என் மலர்
நீங்கள் தேடியது "ஆராய்ச்சி"
- மண்ணில் நுண்ணுயிரிகள் பெருக்கம் அடைகின்றன.
- விவசாயிகள் மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் வேளாண் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான உயர்தர உள்ளூர் பாரம்பரிய ரகங்களை பிரபலப்படுத்தும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் பால சரஸ்வதி வரவேற்றார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசும்போது:-
இயற்கை வேளாண்மைக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். அங்கக வேளாண்மையில் மண்ணின் வளம் பாதுகாக்கப்படுகிறது. மண்ணில் நுண்ணுயிரிகள் பெருக்கம் அடைகின்றன . விவசாயிகள் மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர் (பொ ) ராஜப்பன், முனைவர் மணிமாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். உளவியல் துறை இணை பேராசிரியர் இளமதி உயிர் உரங்களின் பயன்பாடு குறித்து பேசினார்.
மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோமதி தங்கம், விவசாயிகளுடன் நேரடி கலந்துரையாடல் நடத்தி பாரம்பரிய நெல் பயிரிடுவதில் உள்ள இடர்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
இதில் முனைவர்கள் தண்டாயுதபாணி, புஷ்பா, ஆனந்தி, சித்ரா, அருள்செல்வி, முன்னோடி விவசாயி தளபதி, வேளாண்மை துணை இயக்குனர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் இளஞ்செழியன் இந்த கருத்தரங்கை தொகுத்து வழங்கினார். முடிவில் வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா நன்றி கூறினார்.
- விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா வித்யாலயா மாணவி தேர்வு செய்யப்பட்டார்.
- பயிற்சி பெற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
இளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டத்தில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி கவின் கிருஷிகா தேர்வானார். இதனால் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் ராக்கெட் தொழில்நுட்பங்கள் பார்வையிட இஸ்ரோ நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இதற்காக இளம் விஞ்ஞானி திட்டம் அமல்படுத்தியது. இது இஸ்ரோ நிதி உதவியுடன் பள்ளி மாணவர்களின் கல்விக்கான பயிற்சி திட்டம் ஆகும். இதற்கான தேர்வு ஆன்லைனில் ஸ்பேஸ் க்விஸ் என்ற தேர்வு நடத்தப்பட்டது.
இதில் சத்யா வித்யாலயா பள்ளி மாணவி எஸ்.ஆர். கவின் கிருஷிகா தேர்வானார். இதனைத் தொடர்ந்து இஸ்ரோ நிர்வாகம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை மாணவி கவின் கிருஷிகாவுக்கு மே 14-ந் தேதி முதல் 26-ந் தேதி பார்வையிடவும், பயிற்சி பெறவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- ரத்த ஓட்டத்தில் உள்ள கட்டி செல்கள் தேர்ச்சி பெறுவதற்கு எண்டோபிலியா சிகிச்சை முறையை முதலில் கடைபிடிக்க வேண்டும்
- மனித திசுக்களில் மெட்டாஸ்டாசிஸை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.
புற்றுநோய் தற்போது பெரும் சவாலாக மாறி வருகிறது. எந்த வயதினரையும் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. புற்றுநோய் காரணமாக சுமார் 13 சதவீதம் மனித உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 14.1 மில்லியன் மக்கள் இந்த நோயால் தாக்கப்படுகின்றனர். இவற்றில், 8.8 மில்லியன் இறப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன
நுரையீரல் புற்றுநோய், முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய், பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய், வயிற்றுப் புற்றுநோய் (இரைப்பைப் புற்றுநோய்) பெண்களில் மார்பகப் புற்றுநோய், கருப்பப்பை வாய்ப் புற்றுநோய், பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய், நுரையீரல் புற்றுநோய் என பலவகை உள்ளன. குழந்தைகளையும் புற்றுநோய் விட்டு வைப்பதில்லை. 2012-ம் ஆண்டில், 165,000 எண்ணிக்கையான 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டனர். வளர்ந்து வரும் நாடுகளில் புற்று நோய் அதிகளவில் பரவுகிறது.
உடலின் ஒரு பகுதியில் உருவாகும் புற்றுநோய் மற்ற பகுதிகளுக்கும் பரவி நோயாளியின் நிலையை சிக்கலாக்குகிறது.அத்தகையவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும் கடினம்.
இந்நிலைதான் பெரும்பாலான புற்றுநோய் இறப்புகளுக்கு காரணம். கட்டி செல்கள் ரத்த ஓட்டத்தில் இருந்து வெளியேறி மற்ற உறுப்புகளுக்கு பரவுகின்றன.
இதனை தடுக்க அமெரிக்க, பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் புதிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்ஐடி) மற்றும் பிரிட்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன் (யுசி) விஞ்ஞானிகள் மெட்டாஸ்டாசிஸின் வழிமுறைகளை ஆழமாக ஆராய்ச்சி செய்தனர்.
முதன்முறையாக, விஞ்ஞானிகள் புற்றுநோய் செல்கள் உறுப்புகளில் ஊடுருவும் முறையை விரிவாக கண்டுபிடித்தனர். புற்றுநோயானது உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவுவதைத் தடுக்கும் நோக்கில் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
புதிய மருந்துகள் தயாரிக்க இந்த ஆராய்ச்சி வழிவகை செய்யப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
உடலில் ஒரு இடத்தில் புற்றுநோய் தொடங்குகிறது. அங்கிருந்து கட்டி செல்கள் உடைந்து, ரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலத்தின் மூலம் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவுகிறது. இது மெட்டாஸ்டாஸிஸ் என்று அழைக்கப்படுகிறது.
இதன் விளைவாக மற்ற உறுப்புகளில் 2-ம் நிலை கட்டிகள் உருவாகின்றன. புற்றுநோய் செல்கள் ரத்த ஓட்டத்தில் அல்லது நிணநீர் மண்டலத்தில் நுழைவதற்கு முன்பு முதன்மைக் கட்டியிலிருந்து பிரிந்து செல்ல வேண்டும். கட்டி பெரிதாகி, அருகில் உள்ள திசு, நிணநீர், ரத்த நாளங்களில் பரவும் போது அந்த செல்கள்தான் முதன்மையான தளமாக அமைகிறது.
புற்றுநோய் பரவலை தடுக்க விஞ்ஞானிகள் அதன் முன்மாதிரியை ஆய்வகத்தில் உருவாக்கியுள்ளனர்.
ரத்த ஓட்டத்திற்கும் உடலின் மற்ற பகுதிகளுக்கும் இடையில் எண்டோடெலியம் எனப்படும் ஒரு அடுக்கு உள்ளது. விஞ்ஞானிகள் இதை முன்மாதிரியாகக் கொண்டுள்ளனர்.
ரத்த ஓட்டத்தில் உள்ள கட்டி செல்கள் தேர்ச்சி பெறுவதற்கு எண்டோபிலியா சிகிச்சை முறையை முதலில் கடைபிடிக்க வேண்டும் என்பதை விஞ்ஞானிகள் அங்கீகரித்துள்ளனர்.
"சேற்றில் சிக்கிக் கொண்டால், வெளியே வருவதற்கு கல் போன்ற சுவர் வேண்டும். புற்றுநோய் செல்கள், எண்டோடெலியத்தில் இருந்து வெளியேறி, மற்ற சுவர்களில் பரவுவதையே தடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
உடலில் உள்ள திசுக்களில் அதிக நுண்துளைகள் உள்ளன. மென்மையானதாக இருப்பதால் மேலும் வேகமாக புற்றுநோய் செல்கள் ஊடுருவ முடியும் என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.
உடலில் உள்ள குறிப்பிட்ட திசுக்களின் புதிய வேதியியல் பண்புகள் 2-ம் நிலை கட்டிகள் எங்கு உருவாகின்றன என்பதை தீர்மானிக்க முடியுமா என்ற கேள்வியை இந்த ஆராய்ச்சி எழுப்பியுள்ளது.
மனித திசுக்களில் மெட்டாஸ்டாசிஸை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.
இந்த ஆராய்ச்சி மூலம் உடலில் புற்றுநோய் பரவலை தடுக்க முடியுமா? எனவும் மருத்துவ வல்லுனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
- வருகிற 16-ந்தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
- காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பயிற்சி நடைபெறுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் தஞ்சை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) வெள்ளாடு வளர்ப்பு குறித்தும், 16-ந்தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்தும், 23-ந்தேதி கறவை மாடு வளர்ப்பு குறித்தும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பயிற்சி நடைபெறுகிறது.
விருப்பம் உள்ளவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். பயிற்சியில் பங்குபெற முன்பதிவு அவசியமில்லை. பயிற்சியில் பங்கு பெறுபவர்கள் ஆதார் நகலுடன் வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வாழை, உரிய வளர்ச்சி அடையாததால் 3 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
- கோவை வேளாண்மை பல்கலை வல்லுனர்கள் உள்ளிட்டோர், நாளை 9-ந்தேதி நேரில் வந்து உரிய வளர்ச்சியடையாத வாழைக்கன்றுகளை ஆய்வு செய்ய உள்ளனர்.
அவிநாசி:
அவிநாசி வட்டம், சேவூர் அடுத்த தண்டுக்காரன் பாளையம், ராமியம்பாளையம், குமாரபாளையம், புஞ்சை தாமரைக்குளம், ஆதராம்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தனியார் நிறுவனம் ஒன்றில், கடந்த 2022 செப்டம்பர் மாதம் வாழைக்கன்றுகள் வாங்கி பயிரிட்டனர். வாழை, உரிய வளர்ச்சி அடையாததால் 3 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
வாழைக்கன்றுகளை விற்ற தனியார் நிறுவனத்தினர், விவசாயிகள், தோட்டக்கலை துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற பேச்சுவார்த்தை அவிநாசி தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் மோகனன் தலைமை தாங்கினார். தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சந்திரகவிதா, உதவி இயக்குனர் உமா சங்கரி, துணை தாசில்தார் சாந்தி, சேவூர் ஆர்.ஐ., திவ்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சி வாழை ஆராய்ச்சி மைய அதிகாரிகள், கோவை வேளாண்மை பல்கலை வல்லுனர்கள் உள்ளிட்டோர், நாளை 9-ந்தேதி நேரில் வந்து உரிய வளர்ச்சியடையாத வாழைக்கன்றுகளை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து கலெக்டருக்கு அறிக்கை தாக்கல் செய்வர் என்று முடிவு செய்யப்பட்டது.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், சட்ட விழிப்புணர்வு ஆணை மாநில செயலாளர் சதீஷ்குமார், வேளாண் தொழில் முனைவோர் மன்ற மாநில செயலாளர் வேலுச்சாமி, நவீன்பிரபு, ஜோதி அருணாச்சலம், குருசாமி மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
- இந்த சோதனை தொடர்பான அறிக்கையை கடந்த ஜூன் 20 ஆம் தேதி நாசா வெளியிட்டுள்ளது.
- இந்த ஆய்வானது நாசாவின் DART (Double Asteroid Redirection Test) எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட முதல் ஆய்வாகும்.
பூமிக்கு அதிக ஆபத்து விளைவிக்கக்கூடும் என்று என்று அஞ்சப்படும் விண்கல் ஒன்று பூமியைத் தாக்க 72% சதவீத வாய்ப்புகள் இருபதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விண்கல் பூமியில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை தடுக்க இன்னும் நாம் தயாராகாவில்லை என்று நாசா எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நாசாவால் ஒருங்கிணைக்கப்பட்டு, மாரிலாந்தில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட, கிரகங்களின் பாதுகாப்பு தொடர்பான சோதனையில், பூமிக்கு விண்வெளியிலிருந்து ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. இந்த சோதனை தொடர்பான அறிக்கையை கடந்த ஜூன் 20 ஆம் தேதி நாசா வெளியிட்டுள்ளது.


அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 'உலகுக்கு வருங்காலங்களில் விண்கற்களால் அதிக ஆபத்து இருந்து வரும் நிலையில் அதிலிருந்து தற்காத்துக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா என்பதற்கு இந்த ஆராய்ச்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்த ஆய்வில் இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத விண்கலம் ஒன்று பூமியை நோக்கி நகர்வதாகவும் இன்னும் 14 வருடகங்களில் துல்லியமாக 2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பூமியை தாக்கி அதிக சேதங்களை ஏற்படுத்த 72 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விண்கலின் எடை, அளவு மற்றும் தன்மைகள் குறித்து ஆய்வில் தெரிந்துகொள்ள முடியவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வானது நாசாவின் DART (Double Asteroid Redirection Test) எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட முதல் ஆய்வாகும். விண்கற்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பூமியைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமே DART. இதற்கிடையில், விண்கற்களை தொலைவில் இருந்து பார்க்க NEO Surveyor (Near-Earth Object Surveyor). எனப்படும் இன்பிராரெட் தொலைநோக்கியை நாசா உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

- இதை வாரத்தின் சிறந்த வானியல் புகைப்படமாக குறிப்பிட்டு சிலாகித்துள்ளது.
- சாதாரண மின்னலை விட 50 மடங்கு அதிக சக்தியுடையதாக உள்ளது
அமேரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விண்வெளி மையம் பிரபஞ்சத்தைப் பற்றிய புதுப்புது உண்மைகளை தனது அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் செய்யும் ஆராய்ச்சிகளின் மூலம் வெளிப்படுத்தியவாறு இருக்கிறது.
அந்த வகையில் சீனா, பூட்டான் நாடுகளை ஒட்டிய இமயமலைப் பகுதியின்மீது சிவப்பு மற்றும் ரோஸ் வண்ணக்களஞ்சியங்களாக இரவு நேரத்தில் விண்ணில் இருந்து மின்னலாக பாய்ந்த ராட்சத ஒளித்திரள்களை [GIGANTIC JETS] படம்பிடித்து நாசா வெளியிட்டுள்ளது. அரிதினும் அரிதாக ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்த இந்த நிகழவைப் படப்பிடித்துள்ள நாசா, இதை வாரத்தின் சிறந்த வானியல் புகைப்படமாக குறிப்பிட்டு சிலாகித்துள்ளது.
இதற்குமுன் இல்லாதவகையில் 21 ஆம் நூற்றாண்டில் மட்டுமே நடக்கும் இந்த நிகழ்வானது, இடியுடன் மின்னல் அடிக்கும்போது பூமியின் அயோனோஸ்பியர் வளிமண்டல அடுக்குகளில் ஏற்படும் சூரிய கதிர்வீச்சுகளாலும், காஸ்மிக் கதிர்வீசுகளாலும் இந்த வண்ணக்குழப்புகள் ஏற்பட்டு வானில் ஒளிதிரளான மின்னல்களாக அவை இறங்கும் காட்சி உருவாகியுள்ளது என நாசா விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தொடர்ச்சியாக விழுந்த இந்த 4 ஒளித்திரள் ஜெட் மின்னல்களும் ஒன்றுக்கொன்று சில நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து விழுந்துள்ளன. வளிமண்டலத்தின் மேற் பரப்பில் உள்ளதால் மின்னலின் மேற்புறத்தில் சிவப்பு நிறமாகவும், பூமியை நோக்கி வரும் கீழ் பகுதி ரோஸ் நிறத்திலும் உள்ளது. இது சாதாரணாமாக ஏற்படும் மின்னலாகவன்றி மிகப்பெரிய அளவுடையதாகவும் சாதாரண மின்னலை விட 50 மடங்கு அதிக சக்தியுடையதாகவும் உள்ளது.
- கரைந்த ஆக்சிஜன் ஆனது கடல் மற்றும் நன்னீர் பரப்பில் வாழும் உயிரினங்களுக்கு இன்றியமையாததாகும்.
- கடலில் ஆக்சிஜன் அளவு குறைவது மனிதர்களுக்கும் ஆபத்தாக மாறும்
அமரிக்க ஆராய்ச்சியாளர்களால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகின் நீர்நிலைகளில் உள்ள கரைந்த ஆக்சிஜனின் அளவு வேகமாக குறைந்துவருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக காலநிலை மாற்றம் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கடல், நதி என பூமியின் 70 சதவீத பரப்பு நீரினால் ஆனதாகும். உலகில் உயிர்கள் வாழ்வதற்கு அத்தியாவசிய தேவையும் நீரே ஆகும். இந்த சூழலில் நீர் நிலைகளில் ஆக்சிஜன் வேகமாக குறைந்து வருவதால் நீரை சார்ந்துள்ள உயிர்க்கோலம் பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. ஏனெனில் கரைந்த ஆக்சிஜன் ஆனது கடல் மற்றும் நன்னீர் பரப்பில் வாழும் உயிரினங்களுக்கு இன்றியமையாததாகும்.
எனவே ஆக்சிஜன் குறைவால் கடல் உயிரிகள் அழிவது உணவுச் சங்கிலியில் பிளவை ஏற்படுத்தும். மேலும் உலகத்திற்கு தேவையான 70% ஆக்சிஜன் கடலிலிருந்துதான் உற்பத்தியாகிறது. ஆகையால் கடலில் ஆக்சிஜன் அளவு குறைவது மனிதர்களுக்கு ஆபத்தாக மாறும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
- இவை நுரையீரல் பாதிப்பு, மாரடைப்பு, உடல் எடை கூடுதல் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படும்
- 1 கிலோ ஆர்கானிக் அல்லாத சர்க்கரையில் 68.25 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும் உள்ளன
உணவுக்கு சுவை சேர்க்கும் உப்பும் சர்க்கரையும் அத்தியாவசிய சமையல் பொருட்களில் பிரதானமானது. இந்தியாவில் விற்பனையாகும் அத்தகு உப்பிலும் சர்க்கரையில் மைக்ரோபிளாஸ்டிக்கள் கலந்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
Toxics Link என்ற சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அமைப்பு நடந்திய சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து பிராண்டு சர்க்கரை மற்றும் உப்பில், நுரையீரல் பாதிப்பு, மாரடைப்பு, உடல் எடை கூடுதல் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும் மைக்ரோபிளாஸ்டிக்கள் எனப்படும் நுண் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தூள் உப்பு, கல் உப்பு என இரண்டிலும் இந்த துகள்கள் உள்ளன. ஆன்லைன் மூலமாகவும், கடைகளிலும் வாங்கிய சர்க்கரை உப்பு வகைகளை அந்நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தி இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.
ஒரு கிலோ தூள் உப்பான அடியோடின் கலந்த உப்பில் 89.15 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும், ஒரு கிலோ கல் உப்பான ஆர்கானிக் உப்பில் 6.70 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும் உள்ளன. மேலும் ஒரு கிலோ ஆர்கானிக் சர்க்கரையில், 11.85 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும், 1 கிலோ ஆர்கானிக் அல்லாத சர்க்கரையில் 68.25 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும் உள்ளன. இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் 0.1 mm முதல் 5 mm அளவில் காணப்படுகின்றன.
- 2022 மற்றும் 2045க்கு இடையில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் கடுமையாக அதிகரிக்கும்
- கடந்த 2020 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் புற்றுநோய் பாதிப்பு 12.8% அதிகரித்துள்ளது
இந்தியாவில் வரும் 2045 க்குள் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிக்கும் என்று தேசிய மருத்துவ ஆராய்ச்சி கழகமான ஐசிஎம்ஆர் [ICMR] எச்சரித்துள்ளது. BRICS நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகியவற்றில் புற்றுநோய் பாதிப்பு மற்றும் தாக்கம் குறித்த ஆய்வானது நடத்தப்பட்டது.
ஐசிஎம்ஆர் நடத்திய இந்த ஆய்வின்படி , 2022 மற்றும் 2045க்கு இடையில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் கடுமையாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை நடத்திய 5 பேர் கொண்ட குழு, இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் புற்றுநோய் பாதிப்பு 12.8% அதிகரித்துள்ளதாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. புகையிலை பொருட்கள் அதிகம் உட்கொள்ளப்படுவதால் மற்ற நாடுகளை விட இந்தியாவில் வாய் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்புகளைக் குறைக்க முதற்கட்டமாக சுகாதார காரணிகளை மேம்படுத்தவேண்டும் என்று கூறப்படுகிறது.
- இமயமலை பகுதிகளில் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு புதிய பாம்பு இனத்தை கண்டுபிடித்தனர்.
- வருடத்தில் மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே வெளியில் காணப்படுகிறது.
இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பாம்பு இனத்துக்குப் பிரபல ஹாலிவுட் நடிகர் லியார்னடோ டி காப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கோவிட சமயத்தில் தனது வீட்டின் பின்னால் இருந்த ஒரு அரிய பம்பை இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.
இதனைத்தொடர்ந்து இது பேசுபொருளாக நிலையில் இதை பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்யப்பட்டது. அதன்படி இமயமலை பகுதிகளில் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு புதிய பாம்பு இனத்தை கண்டுபிடித்தனர். நேபாள் நாட்டின் மத்திய பகுதி முதல் இமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டம் வரை பரவி உள்ளதாக கண்டறியப்பட்ட பாம்பு இனத்துக்கு ஆங்குய்குலஸ் டிகாப்ரியோய் [Anguiculus dicaprioi] என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

டைட்டானிக் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற லியார்னர்டோ டி காப்ரியோ காலநிலை மாற்றம் மற்றும் சூழலியல் தொடர்பாக தொடர்ந்து செயல்பட்டு வருவதால் அவரை கவுரவிக்கும் விதமாக அவரது பெயரை இந்த பாம்பு இனத்துக்கு ஆராய்ச்சியாளர்கள் சூட்டியுள்ளனர்.
இதைத்தவிர்த்து சிக்கிம் பூடான் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றில் உள்ள இமயமலை பகுதிகளில் கண்டறியப்பட்ட மற்றொரு பாம்பு இனத்துக்கு ஆங்குய்குலஸ் ராப்பி [Anguiculus rappii] என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு வகை பாம்புகள் வருடத்தில் மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே வெளியில் காணப்படுகிறது. அதிலும் ஆங்குய்குலஸ் ராப்பி அரிதினும் அரிதாகவே தென்படக்கூடியதாக உள்ளது.
- குடிநீரில் லிட்டருக்கு 15 மைக்ரோகிராம் மேல் இருக்கக்கூடாது, ஆனால் இங்கு குடிநீரில் லிட்டருக்கு 100 மைக்ரோகிராம் யுரேனியம் உள்ளது.
- பஞ்சாப் மற்றும் ஹரியானா உட்பட 12 மாநிலங்களில் குடிநீரில் யுரேனியத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புகளைத் தாண்டிவிட்டது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மக்கள் குடிநீராகப் பயன்படுத்தும் நிலத்தடி நீரில் அபாயகரமான அளவுக்கு யுரேனியம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்களுக்குப் புற்றுநோய்கள், நுரையீரல் பாதிப்பு, தோல் மற்றும் சிறுநீரக நோய்கள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
2017 இல் வெளியான உலக சுகாதார அமைச்சகத்தின் பரிந்துரைப்படி குடிநீரில் லிட்டருக்கு 15 மைக்ரோகிராம் மேல் இருக்கக்கூடாது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மற்றும் லிட்டருக்கு 30 கிராம் வரை யுரேனியம் கலந்திருந்தாலும் பிரச்சனையில்லை என்று கூறுகிறது.
ஆனால் சத்தீஸ்கரில் உள்ள துர்க், ராஜ்நந்த்கான், கான்கெர், பெமேதாரா, பலோட் மற்றும் கவர்தா ஆகிய மாவட்டங்களில் இருந்து எடுக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளில் லிட்டருக்கு 100 மைக்ரோகிராம் அளவுக்கு அதிகமாக யுரேனியம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகப்படியாக பலோடில் உள்ள கிராமம் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியில் லிட்டருக்கு 130 மைக்ரோகிராம் அளவுக்கு யுரேனியம் கலந்துள்ளது.

மேலும் ஆறு மாவட்டங்களில் 1 லிட்டர் குடிநீரில் சராசரியாக 86 முதல் 105 மைக்ரோ கிராம் அளவுக்கு யுரேனியம் கலந்திருக்கிறது. இதனால் அந்த நீரை குடிக்கும் மக்களுக்கு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆனால் இதற்கான தீர்வு குறித்து பெரிய அளவிலான விவாதமோ முன்னெடுப்போ மேற்கொள்ளப்படாதது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சத்தீஸ்கரில் மட்டுமின்றி முன்னதாக கடந்த ஜனவரியில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் வெளியிட்ட ஆய்வின்படி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உட்பட 12 மாநிலங்களில் குடிநீரில் யுரேனியத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புகளைத் தாண்டிவிட்டதாகத் தெரியவந்துள்ளது.