என் மலர்
நீங்கள் தேடியது "young girl"
- ரோஷினி தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
- மர்ம நபர்கள் ரோஷினியின் கழுத்தில் கிடந்த 1½ பவுன் நகையை பறித்து சென்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சுந்தர வேல்புரம் 1-வது தெருவை சேர்ந்தவர் எடிசன். இவரது மகள் ரோஷினி ( வயது 25). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு வழக்கம்போல் பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். புதிய பேருந்து நிலையம் அருகே சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ரோஷினியின் கழுத்தில் கிடந்த 1½ பவுன் நகையை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கத்தி கூச்சலிட்டார். எனினும் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக ரோஷினி மத்திய பாகம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முருக பெருமாள் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவரை காணவில்லை என புகார்.
- பல இடங்களில் உறவினர்கள் தேடியும் அனிதா கிடைக்க வில்லை.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே உள்ள ஆவாஜிப்பேட்டை கிராமத்தில், லட்சுமி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் அனிதா(வயது22. இவர் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டிலிருந்த குப்பைகளை வெளியே கொட்டி வைத்து வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து காணாமல் போன அனிதாவை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடியும் கிடைக்க வில்லை. இதனால் காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தருமாறு இளம்பெண் அனிதாவின் தந்தை மாணிக்கம் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உத்தரவின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
- நேற்று மாலை சந்திரா தனது 3 மகள்களையும் அழைத்துக் கொண்டு பாளை ராமர் கோவிலுக்கு சுவாமி கும்பிட சென்றார்.
- விநாயகர் கோவில் எதிர்புறம் உள்ள மைதானம் அருகே சென்ற போது ஒரு காரில் வந்த 2 வாலிபர்கள் கண்ணி மைக்கும் நேரத்தில் மீனாவை கடத்திச் சென்றனர்.
நெல்லை:
பாளை கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த வர் குமாரவேல். இவரது மனைவி சந்திரா (வயது 63). இவர்களுக்கு மீனா (24) உட்பட 3 மகள்கள் உள்ளனர்.
காரில் கடத்தல்
நேற்று மாலை சந்திரா தனது 3 மகள்களையும் அழைத்துக் கொண்டு பாளை ராமர் கோவிலுக்கு சுவாமி கும்பிட சென்றார். பின்னர் அவர்கள் 4 பேரும் வீட்டுக்கு திரும்பினர்.
அங்குள்ள விநாயகர் கோவில் எதிர்புறம் உள்ள மைதானம் அருகே சென்ற போது ஒரு காரில் வந்த 2 வாலிபர்கள் கண்ணி மைக்கும் நேரத்தில் மீனாவை கடத்திச் சென்றனர்.
போலீசார் விசாரணை
இது தொடர்பாக சந்திரா பாளை போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் இன்ஸ் பெக்டர் வாசிவம் வழக் குப்பதிவு செய்து மீனாவை கடத்தி சென்ற வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- சித்ரா தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
- திருமணத்தில் சித்ராவுக்கு விருப்பம் இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்து நகர் ஜோதிபாசு நகரை சேர்ந்தவர் சந்தோஷ், பஞ்சவர்ணம். இவர்களது மகள் சித்ரா(வயது27). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் முடிப்பதற்காக மாப்பிள்ளை பார்ப்பது உள்ளிட்ட முன்னேற்பாடு வேலைகளை பெற்றோர்கள் பார்த்து வந்ததை அறிந்த சித்ரா, ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
திருமணத்திற்கு விருப்பம் இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெற்றோர் வேலைக்கு சென்ற பின் கடந்த 1-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சித்ரா எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை.இதனை யடுத்து உறவினர்கள் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் சித்ராவின் அம்மா பஞ்சவர்ணம் தாளமுத்து நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகிறார்.
- கழிவறை தொட்டிக்குள் விழுந்து தவித்த இளம்பெண்ணை மீட்டனர்.
- இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பாலன் நகரை சேர்ந்தவர் திருப்பதி. இவர் தனது வீட்டில் கழிப்பறை மற்றும் குளியலறை தனித்தனியாக அருகருகே கட்டியுள்ளார். இதில் கழிவறை தொட்டியின் மேற்பகுதியிலேயே கழிவறை இருக்கும்படி கட்டியுள்ளனர்.
இந்தநிலையில் இன்று காலை திருப்பதியின் 21 வயது மகள் கழிவறைக்குச் சென்றார். அப்போது திடீரென்று எதிர்பாராதமாக கழிவறை தளம் கோப்பையோடு இடிந்து விழுந்துள்ளது. இதனால் அவர் செப்டிக் டேங்க் தொட்டிக்குள் விழுந்து கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு பெற்றோர் வந்து பார்த்தனர். அப்போது கழிப்பறை தளம் இடிந்து செப்டிக் டேங்க் தொட்டிக்குள் மகள் விழுந்து கிடப்பது தெரியவந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சி யடைந்த அவர்கள் உடனடியாக வாடிப்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி சதக் அப்துல்லா தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் செப்டிக் டேங்க் தொட்டிக்குள் விழுந்து தவித்த இளம் பெண்ணை மீட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- சாத்தூர் அருகே பட்டாசு வேலைக்கு சென்ற இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார்.
- இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சிந்தப்புலி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் ராஜபாண்டி (வயது 33).இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்தார்.
அப்போது எந்திரத்தில் சிக்கிய விபத்தில் இவரது கை ஊனமானது. அதே மில்லில் வேலை பார்த்த விஜய் என்பவரை திரு மணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் தாக்கி விஜய் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ராஜபாண்டி தனது 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு சிந்தப்புலியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து விட்டார். இங்கிருந்து அவர் வெற்றிலையூரணியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று ராஜ பாண்டி வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென் றார். ஆனால் அவர் பட்டாசு ஆலைக்கு செல்லவில்லை. செல்போனும் சுவிட்ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ராஜபாண்டியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்த னர். இந்த நிலையில் சிந்தப்புலி -மேட்டமலை இடையே உள்ள உப்போடையில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் ராஜபாண்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது 2 கால்களும் மடங்கிய நிலையில் இருந்தன. சில இடங்களில் காயங்கள் இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் போலீசார் சம்பவஇடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜபாண்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டைவிட்டு வெளியேறினார்.
- 2 பேரும் மேஜர் என்பதால் சேர்ந்து வாழ எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என இரு வீட்டாரிடமும் எழுதி வாங்கிக்கொண்டனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டியை சேர்ந்தவர் பிரியா (வயது 23). கணிதவியல் பட்டதாரி. இவரை கடந்த 16ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவரது தந்தை வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து பிரியா எங்கு சென்றார் என்பது குறித்து வடமதுரை போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் பிரியா வேடசந்தூர் ஆத்துமேட்டில் பூக்கடை வைத்திருக்கும் பி.ஏ. தமிழ் பட்டதாரியான மனோபாலாஜி (வயது 23) என்பவரை கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர் தனது காதலனை மணப்பாறை அருகில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் தங்கள் வீட்டிற்கு சென்றால் எப்படியும் பிரச்சினை செய்து பிரித்து விடுவார்கள் என நினைத்து மணக்கோலத்தில் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். வடமதுரை போலீசார் இருதரப்பு பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் சேர்ந்து வாழ எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என இரு வீட்டாரிடமும் எழுதி வாங்கிக்கொண்டனர்.
பிரியாவின் குடும்பத்தினர் தங்களுடன் வருமாறு அழைத்தபோதும் தான் கணவருடன் தான் செல்வேன் என அவர் உறுதியாக கூறினார். இதனையடுத்து காதல் ஜோடிகளை போலீசார் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
- கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பிரியா வீட்டில் இருந்து வந்தார்.
- பிரியாவை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூரணி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் பிரியா (வயது 24). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் பிரியாவிற்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் பிரியாவிற்கு அதில் உடன்பாடு இல்லாததால் கடந்த 24-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயக்கம் அடைந்தார்.
சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த பெற்றோர், பிரியா மயக்கநிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று மாலை சிகிச்சை பலனளிக்காமல் பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் இளம்பெண் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
- விருதுநகர் மேற்கு போலீசில் மகனை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள குள்ளகவுண்டன்பட்டி இந்திரா காலனியை சேர்ந்த வர் சரவ ணன்(வயது38). இவரது மனைவி கற்பக வள்ளி. இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு 2 குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து ஏழாயிரம்பண்ணையில் உள்ள கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மாயமானார். இந்த நிலையில் ஏழாயிரம்பண்ணை போலீஸ் நிலையில் மனைவியை கண்டுபிடித்து தருமாறு சரவணன் புகார் செய்தார். அதில் ரவிக்குமார் என்பவர் தனது மனைவிக்கு பழக்கம் இருந்ததாகவும், அவர் அழைத்து சென்றிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி விஜயலட்சுமி காலனியை சேர்ந்தவர் திருவேட்டை(56), பட்டாசு தொழிலாளி. மதுரையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றவர் மாயமானார். எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவரது மனைவி ராஜேஸ்வரி அளித்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் முத்தால்நகரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் வீரபெருமாள்(23). கட்டிடத்தொழிலாளியான இவர் வேலைக்காக ராஜபாளையம் சென்றார். இரவு 10 மணிக்கு உணவு சாப்பிட்டு கொண்டிருப்பதாக தந்தையிடம் போனில் தெரிவித்தார். அதன் பின்னர் போன் அணைந்து விட்டது.அதன் பின்னர் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. நண்பரிடம் விசாரித்த போது வீட்டிற்கு சென்றதாக தெரிவித்துள்ளார். ஆனால் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து தங்கவேல் விருதுநகர் மேற்கு போலீசில் மகனை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார். போலீசார் வீரபெருமாளை தேடி வருகின்றனர்.
- ஐஸ்வர்யாவும், பிரைண்ட்நகர் 1-வது தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
- கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பிரைண்ட் நகர் 13-வது நகரை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சாந்தி (வயது47).
இளம்பெண் தற்கொலை
இவர்களது மூத்தமகள் ஐஸ்வர்யா (22). இவரும் பிரைண்ட்நகர் 1-வது தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சண்முகசுந்தரம் ஆட்டோ டிரைவராக உள்ளார்.
திருமணத்திற்கு பின்னர் இவர்கள் 3 சென்ட் பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு நித்யா (1½) என்ற பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஐஸ்வர்யாவுக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அவர் பிரைண்ட்நகர் 13-வது தெருவில் உள்ள தாய் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். நேற்று வழக்கம் போல சாந்தி உப்பளத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் வெறுப்படைந்த ஐஸ்வர்யா வீட்டில் இருந்த துக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார். வேலை முடிந்து சாந்தி வீட்டிற்கு வந்த போது, ஐஸ்வர்யா தூக்கிட்ட நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
ஆர்.டி.ஓ. விசாரணை
சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. சத்தியராஜ், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் கங்கைநாத பாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. சஞ்சிவ்குமார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
- பொது மக்கள் வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர்.
- கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியில் இரவு நேரத்தில் வயதான பாட்டியிடம் 2 வாலிபர்கள் வாக்கு வாதம் செய்வதை சிலர் பார்த்தனர். அவர்கள் அருகில் சென்று விசாரித்த போது, 2 வாலிபர்களும் போதையில் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து பாட்டியிடம் விசாரித்தபோது, அவர் ஒரு உணவகத்தில் தூய்மை பணி செய்வதாகவும் வேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பும்போது இந்த வாலிபர்கள் பாலியல் சீண்டல் செய்ய முற்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து பொது மக்கள் அந்த வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர். மூதாட்டியிடம் வாக்கு வாதம் செய்தவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்பதும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மது போதையில் இருந்த அவர்கள், நள்ளிரவில் தனியாக நடந்து சென்றது பருவ மங்கை என நினைத்து பாட்டியிடம் வம்பு செய்ததும் இந்த சம்பவத்தில் மேலும் 2 மாணவர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அவர்களையும் அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இளம்பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- அவர் கரிசல்பட்டியை சேர்ந்த மாரிமுத்து என தெரியவந்தது.
திருமங்கலம்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஞானகுரு. இவரது மனைவி தங்கேஸ்வரி(வயது40). இவர்களது மகள் கவிதா. நேற்று திருநகரில் உள்ள தனது தந்தையை பார்ப்பதற்காக தங்கேஸ்வரி தனது மகளுடன் புறப்பட்டார். இதற்காக வத்திராயிருப்பில் இருந்து பஸ்சில் திருமங்கலம் வந்த அவர்கள் திருநகர் செல்ல பஸ்சுக்காக காத்திருந்தனர்.
அப்போது திடீரென ஒரு வாலிபர் கவிதா அணிந்திருந்த 1 பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடினார். உடனே அங்கு ஊருக்கு செல்வதற்காக காத்திருந்த விருதுநகரை சேர்ந்த சில போலீசார் விரைந்து செயல்பட்டு நகை பறித்த அவரை விரட்டிச்சென்று பிடித்தனர். திருமங்கலம் நகர் போலீசில் ஒப்படைக்கப்பட்ட அந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் கரிசல்பட்டியை சேர்ந்த மாரிமுத்து(29) என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.