என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "World Tourism Day"
- ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்
- சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்
ராணிப்பேட்டை:
தமிழ்நாடு சுற்றுலா துறையின் சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் செயல்பட்டு வரும் பள்ளி, விடுதி மாணவர்கள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளி மற்றும் விடுதி மாணவர்களுக்கு உலக சுற்றுலா தினம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, கொடிய சைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்கு டியினர் நல அலுவலர் மூலமாக காரை குழந்தைகள் பள்ளி, காரை ஆதிதிராவிடர் விடுதி, ஆற்காடு கிருஷ்ணாவரம் அரசு பள்ளிகளை சேர்ந்த 50 மாணவர்கள் ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு வேலூ ரில் உள்ள மாவட்ட அறிவியில் மையம், கோட்டை, அரசு அருங்காட்சியகம், ஜலகண்டேஸ்வரர் கோவில், ஸ்ரீபுரம் தங்ககோவில் ஆகிய இடங்களுக்கு சென்றனர்.
நிகழ்ச்சியில் சுற்றுலா அலுவலர் இளமுருகன், சுற்றுலா அலுவலக பணியாளர் அய்யப்பன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- போடிநாயக்கனூர் ஏல விவசாய சங்க கலை கல்லூரியில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
- வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிழ்களை கலெக்டர் வழங்கினார்.
தேனி:
தேனி மாவட்டத்தில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு போடிநாயக்கனூர் ஏல விவசாய சங்க கலை கல்லூரியில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு இவ்வாண்டின் கருப்பொருளான "சுற்றுலா மறு சிந்தனை" என்ற தலைப்பில் கலை கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி ஆகியப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிழ்களை கலெக்டர் முரளிதரன் வழங்கினார்.
கட்டுரைப்போட்டியில் போடிநாயக்கனூர் ஏல விவசாய சங்க கலை கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு பயிலும் மாணவி கீர்த்தினி முதலிடத்தினையும், பி.எஸ்.சி 3-ம் ஆண்டு மாணவி நாகலெட்சுமி 2ம் இடத்தினையும், பி.ஏ. 3ம் ஆண்டு மாணவி அனிதா 3ம் இடத்தினையும் பெற்றனர்.
பேச்சுப்போட்டியில் பி.எஸ்.சி 3ம் ஆண்டு மாணவி ஐஸ்வர்யராய் முதலிடத்தினையும், வர்த்தகம் படிக்கும் மாணவி பவித்ரா 2ம் இடத்தையும், அதே பிரிவில் பயிலும் மாணவன் விக்னேஷ்வரன் 3ம் இடத்தினையும் பெற்றனர். மேலும், ஓவியப்போட்டியில் பி.காம் மாணவி ரெஷாந்தனி முதலிடத்தினையும், மாணவி திவ்யா 2ம் இடத்தினையும், மாணவி ஐஸ்வர்யராய் 3ம் இடத்தையும் பெற்றனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், மாவட்ட சுற்றுலா அலுவலர் (மு.கூ.பொ) பாஸ்கரன், கல்லூரி மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்