search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth dead body"

    கம்பம் அருகே கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பம்:

    கம்பம்-கூடலூர் சாலையில் உள்ள ஒரு பயன்பாடற்ற தோட்டத்து கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு அவரது உடல் மேலே கொண்டு வரப்பட்டது. அவர் இறந்து 30 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இதனால் உடலை மேலே எடுத்தபோதே பல பாகங்கள் தனித்தனியாக கிணற்றுக்குள் விழுந்தன. பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

    இறந்தவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. அவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்றும் தெரியவில்லை.

    எனவே இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

    மேலும் வெளியூர் வியாபாரியாக இருக்கலாம் என்ற சந்தேகத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசரணை நடத்தி வருகிறார்கள்.

    மண்ணச்சநல்லூர்,

    மே 23-

    கொள்ளிடம் ஆற்றில் அடை யாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.மண்ணச்சநல்லூர் வட்டம் மான்பிடிமங்கலம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரி அருகில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று நேற்று கிடந்தது. ஐந்தரை அடி உயரத்தில் மாநிறமான அந்த நபர் கருப்பு, சிவப்பு கட்டம் போட்ட சாரம் (லுங்கி) மட்டும் அணிந்திருந்தார். அவர் யார்? எப்படி இறந்தார்? என்று தெரியவில்லை.இது குறித்து மாதவ பெருமாள் கோயில் கிராம நிர்வாக அலுவலர் கணேசன் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சார்பு ஆய்வாளர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யாரென்றும், அவர் எதனால் இறந்தார் என்றும் விசாரணை நடத்தி வருகிறார். போ லீசார் முதியவரின் சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ×