீபன் பாபு க்கு நன்றி கூறினர்

    • திட்ட பணிகளுக்கு பூமிபூஜை நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் தலைமை தாங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகங்கை நகர் 26-வது வார்டு சோனையகோயில் எதிர்ப்புறம் உள்ள சாலையில் பேவர் பிளாக் அமைக்கும் பணி, பஸ் நிலையம் எதிர்புறத்தில் நவீன கட்டண கழிப்பறை அமைக்கும் பணி, ஆஞ்சநேயர் கோவில் செட்ஊரணி கரையை சுற்றி பேவர் பிளாக் அமைக்கும் பணி ஆகியவற்றுக்கு பூமி பூஜை நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் தலைமை தாங்கினார்.

    துணை தலைவர் கார்கண்ணன், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், பொறியாளர் பாண்டீஸ்வரி, நகரமைப்பு அலுவலர், நகர் மன்ற உறுப்பினர்கள் அயூப்கான், கார்த்திகேயன், சரவணன், ராமதாஸ், விஜயக்குமார், சண்முகராஜன், மகேஷ், விஜயக்குமார், வீரகாளை மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    • மேற்கண்ட தகவலை சாலியமங்கலம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நல்லையன் தெரிவித்துள்ளார்.
    • பூண்டி மற்றும் ராகவமாள்புரம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள பூண்டி மற்றும் ராகவமாள்புரம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம், மலையர் நத்தம், குடிகாடு, செண்பகபுரம், பள்ளியூர், களஞ்சேரி, இரும்பு தலை, ரங்கநாதபுரம், சூழியகோட்டை, கம்பர் நத்தம், அருந்தவப்புரம், வாளமார்கோட்டை, ஆர்சுத்திப்பட்டு, அருமலைக்கோட்டை, சின்னபுலிக்காடு, நார்த்தேவன் குடிகாடு, அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூத்திமம்மாள்புரம், பனையக்கோட்டை, சடையார் கோவில், துறையுண்டார்கோட்டை ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை சாலியமங்கலம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நல்லையன் தெரிவித்துள்ளார்.

    • களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தொடங்கும் இறையடிக்கால்வாய் நீண்ட நாட்களாக தூர் வாரப்படவில்லை.
    • கால்வாயில் செடி-கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடந்தது. ஆங்காங்கே மண் திட்டுகளும் ஏற்பட்டிருந்தன. இதனால் கால்வாயில் நீரோட்டம் தடைபட்டது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தொடங்கும் இறையடிக்கால்வாய் நீண்ட நாட்களாக தூர் வாரப்படவில்லை.

    இதனைதொடர்ந்து கால்வாயில் செடி-கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடந்தது. ஆங்காங்கே மண் திட்டுகளும் ஏற்பட்டிருந்தன. இதனால் கால்வாயில் நீரோட்டம் தடை பட்டது.

    மேலும் மழைக்காலங்களில் கால்வாயில் அதிகளவில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் போது, அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கரைகளை உடைத்து கிராமங்களுக்குள் புகும் அபாயகரமான சூழல் நிலவியது.

    எனவே புதர் மண்டி கிடக்கும் இறையடிக்கால்வாயை சீரமைக்கவும், கரைகளை பலப்படுத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவக்குமார் உத்தரவின் பேரில், உதவி செயற்பொறியாளர் மணிகண்டன், உதவி பொறியாளர் பாஸ்கர், பாசன உதவியாளர் ஆனந்தன் மற்றும் பொதுப்பணித்துறையினர் புதர் மண்டி கிடந்த இறையடிக்கால்வாயை நேரில் பார்வையிட்டு அதனை சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர்.

    அதன்படி கால்வாயில் ஆக்கிரமிப்பு உள்ளதா? என்று அளவீடு செய்யப்பட்டது.

    அதனைதொடர்ந்து நேற்று இறையடிக்கால்வாய் தூர் வாரும் பணி தொடங்கியது. பொக்லைன் இயந்திரம் மூலம் கால்வாய் தூர் வாரப்பட்டு வருகிறது.

    • பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை தகுதியினை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார்
    • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளையும் பார்வையிட்டார்.

    பாபநாசம்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பாபநாசம் ஒன்றியம், கோபுராஜபுரம் ஊராட்சியில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணியினை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து ஒருங்கி–ணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறையின் குழந்தைகள் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை தகுதியினை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார்.பின்னர், கோபுராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை மற்றும் சத்துணவு தரம் குறித்தும், பள்ளி கட்டிடங்கள் பாதுகாப்பு குறித்தும், கழிப்பறை வசதி மற்றும் சுகாதாரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    கோபுராஜபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளையும் பார்வையிட்டார். பின்னர், பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவேடு–களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு–வர சம்பந்தப்பட்ட அலுவல–ர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது உடன் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் லதா, பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன், பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் பாபு, பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், பாபநாசம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் சுஜாதா, பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், பாபநாசம் வட்டார குழந்தைகள் ஊட்டச்சத்து அலுவலர் லதா, ஒன்றிய பொறியாளர்கள் சுவாமிநாதன், சரவணன், கோபுராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டும் பணிகள்.
    • நாகை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.46 லட்சம் ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி, பண்டாரவடை, போலகம் ஆகிய ஊராட்சிகளில், தலா ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டுவதற்கும், இடையாத்தங்குடி, அம்பல் ஊராட்சிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழலகம் கட்டுவதற்கும், நாகை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.46 லட்சம் ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஷாநவாஸ் எம்.எல்.ஏ, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்து அடிக்கல் நாட்டினர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், பாத்திமா ஆரோக்கிய மேரி, தி.மு.க திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளர் சக்திவேல் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ. 1.5 கோடியில் கூடுதல் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • ஆஸ்பத்திரியின் நுழைவுப்பகுதியில் சில தற்காலிக கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ. 1.5 கோடியில் கூடுதல் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இது பற்றி தலைமை டாக்டர் பாரதி கூறியதாவது:

    குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ. 1.5 கோடியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை தனி பகுதி கூடுதல் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் வகை படுத்துதல் பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு, ஐ.சி.யூ. எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவை முதல் தளத்தில் அமைக்கப்படவுள்ளது. ஆஸ்பத்திரியின் நுழைவுப்பகுதியில் சில தற்காலிக கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் அவைகளை அகற்றியதால் அரசு ஆஸ்பத்திரி பகுதி தூய்மையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • கள்ளக்குறிச்சி அரசு கல்லூரி கட்டிட பணிகளை தொடங்க வேண்டும் என்று கலெக்டரிடம் செந்தில்குமார் எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.
    • புதிய கட்டிடம் கட்ட 2020 ஆம் ஆண்டு சுமார் 11.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனு வில் கூறியுள்ள தாவது,:-

    கள்ளக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட 2020 ஆம் ஆண்டு சுமார் 11.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுநாள்வரை பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் போதிய வசதி இன்றி மாணவ, மாணவிகள் மிகவும் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. எனவே புதிய கட்டிடம் கட்டும் பணிகளை விரைந்து செயல்படுத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அப்போது ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

    • கல்குறிச்சி சமத்துவபுரத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
    • இதனை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் மேகநாத ரெட்டி ஆய்வு செய்தார்.

    காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சி ஊராட்சி யில் உள்ள சமத்துவபுரத்தில் வீடுகள், பள்ளிகள், கழிப்பறைகள், நுழைவு வாயில் உள்ளிட்டவைகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதனைதொடர்ந்து, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் எஸ்.கல்லுபட்டி ஊராட்சியில் ரூ.1.84 லட்சம் மதிப்பில் மறுசீரமைத்து புதுப்பிக்கப்பட்ட நூலகத்தையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.1.15 இலட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் முருங்கை நர்சரி அமைக்கும் பணியையும், கம்பிக்குடி ஊராட்சியில் ரூ.4.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் பண்ணை யை(நர்சரி)யும், வினோபா நகரில் பிரதான் மந்திரி ஆவாஸ் பிளஸ் திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீட்டையும் பார்வை யிட்டார்.

    சத்திரபுளியங்குளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.7.68 லட்சம் மதிப்பில் மியாவாக்கி முறையில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளையும், முடுக்கன்குளம் ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி கட்டிடத்தையும், சூரனூர் ஊராட்சி, உவர்குளம் கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.4.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணையினையும், உவர்குளம் கண்மாயில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.15.55 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் நீர்உறிஞ்சி குழிகளையும் கலெக்டர் மேகநாத ரெட்டி பார்வையிட்டு இந்த பணிகளை விரை வாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் திலகவதி, உதவி செயற்பொறியாளர் கருப்பையா, உதவி பொறி யாளர்கள் சுப்பையா, காஞ்சனாதேவி, காரியா பட்டி ஊராட்சி ஒன்றியகுழு துணைத்தலைவர் ராஜேந்தி ரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தங்க தமிழ்வாணன், பிரமுகர் கண்ணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • ரூ.1.70 கோடி மதிப்பிலான பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது.
    • செயல் அலுவலர் சுதர்சன். முன்னிலை வகித்தார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் விரிவாக்க பகுதியான ஆர்.எம்.எஸ். காலனியில் தனிநபர் பங்களிப்பு தொகையுடன் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய நூலக கட்டிடம் கட்டவும், 15-வது வார்டு பகுதியில் உள்ள வைகையாற்று பாதை பழைய மயான வளாகத்தில் ரூ. 1.50 கோடி மதிப்பில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகளுக்காகவும் பூமி பூஜை நடந்தது.

    பேரூராட்சி சேர்மன் ஜெயராமன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சுதர்சன். முன்னிலை வகித்தார்.

    பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் லதா கண்ணன், குட்கேர் என்வீர்மெண்ட் சிஸ்டம் நிறுவனத்தின் சி.இ.ஓ.முருகன், கவுன்சிலர்கள் ஈஸ்வரி ஸ்டாலின், குருசாமி, சத்தியபிரகாஷ், கொத்தாளம் செந்தில், செல்வராணி ஜெயராமன், நிஷா கவுதமராஜா, ரேகா ராமசந்திரன், கணேசன், முத்துலட்சுமி சதீஸ், வள்ளிமயில், முனைவர் எம்.வி.எம். மருதுபாண்டியன் மற்றும் முனியாண்டி, பாண்டியன், மில்லர், கூலுசெந்தில், தொழிற்சங்க நிர்வாகிகள் பாலமுருகன், ஆர்.எம்.எஸ். குடியிருப்பு சங்க பொருப்பாளர் சந்திரசேகரன், சமூக ஆர்வலர்கள் மணிகண்டன், மண்டபம் கிரி, தாமோதரன், ஐ.டி. விங்க் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    ×