என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth death"

    • புவனேஷ் மரணம் தொடர்பாக தூத்துக்குடியில் வசிக்கும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பேரூர்:

    தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி தாளமுத்து நகரை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் புவனேஷ் (வயது 18). கட்டிட தொழிலாளி.

    இவர் கடந்த 17-ந்தேதி நண்பர்கள் முத்துக்குமார், ஹரிஹரசுதன் ஆகியோருடன் கோவை மாவட்டம் வெள்ளியங்கிரிக்கு மலையேறுவதற்காக வந்தார்.

    மலை உச்சியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்து விட்டு பின்னர் அவர்கள் மீண்டும் கீழே இறங்கி வந்தனர். 7-வது மலை உச்சியில் இருந்து கீழே வந்த போது புவனேசுக்கு எதிர்பாராதவிதமாக கால் இடறியது. நிலை தடுமாறிய புவனேஷ் 10 அடி ஆழமுடைய பள்ளத்தில் விழுந்தார்.

    இதில் அவரது இடது காது மற்றும் தலையின் பின்பகுதியில் பலத்த அடிபட்டு உயிருக்கு போராடினார். அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சுமை தூக்கும் பணியாளர்கள் டோலியுடன் அவசர, அவசரமாக மலையேறி சென்றனர். புவனேசை டோலி மூலம் மீட்டு அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்சில் ஏற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி புவனேஷ் பலியானார்.

    புவனேஷ் மரணம் தொடர்பாக தூத்துக்குடியில் வசிக்கும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மேலப்பாட்டாக்குறிச்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் கனகராஜ் படித்து முடித்துவிட்டு தந்தையுடன் விவசாயம் செய்து வருகிறார்
    • கடையநல்லூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்

    சாம்பவர்வடகரை:

    சாம்பவர்வடகரை அருகே உள்ள மேலப்பாட்டாக்குறிச்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் அழகு(வயது 45). இவரது மகன் கனகராஜ்(22). இவர் படித்து முடித்துவிட்டு தந்தையுடன் விவசாயம் செய்து வருகிறார்.

    நேற்று இரவு கனகராஜ் கடையநல்லூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். கம்புளி சாலையில் வந்து கொண்டிந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் வயலுக்கு போடப்பட்டு இருந்த வேலிக்கான கல்லில் மோதியது.

    இந்த விபத்தில் கனகராஜின் தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். தகவல் அறிந்த சாம்பவர் வடகரை போலீசார் அங்கு விரைந்து சென்று உயிரிழந்த கனகராஜ் உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அருண்குமார் தனது அறையில் நண்பர்களுடன் சிக்கன் பிரியாணி உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது.
    • மூச்சு திணறல் ஏற்பட்டு நெஞ்சு வலிப்பதாக அருண்குமார் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த லக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தீர்த்தகிரி.

    இவரது மகன் அருண்குமார் (வயது24). இவர் தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை பகுதியில் தங்கி இருந்து அங்குள்ள பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

    நேற்று அருண்குமார் தனது அறையில் நண்பர்களுடன் சிக்கன் பிரியாணி உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது.

    பின்னர் மூச்சு திணறல் ஏற்பட்டு நெஞ்சு வலிப்பதாக அவர் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.

    உடனடியாக அவரை நண்பர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பிரியாணி சாப்பிட்டவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 2 மாதம் முன்பு ராஜி மற்றும் ராஜுயுடன் சேர்ந்து 10 பேர் டெலிபோன் கேபிள் பதிக்கும் கூலி வேலைக்கு சென்றனர்.
    • உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று திரண்டுராஜி சாவில் மர்மம் உள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே கண்டாச்சிபுரம் போலீஸ் சரகம் மேல்வாழை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயவேல். அவரது மகன் ராஜி (வயது 34). இவர் ஊரில் வேலை இல்லாமல் இருந்தார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வடநெமிலி பகுதியை சேர்ந்த சங்கர் என்ற மேஸ்திரி மூலம் மும்பையில் வேலை பார்த்தால் அதிக சம்பளம் பெறலாம் என்று கடந்த 2 மாதம் முன்பு ராஜி மற்றும் ராஜுயுடன் சேர்ந்து 10 பேர் டெலிபோன் கேபிள் பதிக்கும் கூலி வேலைக்கு சென்றனர். இதனையடுத்து சம்பவத்தன்று ராஜி மும்பை அருகே உள்ள ெரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக ெரயிலில் அடிபட்டு இறந்தார் என்று பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. பின்னர்இறந்த ராஜியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து ஒப்பந்ததாரர் முன்னிலையில் போலீசார் ராஜி உடலை ராஜி ஊரான மேல்வாழைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த ராஜி உடல் இன்று காலை மேல்வாழைக்கு வந்தது. இதை அறிந்த ராஜியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று திரண்டுராஜி சாவில் மர்மம் உள்ளது. ராஜியை மும்பையில் வேலையில் சேர்த்த மேஸ்திரி சங்கர் நேரடியாக இங்கு வர வேண்டும் என்று கூறி அவர்கள் இறந்த ராஜி உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீசார், போலீஸ் டி.எஸ்.பி. பார்த்திபன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போரா ட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க ப்படும் என்று உறுதி அளி க்கபட்டது. அதனை தொட ர்ந்து போராட்டம் விலக்கி கொ ள்ள ப்பட்டது.

    • ராஜபாளையம் டி.பி.மில்ஸ் பகுதியில் பள்ளம் ஒன்று தோண்டப்பட்டு பணிகள் முடிந்தும் மூடப்படாமல் உள்ளது.
    • பள்ளத்தில் வாலிபர் ஒருவர் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளுடன் விழுந்து இறந்து கிடந்தார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக ராட்சத குழாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பல இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்கள் இணைக்கப்பட்டு வருகின்றன.

    ராஜபாளையம் டி.பி.மில்ஸ் பகுதியில் பள்ளம் ஒன்று தோண்டப்பட்டு பணிகள் முடிந்தும் மூடப்படாமல் உள்ளது. அந்தப்பகுதியில் இரும்பு தடுப்புகள் அமைக்காமல் எச்சரிக்கை டேப் மட்டும் கட்டப்பட்டிருந்தது.

    மேலும் அந்தப்பகுதியில் விளக்கு வெளிச்சம் குறைவாக இருப்பதாலும், நள்ளிரவு மற்றும் தற்போது அதிகாலையில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதாலும், மோட்டார் சைக்கிளில் செல்லும்போது எதிரே உள்ள மேடு, பள்ளங்களை பார்த்து வாகனங்களை இயக்க முடிவதில்லை.

    இந்நிலையில் அங்கிருந்த பள்ளத்தில் வாலிபர் ஒருவர் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளுடன் விழுந்து இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் அம்பலப்புளி பஜார் பகுதியை சேர்ந்த பொன் இருளப்பன்(வயது32) என்பதும் ஜவுளிக்கடையில் அவர் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நள்ளிரவில் கண் விழித்த அவரது மனைவி கணவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை என சந்தேகம் அடைந்தார்.
    • நாட்டறம்பள்ளி போலீசார் தென்னரசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி வி.ஐ.பி. நகர் தாயப்ப கவுண்டர் தெருவை சேர்ந்தவர் தென்னரசு (வயது 30) மார்க்கெட்டிங் பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார்.

    அந்த நேரத்தில் அவரது மனைவி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.

    தென்னரசு வீட்டில் உள்ள காலிங்பெல்லை அழுத்தினார். பலமுறை அழுத்தி சத்தம் கேட்டும் அவரது மனைவி கண் விழிக்கவில்லை.

    இதனை தொடர்ந்து அவரது மனைவிக்கு போன் செய்தார். அப்போதும் அவர் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் தென்னரசு 2-வது மாடியில் உள்ள அவரது வீட்டிற்கு சுவர் வழியாக ஏற முயன்றார். அப்போது தவறி வீட்டுக்கு பின்புறம் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதற்கிடையே நள்ளிரவில் கண் விழித்த அவரது மனைவி கணவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை என சந்தேகம் அடைந்தார்.

    இதுகுறித்து அவரது உறவினர் ஒருவருக்கு போனில் தகவல் தெரிவித்தார். அவரது உறவினர் அங்கு வந்து தென்னரசுக்கு போன் செய்தார்.

    அப்போது வீட்டின் பின்புறம் இருந்து தென்னரசுவின் செல்போன் ஒலிக்கும் சத்தம் கேட்டது. இதனால் அவர்கள் அங்கே சென்று பார்த்தனர். அப்போது தென்னரசு விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அவரை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் தென்னரசு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    நாட்டறம்பள்ளி போலீசார் தென்னரசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
    • உடல் மற்றும் தலையை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை தாழையூத்து அருகே உள்ள குறிச்சிகுளம் பகுதியில் இன்று காலை ஒரு வாலிபர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அங்கு அவரது உடல் மட்டும் கிடந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொது மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து அந்த வாலிபரின் தலையை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சிறிது தூரத்தில் தலை வீசப்பட்டிருந்தது. தொடர்ந்து உடல் மற்றும் தலையை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் கொலை செய்யப்பட்ட வாலிபர் குறித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அதே பகுதி குறிச்சிகுளத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் வெள்ளியப்பன் என்ற துரை (வயது 30) என்பது தெரியவந்தது.

    இவர் வெளியூரில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். ஊரில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று ஊர் திரும்பினார். இந்நிலையில் இன்று காலை அவரை மர்ம கும்பல் தலை துண்டித்து கொலை செய்துள்ளனர்.

    அதே பகுதியை சேர்ந்த ஒருவரது மனைவிக்கும் வெள்ளியப்பனுக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது.
    • குடிபோதையில் வாலிபர் ஒருவரை தாக்கிய சத்தம் கேட்டதாக அந்தப் பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

    குழித்துறை:

    குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ளது கழுவன்திட்டை.

    இந்த பகுதியில் இன்று காலை பொதுமக்கள் சென்றபோது சாலையில் வாலிபர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்தனர். அருகில் சென்று பார்த்த போது வாலிபரின் உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது.

    இதனால் சந்தேகமடைந்த மக்கள் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வாலிபரை பார்த்தபோது அவர் பிணமாக கிடப்பது தெரியவந்தது.

    வாலிபர் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இறந்த வாலிபர் களியல் பகுதியை சார்ந்த மணிகண்டன்(வயது39) என்பதும், டிரைவராக வேலை பார்ப்பதும் தெரிய வந்தது. அவரது உடலிலும், தலையிலும் காயங்கள் இருந்ததால் இவரை யாராவது அடித்து கொலை செய்து இங்கு கொண்டு வந்து உடலை வீசியிருக்கலாமா? அல்லது வேறு ஏதாவது காரணங்களால் அவர் இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று நள்ளிரவு கழுவன் திட்டை பகுதியில் சிலர் குடி போதையில் வாலிபர் ஒருவரை தாக்கிய சத்தம் கேட்டதாக அந்தப் பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிராவில் ஏதேனும் பதிவாகி உள்ளதா?என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
    • சம்பவம் குறித்து ஆரணி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி அத்திக்குளம் தெருவில் வசித்து வந்தவர் ரவி (வயது47) ஆவார். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 8-ம் தேதி சுப்பிரமணி நகர் பகுதியில் வசித்து வரும் மோகன் என்பவருடன் ரவி தனது வீட்டின் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டார்.

    அப்பொழுது ஏற்பட்ட தகராறில் மோகன் ரவியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாராம். இதில், மயங்கி விழுந்த ரவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கிருந்து சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ரவி பரிதாபமாக பலியானார்.

    இந்தச் சம்பவம் குறித்து ஆரணி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாணவியின் உடல் வைக்கப்பட்டு இருந்த குளிர்சாதன சவப்பெட்டியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது.
    • 3 பெண்கள் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் சாலையை சேர்ந்தவர் நந்தினி. இவருடைய மகள் அபிநயா (வயது16). ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த வாரம் காது வலிக்காக திருவொற்றியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அபிநயாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவி பலியானார்.

    நேற்று மதியம் மாணவி அபிநயாவின் உடல் இறுதி சடங்கிற்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது மாணவியின் உடல் வைக்கப்பட்டு இருந்த குளிர்சாதன சவப்பெட்டியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது.

    இதில் அருகில் நின்று கொண்டு இருந்த மாணவியின் உறவினர் அஜித் (வயது19) உள்பட 20 பேர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அஜித் பரிதாபமாக இறந்தார். மேலும் 3 பெண்கள் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தனர். இதனால் அருகில் இருந்தவர்கள் பதட்டம் அடைந்தனர்.

    அப்போது உடனடியாக வாலிபர் ஒருவர் முதல் உதவி சிகிச்சை அளித்து 2 பெண்ணின் உயிரை காப்பாற்றிய தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

    மின்சாரம் தாக்கியதில் சவுமியா, சுந்தரி உள்ளிட்டோர் மயங்கி விழுந்ததும் அவர்களை உடனடியாக வீட்டில் உள்ள மற்றொரு அறைக்கு தூக்கிச்சென்று வாய்மூலம் மூச்சுக்காற்றை ஊதியதாக தெரிகிறது. இதன் பின்னர் முதல் உதவி சிகிச்சை அளித்ததும் அவர்கள் நிலைமை ஓரளவு சீரானது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சோகத்திலும் விரைந்து செயல்பட்டு முதல் உதவி சிகிச்சை அளித்து காப்பாற்றிய அந்த வாலிபரை பொதுமக்கள் பாராட்டினர்.

    • அதிகாலை தொழிலாளி அம்ரேஷ் குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
    • எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவொற்றியூர்:

    எண்ணூர், தாழங்குப்பம் உலக நாதபுரம் 6-வது தெருவில் மாநகராட்சி சார்பில் மழை நீர்க் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    நேற்று மாலை தரையில் இருந்து 10அடி வரை பள்ளம் தோண்டி ஏற்கனவே போடப்பட்டிருந்த மழைநீர்க் கால்வாயை பொக்லைன் மூலம் அகற்றும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஏற்கனவே பக்கவாட்டில் உள்ள 10 அடி உயரம் 20 அடி அகலமுள்ள பழைய மழைநீர் கால்வாய் சுவர் திடீரென பள்ளத்தில் சரிந்து விழுந்தது.

    இதில் உள்ளே இறங்கி வேலை பார்த்து கொண்டிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ், அம்ரேஷ் குமார் (வயது20) ஆகியோர் சிக்கி கொண்டனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தொழிலாளர்கள் 2 பேரையும் மீட்டனர்.

    பலத்த காயம் அடைந்த அவர்களை ஸ்டான்லி அரசுஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை தொழிலாளி அம்ரேஷ் குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். மற்றொரு தொழிலாளி பிகாசுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குப்புசாமி தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
    • தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் மோட்டர் சைக்கிளுடன் வாலிபர் விழுந்தார்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சி மேல்பாவியைச் சேர்ந்தவர் குப்புசாமி (50). விவசாயி.

    இவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் தோட்டத்தில் தென்னங் கள்ளும் விற்று வந்துள்ளார். இது வனப்பகுதியையொட்டி உள்ளதால் தோட்டத்தை சுற்றிலும் மின்வேலியும் அமைத்திருந்தார்.

    நேற்று மாலை இவரது தோட்டத்திற்கு கள் குடிப்பதற்காக காளியூரை சேர்ந்த பழங்குடியின வாலிபரான ஜெயக்குமார் (34) தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    சிறிது நேரத்தில், அவருடன் வந்தவர்கள் கள் குடித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். ஆனால் ஜெயக்குமாருக்கு அதிக போதை ஏற்பட்டதால் அங்கேயே படுத்து விட்டார்.

    இந்த நிலையில் இரவு 7 மணியளவில் ஜெயக்குமார் எழுந்து, தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக மின்வேலியில் மோட்டார் சைக்கிளோடு விழுந்தார்.

    அப்போது யானைகள் வராமல் இருப்பதற்காக அமைக்கப்பட்ட மின் வேலியில் மின் இணைப்பு இருந்தது தெரியாததால், அதில் விழுந்த ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி பாலாஜி, காரமடை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், வட்டாட்சியர் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து காரமடை போலீசார் தோட்ட உரிமையாளரான குப்புசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது தோட்டத்தில் மின்வேலியில் சிக்கி ஒருவர் பலியான தகவல் அறிந்ததும் குப்புசாமி குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.

    ×