என் மலர்
நீங்கள் தேடியது "youth arrested"
- பிளாட்பாரத்தில் ஒரு சாக்கு பையுடன் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் ஒரு வாலிபர் நின்று கொண்டு இருந்தார்.
- உடனே போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, பின் முரணாக பதில் அளித்தார்.
மதுரை:
மதுரைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்து முனியாண்டி தலைமையில் போலீசார் இன்று அதிகாலை மதுரை ரெயில் நிலையத்துக்கு வந்த அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
மதுரை ரெயில் நிலையத்தின் 2-வது நடைமேடைக்கு இன்று அதிகாலை வந்த பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அந்த ரெயிலில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பிளாட்பாரத்தில் ஒரு சாக்கு பையுடன் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் ஒரு வாலிபர் நின்று கொண்டு இருந்தார். உடனே போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, பின் முரணாக பதில் அளித்தார்.
இதையடுத்து போலீசார் அவர் வைத்திருந்த சாக்கு மூட்டையை சோதனையிட்டபோது அதில் 43 கிலோ கஞ்சா, குட்கா மற்றும் வெளிமாநில மதுபாட்டில்கள் ஆகியவை கடத்திச் செல்வது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அந்த வாலிபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில் அவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, ஓடைத்தெரு, வள்ளுவர் நகரை சேர்ந்த காதர் பாட்ஷா (வயது 39) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
- திண்டிவனம் அருகே ஏ.டி.எம். மிஷினை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
திண்டிவனத்தை அடுத்த பிரம்மதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அங்குள்ள அரசு வங்கியின் அருகில் உள்ள ஏ.டி.எம். மிஷினை மர்ம நபர் ஒருவர் உடைத்ததாக பிரம்மதேசம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் போலீசார் அங்கு விரைந்து சென்ற போது, அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இந்நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையின் மூலம் தேடிவந்தனர்.
இந்நிலையில் இன்று சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் ராஜபா ளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 32) என்பதும், இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிரம்மதேசம் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மை யத்திற்கு சென்று பணம் எடுக்க முயற்சி செய்த போது ஏ.டி.எம். மிஷினில் பணம் வராததால் ஆத்திரம் அடைந்து ஏ.டி.எம். மிஷினை உடைத்ததாகவும், தெரியவந்தது. இந்நிலையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுமி காணாமல் போனதை கண்ட அவருடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிறுமியின் வீட்டிற்கு சென்று பட்டாசு வெடிக்க சிறுமியை அழைத்தனர்.
- சிறுமி வீட்டில் இல்லையே உங்களுடன் தானே விளையாடிக்கொண்டிருந்தார் என்று சிறுமியின் பெற்றோர் கூறினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் மல்காபுரம் பகுதியில் கடந்த 24-ந் தேதி மற்ற பகுதிகளை போலவே தீபாவளி கொண்டாட்டம் களைக்கட்டியிருந்தது. குடியிருப்பு பகுதியில் வழக்கம்போல மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வந்தனர்.
அந்த பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி பட்டாசு வெடித்து விளையாடிக் கொண்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த சாய் (வயது 27) சிறுமியை அவரது வீட்டிற்கு தூக்கி சென்றார். அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
சிறுமி காணாமல் போனதை கண்ட அவருடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிறுமியின் வீட்டிற்கு சென்று பட்டாசு வெடிக்க சிறுமியை அழைத்தனர். ஆனால் சிறுமி வீட்டில் இல்லையே உங்களுடன் தானே விளையாடிக்கொண்டிருந்தார் என்று சிறுமியின் பெற்றோர் கூறினர்.
அப்போதுதான் குடும்பத்தினருக்கு சிறுமி காணவில்லை என்பது தெரியவந்தது. அவர்கள் அக்கம் பக்கத்தில் தேட தொடங்கினர்.
சிறுமியை தேடிக்கொண்டிருந்த அவரது பெற்றோர் சாய் வீட்டருகில் வந்துள்ளனர். அப்போது சிறுமியின் அழுகுரல் கேட்டது.
கதவை தட்டிய பெற்றோர் சாய் வீட்டில் இருந்து சிறுமியை மீட்டனர். சிறுமி அழுதுகொண்டே இருந்ததால் அவரிடம் விசாரித்தனர்.
அப்போது சாய் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தது தொடர்பாக சிறுமி தெரிவித்தார். இதனையடுத்து சிறுமியின் உறவினர்கள் வாலிபரை சரமாரியாக தாக்கினர்.
சிறுமியின் பெற்றோர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாயை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
- சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- 60 லிட்டர் சாரயத்தை 2 லாரி ட்யூபில் கடத்தி வந்த ஐயப்பனை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
கள்ளக்குறிச்சி:
சின்ன சேலம் பகுதியில் சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தின் பேரில் எஸ்ஐ மணிகண்டன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செல்லியம்பாளையம் ரயில்வே பெரிய பாலம் அருகே 60 லிட்டர் சாரயத்தை 2 லாரி ட்யூபில் கடத்தி வந்த ஐயப்பனை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அய்யப்பனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள பெரிய சாமியை சின்னசேலம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- சந்திப்பு பகுதி சாலையோரத்தில் வடமாநிலத்தை சேர்ந்த பிலால் என்ற வாலிபர் ஆடைகள் விற்பனை செய்து வந்துள்ளார்.
- ஆனந்த் தனது நண்பருடன் சேர்ந்து ஆடைகள் இருந்த மூட்டையை திருடிச்சென்று விட்டனர்.
நெல்லை:
நெல்லை டவுன் பாட்டபத்து நபிகள் நாயகம் தெருவை சேர்ந்தவர் ஆனந்த்(வயது 27). இவர் தீபாவளி பண்டிகையையொட்டி தனது நண்பருடன் சந்திப்பு பகுதியில் மெயின்ரோட்டில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அங்கு சாலையோரத்தில் வடமாநிலத்தை சேர்ந்த பிலால் என்ற வாலிபர் ஆடைகள் விற்பனை செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு தெரியாமல் ஆனந்த் தனது நண்பருடன் சேர்ந்து ஆடைகள் இருந்த மூட்டையை திருடிச்சென்று விட்டனர்.
இதுதொடர்பாக பிலால், சந்திப்பு பாலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆனந்த் மற்றும் அவரது நண்பரை தேடி வந்தனர். நேற்று ஆனந்த் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர்.
- காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்கப்படுவதாக, கோட்டுச்சேரி போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி வெள்ளை பிள்ளையார் கோவில் அருகே உள்ள கருமாதி மண்டபம் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்கப்படுவதாக, கோட்டுச்சேரி போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு, போலீசார், சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றனர்.
அப்போது போலீசாரை கண்டதும் கஞ்சா விற்ற வாலிபர் அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்து விசாரித்த போலீசார், காரைக்கால் நேருநகரைச்சேர்ந்த அமர்நாத் (வயது22) என்பது தெரியவந்தது. போலீசார் அமர்நாத்தை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.12 ஆயிரம் மதிப்பிலான 120 கிராம் எடைகொண்ட 12 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
- என்ஜின் டிரைவர் சரக்குரெயில் மீது கல்வீசிய வாலிபரை தனது செல்போனில் வீடியோ எடுத்தார்.
- மத்திய ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆர்.கே. நகர் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தினர்.
ராயபுரம்:
கொருக்குப்பேட்டையில் இருந்து வியாசர்பாடி வழியாக சரக்கு ரெயில் ஒன்று கடந்த 21-ந்தேதி சென்றது. அப்போது தண்டவாளத்தின் மீது நின்று கொண்டிருந்த வாலிபர்களை கண்டதும் ரெயில் என்ஜின் டிரைவர் ஒலி எழுப்பினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் ஒருவன் திடீரென சரக்கு ரெயில் மீது கற்களை சரமாரியாக வீசினான். இதில் ஒரு கல் ரெயில் என்ஜினின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு விழுந்தது. இதில் என்ஜின் டிரைவரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர் சரக்குரெயில் மீது கல்வீசிய வாலிபரை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். இதற்குள் அந்த இடத்தை கடந்து ரெயில் சென்று விட்டது.
இதுகுறித்து மத்திய ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆர்.கே. நகர் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தினர். இதில் செல்போன் வீடியோவில் பதிவான காட்சியை வைத்து சரக்கு ரெயில் மீது கல்வீசி தாக்கிய கொருக்குபேட்டையைச் சேர்ந்த பூபாலன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மதுபோதையில் கல் வீசி தாக்கியதாக அவர் தெரிவித்து உள்ளார். கைது செய்யப்பட்ட பூபாலன் மீது 9 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- சந்தேகப்படும்படி நின்ற வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர்
- அவரிடம் குளுக்கோஸ் பாட்டில், போதைஊசிகள், போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா ஆகியவைஇருந்தது.
விழுப்புரம்:
திண்டிவனம் பகுதிகளில் சமீப காலமாக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திண்டிவனம் ஏ.எஸ்.பி அபிஷேகுப்தா உத்தரவின் பெயரில் திண்டிவனம் எஸ்ஐ ஆனந்தராசன் மற்றும் போலீசார் தொடர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திண்டிவனம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும்படி நின்ற வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர்.அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் குளுக்கோஸ் பாட்டில், போதைஊசிகள், போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா ஆகியவைஇருந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் திண்டிவனம் என்.கே நகரை சேர்ந்த நித்திஷ் கண்ணன்(வயது28) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- ஆத்திரம் அடைந்த கோகுல் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசாரை மிரட்டி ரகளையில் ஈடுபட்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுலை கைது செய்தனர்.
போரூர்:
சென்னை, கே.கே. நகர் ராஜமன்னார் சாலை அருகே நேற்று நள்ளிரவு வாலிபர்கள் சிலர் மதுபோதையில் ரகளையில் ஈடுபடுவதாக கே.கே. நகர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் ஜீவா, மற்றும் போலீஸ்காரர் விஜயராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்த கும்பல் தப்பி ஓட்டம் பிடித்தனர். அவர்களில் அதே பகுதியை சேர்ந்த கோகுல் என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர், இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசாரை மிரட்டி ரகளையில் ஈடுபட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுலை கைது செய்தனர். கோகுல் மீது ஏற்கனவே கே.கே நகர் மற்றும் எம்.ஜி.ஆர்.நகர் போலீஸ் நிலையங்களில் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- சிறுமியின் பெற்றோர் வாலிபர் குறித்து செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
- புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அவலூர்பேட்டையை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது 27). இவர் அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை கடந்த 7 மாத காலமாக காதலித்து வந்தார்.
பின்னர் சம்பவத்தன்று திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தார். அதனை வீடியோ பதிவு செய்து கொண்டார். பின்னர் இதனை வெளியில் யாரிடமும் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று சிறுமியை மிரட்டி உள்ளார்.
அதிர்ச்சி அடைந்த சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே பெற்றோர் செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன் பேரில் போலீசார் ஞானசேகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
- விடுமுறை நாட்களில் ஒடுகத்தூரில் உள்ள துணிக்கடைக்கு வேலைக்கு செல்லும் மாணவி இரவு பணி முடிந்து கத்தாரி குப்பம் வரை பஸ்சில் வருவார்.
- கத்தாரிக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் இருந்து அவரது தந்தை பைக்கில் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
ஒடுகத்தூர்:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் இருந்து மேல்அரசம்பட்டு செல்லும் சாலையில் உள்ள கத்தாரிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 27). ஊசூர் அடுத்துள்ள தார் வழியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி கடந்த வாரம்தான் பெண் குழந்தை பிறந்தது.
இதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி மீது சரத்குமாருக்கு மோகம் ஏற்பட்டுள்ளது. மாணவி குடியாத்தம் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் ஒடுகத்தூரில் உள்ள ஒரு துணிக்கடையில் மாணவி வேலை பார்த்து வந்தார். அதில் வரும் சம்பள பணத்தை படிப்பு செலவிற்கு பயன்படுத்திக் கொண்டார்.
இந்த நிலையில் சரத்குமார் மாணவி தனியாக செல்லும் நேரத்தில் அவரிடம் ஆபாசமாக பேசி உள்ளார். தனது ஆசைக்கு இணங்குமாறு மாணவியை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டுகளாக சரத்குமார் மாணவியை பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்தார்.
தனக்கு ஏற்கனவே திருமணமாகி பெண் குழந்தை பிறந்த பொறுப்பு கூட இல்லாமல் மாணவியை அடைவதில் சரத்குமார் குறியாக இருந்தார்.
விடுமுறை நாட்களில் ஒடுகத்தூரில் உள்ள துணிக்கடைக்கு வேலைக்கு செல்லும் மாணவி இரவு பணி முடிந்து கத்தாரி குப்பம் வரை பஸ்சில் வருவார். கத்தாரிக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் இருந்து அவரது தந்தை பைக்கில் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு மாணவி துணிக்கடையில் வேலை முடிந்து இரவு 8.30 மணிக்கு ஒடுகத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து கத்தாரி குப்பத்திற்கு பஸ்சில் சென்று இறங்கினார்.
ஆனால் அவரது தந்தை அங்கு அழைத்துச் செல்ல வரவில்லை. அந்த நேரத்தில் மாணவியின் வருகைக்காக சரத்குமார் முன்கூட்டியே அங்கு காத்திருந்தார்.
ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் நடந்து சென்ற மாணவியை சரத்குமார் தன்னுடன் வருமாறு கையை பிடித்து இழுத்து வற்புறுத்தினார்.
இதனை சற்றும் எதிர்பாராத மாணவி கத்தி கூச்சலிட்டார். அப்போது சரத்குமார் மாணவியின் வாயில் துணியை கட்டி கொலை மிரட்டல் விடுத்தார். மாணவியை வேகமாக அருகில் உள்ள வாழைத்தோட்டத்திற்குள் இழுத்துச் சென்றார். கை, வாய் ஆகியவற்றை துணியால் கட்டி வலுக்கட்டாயமாக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் கட்டாயப்படுத்தி மீண்டும் மீண்டும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
நடந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் உன்னையும் உன் குடும்பத்தையும் கொன்று விடுவேன் என மிரட்டினார். இதையடுத்து இரவு 10 மணி அளவில் மாணவி வீட்டுக்குச் சென்றார்.
தனக்கு நடந்த கொடூர சம்பவம் குறித்து தனது தாயிடம் அழுது கொண்டே கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து வேப்பங்குப்பம் போலீசில் புகார் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் போக்சோ சட்டத்தின் கீழ் சரத்குமாரை கைது செய்தார். அவர் இன்று வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். பிறந்து ஒரு வாரமே ஆன தனது மகளை கொஞ்ச வேண்டிய சரத்குமார் பொறுப்பில்லாத தன்னுடைய வக்கிர புத்தியால் சிறையில் கம்பி எண்ணுகிறார்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு இன்று வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடந்தது. வீட்டிற்கு தனியாக சென்ற மாணவியை மிரட்டி வாலிபர் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒடுகத்தூர் மேல்அரசம்பட்டு சாலை இருபுறமும் விவசாயம் மற்றும் அடர்ந்த வனப்பகுதி நிறைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளதால் அந்தப் பகுதி பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனை தடுக்க இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- மாணவி பஸ்சை விட்டு இறங்கி வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து திங்கள்நகர் செல்வதற்காக பஸ்ஸில் ஏறினார்.
- வாலிபர் மீண்டும் அதே பஸ்சில் ஏறி மாணவியின் பின் இருக்கையில் அமர்ந்தார்.
இரணியல்:
தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த மாணவி ஒருவர் குளச்சல் அருகே உடையார் விளை பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இங்கேயே தங்கி படித்த இந்த மாணவி விடுமுறை தினங்களில் ஊருக்கு செல்வது வழக்கம்.
கடந்த வெள்ளிக்கிழமை மாணவி ஊருக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் இன்று காலை ஊரிலிருந்து மீண்டும் குமரி மாவட்டத்திற்கு பஸ்சில் வந்தார். ஊரிலிருந்து பஸ்சில் வடசேரிக்கு வந்த போது பஸ்சின் பின் இருக்கையில் அமர்ந்த வாலிபர் ஒருவர் மாணவியிடம் சில்மிஷ சேட்டைகளில் ஈடுபட்டார். இதனால் மாணவி அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் மாணவி பஸ்சை விட்டு இறங்கி வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து திங்கள்நகர் செல்வதற்காக பஸ்ஸில் ஏறினார். அந்த வாலிபர் மீண்டும் அதே பஸ்சில் ஏறி மாணவியின் பின் இருக்கையில் அமர்ந்தார். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் வாலிபர் மாணவியிடம் மீண்டும் சேட்டையில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சடைந்த மாணவி இது குறித்து கட்டுப்பாட்டு அறை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
கட்டுப்பாட்டு அறை போலீசார் இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இரணியில் போலீசார் இரணியல் கோர்ட் பகுதியிலுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றனர். அப்போது அந்த பஸ் அந்த பகுதிக்கு வந்தது.
உடனே போலீசார் அந்த பஸ்ஸை நிறுத்தினார்கள். மாணவி போலீசாரிடம் நடந்த சம்பவங்களை கூறினார். உடனே போலீசார் மாணவியின் பின் இருக்கையில் இருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
அவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இல்லை. தேங்காய்பட்டணம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறியுள்ளார். போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓடும் பஸ்சில் மாணவியிடம் வாலிபர் சில்மிஷம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.