என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "youth fishermen"
- மீனவ இளைஞர்களுக்கு இலவச சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.
- தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்கப்படும்.
ராமநாதபுரம்
தமிழக கடலோர குழும ஆய்வாளர் கனகராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தவும், அவர்களை இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கப்பல் படையில் நவிக் (பொது) மற்றும் மாலுமி பணிகளிலும் இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேர்ப்பதற்கு ஏதுவாக (வழிகாட்டுதல்) இலவச சிறப்புப்பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப் படும் என்று முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கையின் போது அறிவித்தார்.
அதன்படி முதல் அணிக்கான 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த மார்ச் மாதம் முதல் ஏப்ரல் வரையிலான காலத் தில் நடத்தி முடிக்கப்பட்டது.
2-வது அணிக்கான 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பு நடப்பாண்டில் பிப்ரவரி-2023 மாத பிற்பகுதியில் தொடங்கப்பட உள்ளது.அதன்படி கடலோர பாதுகாப்பு குழுமத்தால் நடத்தப்படவுள்ள 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தகுதியுள்ள மீனவர் வாரிசுகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவே ற்கப்படுகின்றன.
மேற்படி விண்ணப்ப படிவங்களை சம்மந்தப் பட்ட கடலோர மாவட்ட மீன்வளத்துறை அலுவல கங்களிலிருந்தும், கடலோர பாதுகாப்பு குழும ஆய்வா ளர் அலுவலகங்களிலிருந்தும், மேலும் மீனவ கிராம கூட்டுறவு சங்கங்கள், ரேசன் கடைகள் ஆகிய இடங்களி லிருந்தும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். https://drive.google.com/drive/folders/1I8xcdsoXM9RH-O--ySMT2wJCoEXtWskh?usp=sharing என்ற இணையதள முக வரியிலிருந்து பதி விறக்கம் செய்து விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
மேற்படி பயிற்சி வகுப்புகள் 2023 பிப்ரவரி மாத பிற்பகுதியில் தொடங்கி தொடர்ந்து 3 மாத காலத்திற்கு கடலூர், ராம நாதபுரம் மற்றும் கன்னியா குமரி ஆகிய இடங்களில் இலவசமாக வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கடலோர மாவட்டங்களிலிருந்து தேர்வு செய்யப்படும் நபர்கள் அருகாமையிலுள்ள பயிற்சி மையத்திற்கு அனுப்பப்படுவர். தேர்வு செய்யப்படும் பயிற்சி யாளர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்கப்படும். மேலும், பயிற்சியாளர்களுக்கு 3 மாதங்களுக்கு மாதம் தலா ரூபாய் ஆயிரம் வீதம், பயிற்சிக்கால ஊக்கத் தொகையும் வழங்கப்படும்.
எனவே, பிளஸ்-2 வகுப்பு தேர்வில் மொத்த பாடங்களின் கூட்டுத் தொகையில் 50 சதவிகிதத்திற்கு மேலும் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக 50 சதவிகிதத்திற்கு மேலும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள உரிய உடற்கூறு தகுதிகளும் பெற்றுள்ள மீனவர் வாரிசுகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்