என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "wrong relationship"
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த ஐகுந்தம் அருகே உள்ள வெப்பாளம் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 31).
கட்டிட மேஸ்திரியான இவருக்கு திருமணமாகி கஸ்தூரி (28) என்ற மனைவியும், அரசு (8), தமிழ்(5) என்ற 2 மகன்களும் உள்ளனர்.
கோவிந்தராஜின் பெற்றோர்கள் கிட்டம் பட்டியில் வசித்து வருகின்றனர். அவர்களுடன் கோவிந்தராஜின் தம்பி சின்னசாமியும் வசித்து வருகிறார்.
கோவிந்தராஜின் மனைவி கஸ்தூரிக்கும், அவரது கொழுந்தனுமான சின்னசாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது தெரியவந்தது.
இதனை கண்ட கோவிந்தராஜ் அவரது மனைவி கஸ்தூரியை பலமுறை கண்டித்ததாக தெரியவந்தது. ஆனாலும், அதனை கண்டு கொள்ளாத கஸ்தூரி மீண்டும் சின்னசாமியுடம் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நேற்று இரவு மீண்டும் கோவிந்த ராஜிக்கும், கஸ்தூரிக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கஸ்தூரியை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அப்போது கஸ்தூரி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று கஸ்தூரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தனது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கோவிந்தராஜ் போலீசாரிடம் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது அவர் போலீசாரிடம், தனது மனைவி கஸ்தூரிக்கும், தம்பி சின்னசாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து நான் பலமுறை எனது மனைவியை கண்டித்தேன். ஆனால் அவர் எதையும் கேட்கவில்லை.
இந்த நிலையில் நேற்று மீண்டும் எங்களுக்கு தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கஸ்தூரியை சரமாரியாக வெட்டினேன். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
எனது குடும்பத்தை காப்பற்ற எனது தம்பி சின்னசாமி இருப்பான் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவனால் எனது குடும்பம் சிதைந்து விட்டது. தற்போது நான் கொலை செய்துவிட்டு சிறைக்கு சென்றால் தவித்து நிற்கும் எனது குழந்தைகளை இனி யார் காப்பாற்றுவார்கள்? என்று கண்ணீர் மல்க கூறினார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்காதல் காரணமாக மனைவியை கட்டிட மேஸ்திரி வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெருந்துறை:
பெருந்துறை அருகே மேட்டுக்கடையில் வசித்தவர் முனியப்பன் (வயது 28) இவரது மனைவி நிவேதா(19), இருவரும் கடந்த 8 மாதத்துக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் மேட்டுக்கடையில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து 2 பேருமே வேலைக்கு போய் வந்தனர்.
இளம்பெண் நிவேதாவுக்கு ஆண் நண்பர்களுடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் செல்போனில் அவர்களுடன் பேசி வந்தார். இதைகண்ட கணவர் முனியப்பன் ஆத்திரம் அடைந்தார். “நமக்கு திருமணமாகிவிட்டது. மற்ற ஆண்களுடன் பேசுவதை பழகுவதை விட்டுவிடு” என்று சத்தமும் போட்டார். ஆனால் நிவேதா இதை கேட்டதாக தெரியவில்லை.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் நிவேதா ஒன்றாக இருந்ததை நேரில்கண்டு முனியப்பன் கடும் ஆத்திரம் அடைந்தார். இருவருக்கும் கடுமையான சண்டை ஏற்பட்டது.
இந்த வீட்டில் இருந்தால் மனைவியின் கள்ளக் காதலர்கள் மீண்டும் வரக் கூடும் என எண்ணிய முனியப்பன் அந்த வீட்டை விட்டு வேறு வீட்டுக்கு குடியிருக்க திட்டமிட்டார்.
இதனால் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வீடுபார்க்க சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. கோபம் அடைந்த முனியப்பன் மனைவியை அடித்து உதைத்தார். இருவரும் மாறி... மாறி... தாக்கினர். பிறகு முனியப்பன் ஆத்திரத்தில் கத்தியால் நிவேதாவின் கழுத்தை அறுத்து துண்டித்தார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
மனைவியின் பிணத்தை மறைக்க மோட்டார் சைக்கிளில் துண்டித்த தலை மற்றும் உடலை எடுத்து சென்ற போது பொதுமக்களிடம் சிக்கினார். பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் அவரை கைது செய்தார்.
போலீசாரிடம் கொலையாளி முனியப்பன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதில் “நானும் நிவேதாவும் காதல் திருமணம் செய்து கொண்டோம். சந்தோஷமாகத்தான் வாழ்ந்தோம். அப்போதுதான் என் மனைவிக்கு வேறு ஒருவருடன் கள்ளக்காதல் இருந்ததை கண்டேன். மேலும் பல ஆண்களுடன் போனில் பேசியதையும் கண்டேன்.
இதனால் அவளை பல தடவை கண்டித்தேன். ஆனால் அவள் என்பேச்சை கேட்கவில்லை. தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டாள். அவளை நான் மிரட்டியும் பார்த்தேன். அப்படியும் கேட்டகவில்லை. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். தப்ப முயன்ற போது சிக்கி கொண்டேன்” என்று கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் நாகூர் அருகே திருப்பயத்தாங்குடி பி.எஸ்.ஆர். காலனி தெருவை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 40). தொழிலாளி. இவருடைய மனைவி அனுராதா(30). இவர்களுக்கு விக்னேஷ் (14), ஆகாஷ்(7) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் அனுராதா தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அனுராதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பிரேத பரிசோதனையில் அனுராதா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பரசுராமனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தனது மனைவி அனுராதாவை கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது உடலை தூக்கில் தொங்க விட்டதும், பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என நாடகமாடியதை பரசுராமன் ஒப்புக்கொண்டார்.
பரசுராமனுக்கும் வேறொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதை மனைவி அனுராதா தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பரசுராமன், அனுராதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை தூக்கில் தொங்க விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி உள்ளார். மேற்கண்ட தகவல் போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.
இதை தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பரசுராமனை போலீசார் கைது செய்தனர்.
பெண் சாவில் திடீர் திருப்பமாக அவரது கணவரே கொலை செய்து தூக்கில் தொங்க விட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் திருமணம் ஆகி அதே பகுதியில் மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது மனைவியிடம் அதே ஊரை சேர்ந்த கட்டிட மேற்பார்வையாளர் ரவி (28) என்பவர் ஆரம்பத்தில் சாதாரணமாக பேசி பழகி வந்தார்.
ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் அழகில் மயங்கிய ரவி எப்படியாவது தன்னுடைய வலையில் அவரை வீழ்த்த வேண்டும் என எண்ணினார்.
இதற்காக அவர் அடிக்கடி அந்த பெண்ணை நேரில் சந்தித்து ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினார். இதில் அந்த பெண் மயங்கினார். பின்னர் இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.
இதையறிந்த கணவர், தனது மனைவியை சத்தம் போட்டார். ரவியுடன் பழகாதே, இனிமேல் பேசினால் நடப்பதே வேறு என கண்டித்தார்.
இதையடுத்து அந்த பெண், ரவியுடன் பழகுவதை நிறுத்தி விட்டு வெளியே செல்வதையும் நிறுத்திக் கொண்டு வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் ரவி, கள்ளக்காதலியை பார்க்க முடியாமல் தவித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத் தன்று ரவி கள்ளக்காதலியை பார்ப்பதற்காக அவரது வீட்டின் அருகே நின்றுகொண்டு வெளியே வருமாறு சிக்னல் கொடுத்தார்.
அப்போது அங்கு வந்த அந்த பெண்ணின் கணவர் இங்கு ஏன் வந்தாய்? எதற்காக இங்கு நிற்கிறாய்? என கேட்டார். அதற்கு ரவி நான் அப்படித்தான் வருவேன், உனது மனைவியை மரியாதையாக இருக்க சொல் என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் 2 பேருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் மாறி, மாறி தாக்கி கொண்டனர். பின்னர் இரண்டு பேரும் கட்டிபுரண்டு வீட்டின் முன்பு சண்டை போட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஊர் மக்கள் அங்கு கூடினர்.
காயம் அடைந்த 2 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தாரமங்கலலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மாப்பாளையம் அன்சாரி நகரைச் சேர்ந்த பிச்சைமணி மனைவி ஜெயந்திராணி (வயது40). இவர்களுககு மணிஇளவரசன் (24) என்ற மகன் உள்ளார். பிச்சைமணி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இந்த நிலையில் ஜெயந்தி ராணிக்கும், அதே பகுதியில் வசிக்கும் கொத்தனார் நடராஜன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது பிடிக்காததால் மணி இளவரசன் தாயுடன் கோபித்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று ஜெயந்தி ராணி வீட்டுக்கு இரவு மணிஇளவரசன் வந்தார். அப்போது அங்கு நடராஜன் இருந்துள்ளார்.
இதையடுத்து 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மணிஇளவரசன் கத்தியால் நடராஜனை சரமாரியாக குத்தினார்.
படுகாயங்களுடன் அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நடராஜன் பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மணிஇளவரசனை தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே உள்ள கோத்தாம்பட்டியை சேர்ந்தவர் மணி என்கிற குண்டுமணி (39). பைனான்ஸ் அதிபர். இவருக்கும் குள்ளக்கா பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளியும் டிரைவருமான குணசேகரன் மனைவி மணி மேகலைக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் மணியின் மனைவி பேபிக்கு தெரிய வந்தது.
அவர் கணவரை கண்டித்தார். கள்ளத்தொடர்பை கைவிடும் படி கேட்டுக் கொண்டார். இதில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
மணிமேகலை கணவர் குணசேகரனும் மனைவியை கண்டித்தார்.
இதனை தொடர்ந்து மணிமேகலையை அவரது கணவரிடம் இருந்து பிரித்து புளியம்பட்டியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து மணி தங்க வைத்தார். அங்கு அடிக்கடி சென்று வந்தார்.
தனது மனைவியை பிரித்ததால் குணசேகரன் ஆத்திரத்தில் இருந்தார். நேற்று இரவு மணிமேகலையுடன் மணி புளியம்பட்டியில் இருந்தார். அங்கு வந்த குணசேரகன் தான் கொண்டு வந்த கத்தியால் மணியை சரமாரியாக குத்தினார்.
இதில் அவரது உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ரத்த வெள்ளத்தில் துடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி மணி இறந்தார். அவரை குத்தி கொன்ற குணசேகரன் தலைமறைவாகி விட்டார்.
இது குறித்து மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான குணசேகரனை தேடி வருகிறார்கள்.
மனைவியுடன் கள்ளதொடர்பு வைத்திருந்த பைனான்ஸ் அதிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பேரையூர்:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது பேய்க்குளம் கிராமம். இங்குள்ள சோளக் காட்டில் இன்று பிற்பகல் அந்தப்பகுதியைச் சேர்ந்த சிலர் சென்றனர்.
அப்போது சோளக்காட்டு நடுவே 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கழுத்தறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே கள்ளிக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
திருமங்கலம் போலீஸ் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் பெண்ணின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தது அதே கிராமத்தைச் சேர்ந்த ஜோதி (வயது 35) என தெரியவந்தது. கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
பேய்க்குளத்தைச் சேர்ந்த முருகன் மனைவி ஜோதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜோதி ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
அப்போது அவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி (50) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர்.
இந்த தகவல் முருகனுக்கு தெரியவரவே, ஜோதியை கண்டித்துள்ளார். மேலும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேசி ஜோதிக்கு அறிவுரை கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ஜோதி ஆடுகளை மேய்ச்சலுக்காக அங்குள்ள சோளக்காட்டுக்கு ஓட்டிச் சென்றார்.
அப்போது அங்கு வந்த பெரியசாமி ஆசைக்கு இணங்குமாறு ஜோதியை வற்புறுத்தினார். ஆனால் அவரோ மறுத்து பெரியசாமியை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த பெரியசாமி தான் மறைத்து வைத்திருந்த கதிர் அரிவாளால் ஜோதியை கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் எதுவும் தெரியாதது போல் வீட்டுக்குச் சென்று விட்டார்.
இந்த நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற ஜோதி வராதது கண்டு நேற்று இரவு முழுவதும் கணவர் மற்றும் உறவினர்கள் அவரை தேடியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று சோளக்காட்டில் ஜோதி பிணமாக கிடப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வீட்டில் பதுங்கி இருந்த பெரியசாமியை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
தஞ்சை கீழவாசல் வீதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மனைவி தனலட்சுமி (வயது 45). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெள்ளைச்சாமி இறந்து விட்டார். இதையடுத்து தனலட்சுமி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது அதே பகுதியில் வேலைப்பார்த்து வந்த கடலூர் வாலிபர் ஒருவருடன் தனலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதையடுத்து அந்த வாலிபர் தனலட்சுமியை தஞ்சாவூரில் இருந்து கடலூருக்கு அழைத்து வர முடிவு செய்தார். அதன்படி தனலட்சுமியின் குழந்தைகளை தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு தனலட்சுமியை மட்டும் கடலூர் கூத்தப்பாக்கத்துக்கு அழைத்து வந்தார். பின்னர் அங்குள்ள பாரதியார் நகரில் அந்த வாலிபரும், தனலட்சுமியும் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
நேற்று இரவு அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த வாலிபர் ஆத்திரம் அடைந்து தனலட்சுமியின் தலையில் அம்மி கல்லை தூக்கி போட்டார். இதில் தனலட்சுமி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் தனலட்சுமி பிணமாக கிடப்பை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி திருப்பாதிரிப்புலியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
கொலை செய்யப்பட்டு கிடந்த தனலட்சுமியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்காதல் பிரச்சினையில் தனலட்சுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக கடலூர் முதுநகரை சேர்ந்த வாலிபர் சரவணனை (வயது 39) போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராமலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 42). இவர் மேற்கு வங்காளத்தில் ராணுவத்தில் புணிபுரிந்து வருகிறார். இவருக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த முருகலெட்சுமி (வயது 34) என்பவருக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு பிரேம்நாத் (14), ஹரிபிரசாத் (10) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். கண்ணன் தனது குடும்பத்தினருடன் ஆண்டிப்பட்டி பாலாஜி நகரில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் முருகலெட்சுமி குன்னூர் அருகே ஆற்றுப்பாலத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முருகலெட்சுமியின் உடலை கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது கணவர் கண்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தார்.
பின்னர் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனது மனைவிக்கும் வேறு ஒரு வாலிபருக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது. இது குறித்து எனக்கு தெரியவரவே நான் என் மனைவியை கண்டித்தேன். ஆனால் அவர்கள் கள்ளத் தொடர்பு நீடித்து வந்தது.
மேலும் அந்த வாலிபரை 2-வது திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் முருகலெட்சுமி வசித்து வந்தார். எனது மனைவி பெயரில் உள்ள சொத்துக்களை எனது பெயரில் மாற்ற முயன்றேன். இதற்காக முருகலெட்சுமியிடம் கேட்ட போது அவர் மறுத்து விட்டார்.
நேற்று முன்தினம் எனது மகன்களின் பள்ளி சான்றிதழ்களை வாங்குவதற்காக முருகலெட்சுமி அவர்கள் படித்த பள்ளிக்கு வந்திருந்தார். இதை அறிந்த நான் அங்கு சென்று முருகலெட்சுமியை நைசாக பேசி சமாதானம் செய்து ஆட்டோவில் அழைத்து வந்தேன். பின்னர் ராமலிங்காபுரத்தில் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.
அதன் பிறகு எனது தந்தை சாமிக்கண்ணு, தாய் ராஜம்மாள் ஆகியோர் உதவியுடன் முருகலெட்சுமியின் உடலை ஆற்றில் வீசி விட்டேன்.
இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியிருந்தார். இதனையடுத்து போலீசார் மனைவியை கொலை செய்த கண்ணன் மற்றும் அவரது பெற்றோரை கைது செய்தனர்.
திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள சுண்ணாம்புக்காரன்பட்டி பகுதியை சேர்ந்த ரெங்கராஜ் மகன் நடராஜ் (வயது 31). கட்டிட தொழிலாளியான இவர் குளித்தலை அருகே உள்ள தோகைமலை அழகனாம்பட்டி பகுதியில் அடிக்கடி பணிக்கு செல்வது வழக்கம். அப்போது அங்கு பணிக்கு வந்த அப்பகுதியை சேர்ந்த லீலா (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
லீலாவின் கணவர் சோலைராஜ் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். 10 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவர் இறந்து விட்டதால் ஆதரவற்று இருந்த லீலா கட்டிட பணிக்கு சென்று தனது மகனை வளர்த்து வந்தார். நடராஜூடனான பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். உல்லாசமும் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் லீலா வேறு நபர்களுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடராஜ் லீலாவை கண்டித்துள்ளார். நேற்று லீலாவை, நடராஜ், சுண்ணாம்புகாரன்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது அங்கு செல்போனில் பேசுவது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த நடராஜ், வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து லீலாவின் தலையில் போட்டார். இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். வீட்டில் யாரும் இல்லாததால் நேற்றிரவு முதல் இன்று காலை வரை பிணத்தின் அருகிலேயே நடராஜ் அமர்ந்து என்ன செய்வதென்று தெரியாமல் இருந்துள்ளார்.
இன்று காலை அவரது தாய் வீட்டிற்கு வந்து பார்த்த போது, லீலா கொலை செய்யப்பட்டு கிடப்பதையும், மகன் அருகில் அமர்ந்திருப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதைத்தொடர்ந்து நடராஜ் சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் ஜீயபுரம் டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன், சோமரம்பேட்டை இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலியை கட்டிட தொழிலாளி கொலை செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்