search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Test Championship rankings"

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது.
    • இலங்கை 3-வது இடத்திலும் நியூசிலாந்து 4-வது இடத்திலும் உள்ளது.

    துபாய்:

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 3-0 என முழுமையாக கைப்பற்றியது. இந்த தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

    இந்தியா 3 போட்டியிலும் தோற்றதால், ஆஸ்திரேலியா முதல் இடத்துக்கு முன்னேறியது. 14 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 8 போட்டிகளில் வெற்றி, 5 போட்டிகளில் தோல்வி, ஒரு டிரா என 58.33 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

    இலங்கை 3-வது இடத்திலும், இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்ற நியூசிலாந்து (54.55 சதவீதம்) என 4-வது இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 5, 6, 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.

    இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி விளையாட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டும். 5 போட்டிகளில் 4-ல் வெற்றியும், 1-ஐ சமன் செய்தால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற முடியும்.

    ×