என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Zonal Committee Meeting"
- அரசு கட்டிடத்தில் ஆலந்தூர் மண்டல அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
- கூட்டத்தில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆலந்தூர்:
சென்னை மாநகராட்சியின் ஆலந்தூர் 12-வது மண்டல அலுவலகம் ஆலந்தூர், புதுப்பேட்டை தெருவில் செயல்பட்டு வந்தது. மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிக்காக இந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 3 மாதத்துக்கு முன்பு கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள அரசு கட்டிடத்தில் ஆலந்தூர் மண்டல அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
இங்கு போதிய இடவசதி இல்லை. இந்தநிலையில் ஆலந்தூர் மண்டல குழு கூட்டம் இன்று தலைவர் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கவுன்சிலர்கள் மற்றும் மண்டல அதிகாரி சீனிவாசன் உள்பட சுமார் 70 பேர் பங்கேற்றனர். ஆனால் போதிய இடவசதி இல்லாததால் அதிகாரிகள் கூட்டத்தில் நின்றபடி பங்கேற்கும் நிலை ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பிறகு அதிகாரிகளுக்கு தனியாக நாற்காலிகள் கொண்டுவரப்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- கூட்டத்தில் வார்டுகளில் உள்ள குறைகள் மற்றும் அதனை சரி செய்வது குறித்து விவாதித்தனர்.
- கொடுங்கையூர் ஆர்.ஆர். நகரில் ரூ.25 லட்சம் செலவில் பல்நோக்கு மையம் தொடங்கப்பட உள்ளது.
ராயபுரம்:
தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மண்டலம் 4-ல் மண்டல குழு கூட்டம், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வார்டுகளில் உள்ள குறைகள் மற்றும் அதனை சரி செய்வது குறித்து விவாதித்தனர். கூட்டத்தில் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் 64 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதில் வியாசர்பாடி கல்யாணபுரத்தில் பல்நோக்கு மையம் ரூ. 25 லட்சம் செலவில் தொடங்குவது. தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவில் உள்ள மாநகாட்சி தொடக்கப் பள்ளியில் கூட்ட அரங்கம் கட்டுவதற்காக ரூ. 75 லட்சம் செலவில் நிதி ஒதுக்கப்பட்டது.
அதேபோல் கொடுங்கையூர் ஆர்.ஆர். நகரில் ரூ.25 லட்சம் செலவில் பல்நோக்கு மையம் தொடங்கப்பட உள்ளது. மேலும் மழைக்காலம் தொடங்குவதற்குள் மழை நீர் கால்வாய் பணிகளை முடித்து சாலைகளை விரைவில் அமைத்திட கோரி அதிகாரிகளுக்கு மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் உத்தரவிட்டார்.
இதில் தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள், மாநகராட்சி செயற்பொறியாளர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், குடிநீர் வாரிய அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்