என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "young women missing"
- ஒரு விபத்தில் வரலட்சுமி தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
- வரலட்சுமியை போலீசார் தேடி கண்டு பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி காந்தி தெருவை சேர்ந்தவர் பிரம்ம நாயகம். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு வரலட்சுமி (வயது30) என்ற மகள் உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் வரலட்சுமி தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதனிடையே அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வரலட்சுமியை தேடி கண்டு பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வரலட்சுமி வெளியே சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
இதுபற்றி பிரம்மநாயகம் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வர லட்சுமியை தேடி வருகின்ற னர்.
- குடும்ப பிரச்சினை காரணமாக இளம்பெண்கள் உள்பட 3 பேர் மாயமாகினர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே பங்களாபட்டியை சேர்ந்தவர் ரவி மகள் ரித்திகா (வயது17). இவர் 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார்.
சம்பவத்தன்று வெளியே சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கா ததால் பெரியகுளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரித்திகாவை தேடி வருகின்றனர்.
மேல்மங்கலம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ரூபாவாணன் (22). இவர் வத்தலக்குண்டு பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்தமபாளையம் அருகே அணைப்பட்டியை சேர்ந்தவர் பொம்மன் மகள் தீபா (16). இவர் 11-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று திடீரென மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டை விட்டு வெளியே சென்ற பெண் திடீரென மாயமானார்.
- புகாரின் பேரில் போலீசார் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
கம்பம்:
கம்பம் காமாட்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பெருமாள் மனைவி லதா (வயது 33).
இவர் தனியார் கார்மென்சில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். கடந்த 3 மாதங்களாக கேரளாவுக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த லதா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது கணவர் கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
- சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண் திடீரென மாயமானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
வருசநாடு:
வருசநாடு அருகே துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் குமார் மகள் சுவேதா (வயது15). குமார் நாராயணபுரத்தில் உள்ள ேதாட்டத்தில் தங்கி வேலை செய்து வந்ததால் அவரது உறவினர் முருகேஸ்வரி பொறுப்பில் சுவேதா வளர்ந்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சுவேதா திடீரென மாயமானார்.
அக்கம் பக்கம் தேடியும் கிடைக்காததால் கடமலை க்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவேதாவை தேடி வரு கின்றனர்.
தேனி:
தேனி அருகே உத்தமபாளையம் அனுமந்தன்பட்டி கோனார் தெருவை சேர்ந்தவர் கோபால் மகள் சரண்யாதேவி(வயது22). தேனி பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். மில்வேன் மூலம் வேலைக்கு சென்றுவந்துள்ளார். சம்பவத்தன்றும் வழக்கம்போல் சரண்யாதேவி மில்வேலைக்கு சென்றுள்ளார்.
இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய், உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் உத்தமபாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சரண்யா தேவியை தேடி வருகின்றனர்.
இதேபோல் உத்தமபாளையம் அருகே கே.கே.பட்டியை சேர்ந்தவர் மலர்ராஜ் மகள் மலர்பிரியா(வயது21). கம்பத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற மலர்பிரியா வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் ராயப்பன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்