என் மலர்
நீங்கள் தேடியது "youth missing"
- சிறப்பு வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட அய்யப்பனை தேடும் பணி நடந்தது.
புதுச்சேரி:
தென்மேற்கு பருவமழை கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக புதுவையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 2 மேணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. 11 செ.மீ. மழை பதிவானது. இதனால் நகர பகுதியில் சாலைகள் வெள்ளகாடானது.
அதேநேரத்தில் நேற்று பகல் முழுவதும் கடும் வெயில் கொளுத்தியது. மாலையில் குளிர்ந்த காற்று வீசியது. இரவு 9.30 மணிக்கு இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இரவு 11 மணி வரை மழை பெய்த வண்ணம் இருந்தது.
இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அவதி அடைந்தனர்.மழை நின்றாலும் ஒரு மணி நேரத்துக்கு பிறகு தான் நீர் வடிந்தது.

மொத்தமாக கடந்த 24 மணி நேரத்தில் 15.5 செ.மீட்டர் மழை அளவு புதுச்சேரியில் பதிவானது.
இதனிடையே லாஸ்பேட்டை மேட்டுப்பகுதியில் இருந்து மழை வெள்ளம் தாழ்வான பகுதியான ஜீவானந்தபுரம் ஓடை வழியாக கொக்கு பார்க்கு பாலத்தை கடந்து சென்றது.
அப்போது ஒடையையொட்டி நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை எடுக்கச் சென்ற அந்த பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்பவர் வெள்ள நீரில் இழுத்து செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற சென்ற 2 பேரும் ஓடைவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து செயல்பட்டு இருவரை மீட்டனர். அய்யப்பனை மீட்க முடியவில்லை. அவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுட்டனர்.

நள்ளிரவையும் கடந்து தட்டாஞ்சாவடி மற்றும் கொக்கு பார்க் பகுதியில் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட அய்யப்பனை தேடும் பணி நடந்தது. தகவல் அறிந்து தொகுதி எம்.எல்.ஏ.வான வைத்தியநாதன் அங்கு வந்து தேடும் பணியை முடுக்கி விட்டார்.
இருப்பினும் அய்யப்பன் இன்னும் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில் கோடையின் போது வெயிலின் தாக்கத்தால் கூடுதல் விடுமுறை விடப்பட்டதை ஈடுகட்டும் வகையில் சனிக்கிழமைகளில் வேலை நாளாக அரசு அறிவித்து இருந்தது.
அதன்படி இன்று (சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படுவதாக இருந்தது. ஆனால் பலத்த மழை பெய்ததையொட்டி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கல்வி துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சுமார் 8 லட்சம் பேர் திரண்டிருந்தனர்.
- மாநாடு முடிந்து 14 நாட்கள் ஆன நிலையில், இதுவரை அவர் வீடு திரும்பவில்லை.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் கடந்த மாதம் 27ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சுமார் 8 லட்சம் பேர் திரண்டிருந்தனர்.
இந்நிலையில், விஜய்யின் தீவிர ரசிகரான திருவாரூர் மாவட்டம் கரையான்காடு பகுதியை சேர்ந்த மேகநாதன் என்கிற இளைஞர் த.வெ.ம மாநாட்டிற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.
ஆனால், மாநாடு முடிந்து 14 நாட்கள் ஆன நிலையில், இதுவரை அவர் வீடு திரும்பவில்லை.
மேகநாதனுடன் 34 பேர் மாநாட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால், மேகநாதன் மட்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அச்சத்தில் உள்ள மேகநாதனின் தந்தை புஷ்பநாதன், விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
அப்போது, மகனை கண்டுபிடித்து தருமாறு தந்தை போலீசாரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.
- மாநாட்டில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள், பொதுமக்கள் என கூடினர்.
- மாநாட்டிற்கு சென்ற இளைஞரை சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
சென்னை:
தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில முதல் மாநாடு அக்டோபர் மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்றது. தமிழக அரசியலே உற்று நோக்கிய இந்த மாநாட்டில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள், பொதுமக்கள் என கூடினர். இதனால் விக்கிரவாண்டி தொகுதியே ஸ்தம்பித்தது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு சென்று மாயமான மேகநாதனை மீட்டுத்தரக்கோரி அவரது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவை மீதான விசாரணையின் போது, மாநாட்டிற்கு சென்ற இளைஞரை சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மாயமானவர் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த 19-ந்தேதி துபாயில் இருந்து சென்னை திரும்புவதாக மனைவி காவியாவிடம் மணிகண்டன் தெரிவித்து இருந்தார்.
- மணிகண்டன் வீட்டுக்கு வரவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரிந்தது. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது.
ஆலந்தூர்:
மடிப்பாக்கம் அருகே உள்ள கோவிலம்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(35). இவரது மனைவி காவியா. கேட்டரிங் டெக்னாலஜி படித்துள்ள மணிகண்டன் துபாயில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் அவர் கடந்த 19-ந்தேதி துபாயில் இருந்து சென்னை திரும்புவதாக மனைவி காவியாவிடம் தெரிவித்து இருந்தார். ஆனால் மணிகண்டன் வீட்டுக்கு வரவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரிந்தது. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து காவியா, சென்னை விமான நிலையத்தில் விசாரித்தபோது, கணவர் மணிகண்டன் துபாயில் இருந்து திரும்பி வந்திருப்பதும், விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருப்பதும் தெரிந்தது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாயமான மணிகண்டனை தேடிவருகிறார்கள்.
கரூர்:
கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் முத் தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகன் பிரபாகரன் (29)
டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 27-ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார் .
பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது உறவினர் சகுந்தலா பசுபதிபளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டியைச் சேர்ந்த காதர் பாட்ஷா மகன் பாபர் மீரான் (வயது 25). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார்.
பின்னர் மீண்டும் சென்னைக்கு செல்வதாக கூறிச் சென்ற மீரான் மாயமானார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவரது நிறுவனத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பணிக்கு வரவில்லை என கூறி விட்டனர். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அவரை தேடி வருகின்றனர்.
இதே போல் நிலக்கோட்டை அருகே உள்ள இ.கோவில்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மகன் ராஜபாண்டி (வயது 35). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். சம்பவத்தன்று அருகில் உள்ள கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருவதாக கூறிச் சென்றார். ஆனால் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் விளாம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
தாம்பரம்:
கிழக்கு தாம்பரம் ஆனந்தா நகரில் வசித்து வருபவர் ஜான்காட்வின் (வயது 26) சாப்ட்வேர் என்ஜினீயர். இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. ஜான் காட்வினுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து வற்புறுத்தினர். ஆனால் அவர் திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்று கூறி வந்தார்.
இந்த நிலையில் ஜான் காட்வின் தனது பெற்றோருக்கு கடிதம் அனுப்பி விட்டு மாயமாகி விட்டார். அந்த கடிதத்தில் ‘‘எனக்கு திருமணம் செய்ய ஆசை இல்லை. திருமணத்துக்கு வற்புறுத்துவதால் நான் பிரிந்து செல்கிறேன். பரலோகத்தில் சந்திப்போம்’’ என்று எழுதப்பட்டு இருந்தது. இது குறித்து சிட்லபாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஈரோடு கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் அரவிந்த் (வயது 24). திருமணமாகி மனைவி உள்ளார்.
வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் பிறகு வீடு திரும்பவில்லை. மாயமாகி விட்டார்.
காணாமல் போன அன்று இரவு 10 மணிக்கு அரவிந்த் தனது மனைவியிடம் போன் செய்து நான் நீல்கிரிஸ் அருகே எல்.ஐ.சி அலுவலகம் முன்பு இருக்கிறேன். 10 நிமிடத்தில் வீட்டுக்கு வந்து விடுவேன் என்று கூறினாராம். ஆனால் அவர் இதுவரை வீட்டுக்கு வரவில்லை. இது குறித்து அரவிந்த் தந்தை ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தரக்கோரி புகார் மனு அளித்துள்ளார்.
விருதுநகர்:
விருதுநகர் சங்கரலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 32). இவருக்கும் மல்லிபுதூர் பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வி (23) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின்னர் கருப்பசாமி தம்பதியர் திருப்பூரில் வேலை செய்யச் சென்றனர். அங்கு தங்கி வேலை பார்த்த நிலையில் போதிய வருமானமின்றி சொந்த ஊர் திரும்பி விட்டனர்.
பிறகு கருப்பசாமி மீண்டும் திருப்பூர் செல்ல திட்டமிட்டார். மனைவி முத்துச் செல்வியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு கருப்பசாமி மட்டும் திருப்பூர் சென்றார்.
அதன் பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லாததால் முத்துச்செல்வி கணவரை தேடிச் திருப்பூர் சென்றார். ஆனால் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து விருதுநகர் திரும்பிய முத்துச்செல்வி ஆமத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கருப்ப சாமியை தேடி வருகின்றனர்.
பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி, எஸ்.பி.கோவில் தெரு, இருளர் காலனியில் வசித்து வந்தவர் வினோத் (வயது 23). வேன் டிரைவர். இவரது மனைவி சங்கீதா.
இவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 16-ந் தேதி இரவு வினோத்துக்கு செல்போனில் அழைப்பு வந்தது. இதுபற்றி அவர் மனைவி சங்கீதாவிடம் வேலைக்கு செல்வதாக கூறி வீட்டைவிட்டு சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் வினோத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது பற்றி சங்கீதா ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தொழில் போட்டியில் வினோத்தை யாரேனும் கடத்தினார்களா? அல்லது பெண் தகராறு காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடியை சேர்ந்தவர் தேவராஜன். ஓய்வு பெற்ற ராணுவ வீரர் இவரது மகள் லாவண்யா. இவரும் ஆலத்தம்பாடியை சேர்ந்த விக்னேஷ் என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது இந்த நிலையில் தனது திருமணத்தை மறைத்து விக்னேஷ் கோட்டூரை சேர்ந்த தனது அத்தை மகளை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாராம். இதையறிந்த அவரது அத்தை விக்னேஷ் ஏமாற்றி திருமணம் செய்தது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் செய்தார். இது குறித்து விசாரணைக்காக விக்னேஷை போலீசார் அழைத்துச் சென்றனர். பின்னர் விக்னேஷ் தலைமறைவானார்.
தனது கணவரை இரண்டாவது மனைவியின் உறவினர்கள் கடத்தி சென்று விட்டதாகவும் கண்டுபிடித்து தர வேண்டுமென்று லாவண்யா திருத்துறைப்பூண்டி போலீசில் புகார்செய்தார். இதுகுறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் முருகதாஸ் தலைமையில் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் ,மவட்ட செயற்குழு முருகானந்தம் , ஒன்றிய செயலாளர்கள் காரல்மார்க்ஸ், ராமச்சந்திரன், நகர செயலாளர் ரகுராமன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த டி.எஸ்.பி. இனிக்கோதிவ்யன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. #tamilnews