என் மலர்
நீங்கள் தேடியது "நகை"
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே விளாம்பாவூர் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் இவரது மனைவி காயத்ரி (வயது 24) இவர் இன்று காலை விளாம்பாவூரிலிருந்து காட்டு மயிலூர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
அங்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது குழந்தையை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் காட்டுமயிலூரிலிருந்து வேப்பூருக்கு சென்றார். அப்போது இவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் வந்தார்.
அவர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற காயத்ரி கழுத்தில் இருந்த 3 பவுன் தாலி செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்து சென்றார். அப்போது காயத்ரி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இது குறித்து காயத்ரி வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டிவி. கேமராவை ஆராய்ந்து செயினை பறித்து சென்ற நபரை வலைவீசி தேடி வருகின்றார்.
- பெண்ணிடம் நகை பறித்த போலீசுக்கு டிமிக்கி கொடுத்த கொள்ளையர்கள் சிக்கினர்.
- 2 மாதங்களுக்கு பிறகு மதுரைக்கு திரும்பிய தகவல் போலீசுக்கு கிடைத்தது.
மதுரை
மதுரை திருப்பாலை, பொன்விழா நகரை சேர்ந்தவர் அகி லாண்டேசுவரி (வயது 39). இவரது கணவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சம்பவத்தன்று அகிலா ண்டேசுவரி ஓட்டலில் சாப்பாடு வாங்கிவிட்டு வீடு திரும்பி ெகாண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பின் தொடர்ந்து அகிலாண்டேசுவரி அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.
இந்த வழக்கில் தொடர்பு டைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகநாதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் குற்றவாளிகள் பற்றிய விவரம் தெரிய வந்தது. அவர்கள் மதுரையில் இருந்து போலீசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டதும் தெரியவந்தது.
இந்த நிலையில் இருவரும் 2 மாதங்களுக்கு பிறகு மதுரைக்கு திரும்பிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வீட்டில் பதுங்கியிருந்த மூன்றுமாவடி மகாலட்சுமி நகர் உப்பிலி மாடசாமி என்ற மருது(25), வளர்நகர், அம்பலகாரன்பட்டி செல்வம் மகன் நவநீதன் (23) ஆகியோரை ேபாலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
திட்டக்குடி அருகே அடரி கிராமத்தில் சேலம் மெயின் ரோட்டில் வசிப்பவர் கபிலன் (வயது32) . இவர் விருத்தாச்சலம் ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.இவர் வழக்கம் போல் தனது வீட்டை பூட்டிவிட்டு சாவியை பக்கத்தில் உள்ள ஓட்டு வீடு மாடத்தில் வைப்பது வழக்கம். அதன்படி வழக்கம் போல் சாவியை வைத்துவிட்டு சென்றுள்ளார்.
இவர் மதியம் தனது மனைவியுடன் வீட்டிற்கு வந்த பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.பின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ளே பீரோவில் இருந்த 8 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.இது குறித்து புகாரின் பேரில் சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- சேலம் சூரமங்கலம் சின்னமோட்டூர் பகுதியில் கூலி தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை.
- உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த ரூ.25,000, 2 1/2 பவுன் தங்க நகைகள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.
சேலம்:
சேலம் சூரமங்கலம் சின்னமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி ரத்தினாம்பாள் (வயது 47). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் மாலை வீடு திரும்பியபோது, முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த ரூ.25,000, 2 1/2 பவுன் தங்க நகைகள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ரத்தினாம்பாள் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- சேலம் அருகே உள்ள வேம்படிதாளம் அய்யம்பாளையம் கோவில் காடு பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி 7 ½ பவுன் நகை பறித்து அங்கிருந்து தப்பி சென்றனர்.
- குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்கு பதிவு செய்து, இந்த வழிப்பறிப்பில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.
சேலம்:
சேலம் அருகே உள்ள வேம்படிதாளம் அய்யம்பாளையம் கோவில் காடு பகுதியைச் சேர்ந்தவர் வையாபுரி (வயது 59). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், சம்பவத்தன்று சேனைபாளையம் அருகே உள்ள பூவரசன் கோட்டை சுந்தர பெருமாள் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், வையாபுரியை வழிமறித்து கத்தியால் கையில் வெட்டியது. மேலும் வையாபுரி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலி, 1/2 பவுன் மோதிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியது.
இதுகுறித்து வையாபுரி கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்கு பதிவு செய்து, இந்த வழிப்பறிப்பில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.
- அரசு பெண் அலுவலரிடம் நகை பறித்தவரை சி.சி.டி.வி. காமிரா பதிவு மூலம் போலீசார் பிடித்தனர்.
- இதுகுறித்து திடீர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை
மதுரை விளாங்குடியை சேர்ந்தவர் முத்துமாரி (32). இவர் தமுக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் கணக்காள ராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 15-ந்தேதி மொபட்டில் முத்துமாரி தத்தனேரி பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் முத்துமாரி அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினான்.
இதுகுறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் போலீசார் நடத்தி விசா ரணையில், முத்துமாரியிடம் நகையை பறித்தது நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த சிவபாண்டி (37) என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வீட்டிற்கு சென்று கொள்ளையனை கைது செய்தனர்.
மூதாட்டியிடம் கைவரிசை
மதுரை தனக்கன் குளத்தை சேர்ந்தவர் ரங்க ராஜ் மனைவி ராதாபாய் (62). இவர் சம்பவத்தன்று அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் பெரியார் பஸ் நிலையம் வந்தார். பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ராதாபாய் வைத்திருந்த 3 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர் அபேஸ் செய்து விட்டார்.
இதுகுறித்து திடீர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கடந்த அக்டோபர் மாதம் பெண் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை
- சி.சி.டி.வி. காமிரா பதிவு காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்ததில் அடையாளம் தெரிந்தது
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட மருதன்கோடு பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 4 பவுன் தாலி செயினை பறித்துச் சென்றனர்.
இது குறித்து பெண் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவு காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்தனர்.
தனிப் பிரிவு போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் நடத்திய இந்த விசாரணையில் நகை பறிப்பில் ஈடுபட்டவன் அடையாளம் தெரியவந்தது. அவனை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
அடையாளம் காணப்ப ட்டவன் கேரள மாநிலம் பாற சாலை பகுதியைச் சேர்ந்த ஜினில் (வயது 28) என்பது உறுதியானதால் சப்- இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான தனிப் படை போலீசார் கேரளா விரைந்தனர். அவர்கள் பாறசாலையில் பதுங்கி இருந்த ஜினிலை கைது செய்தனர்.தொடர்ந்து அவனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜினில், இருசக்கர வாகனத்தில் சென்று பல பெண்களிடம் நகை பறித்து இருப்பதும் அவன் மீது கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் குற்றச் செயலில் ஜினிலுடன் ஈடுபட்டு வந்த அவரது நண்பரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
- நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டார்.
- இந்த கொலையில் சம்பந்தப்பட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் அருகே அல்லம்பட்டியை சேர்ந்தவர் சரவணபாண்டியன் (43). காவலாளியாக பணிபுரிந்து வந்த இவர் கடந்த 2016-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த குருவம்மாள்(54) என்பவரை நகைக்காக கொலை செய்தார். சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணபாண்டியனை கைது செய்தனர்.
வழக்கு விசாரணை திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பகவதியம்மாள், குற்றவாளி சரவணபாண்டியனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.14 ஆயிரம் விதித்து உத்தரவிட்டார்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிசு வழங்கி பாராட்டு
- ஆட்டோ டிரைவர் சரவணன் பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர்
நாகர்கோவில்:
நாகர்கோவில், பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். ஆட்டோ டிரைவர்.
இவர் நாகர்கோவில் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 28-ந் தேதி இவரது ஆட்டோவில் 2 பவுன் தங்க செயின் ஒன்று கிடந்தது. இதை பார்த்த சரவணன் அந்த நகையை எடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
போலீசார் விசாரணையில் அவரது ஆட்டோவில் பயணம் செய்த வாலிபர் நகையை தவற விட்டு சென்றது தெரியவந்தது. அந்த வாலிபர் யார்? என்பது குறித்து போலீசார் பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். ஆட்டோ டிரைவர்.சாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் சரவணன் ஆட்டோவில் நகையைதவற விட்டது திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பிரமோத் (வயது 40) என்பது தெரிய வந்தது. இவர் துபாயில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
தற்பொழுது விடுமுறையில் ஊருக்கு வந்த இவர் குமரி மாவட்டம் வில்லுகுறி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு நாகர்கோவிலில் உள்ள நகைக்கடையில் நகை வாங்குவதற்காக வந்துள்ளார்.
அப்போது சரவணன் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அப்போது தான் பிரமோத் 2 பவுன் நகையை தவறவிட்டது தெரியவந்தது. இதையடுத்து பிரமோத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
இன்று காலை கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு வந்த பிரமோத் நகையின் அடையாளங்களை தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் 2 பவுன் நகை ஒப்படைத்தனர். நகையை எடுத்துக் கொடுத்த ஆட்டோ டிரைவர் சரவணனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன் அவருக்கு நினைவு பரிசையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் வழங்கினார். ஆட்டோவில் தவறவிட்ட இரண்டு பவுன் நகையை எடுத்து போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் சரவணனை போலீசார் மட்டுமின்றி சக ஆட்டோ டிரைவர்களும் பாராட்டினார்கள்.
- சத்தியமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு தன் குடும்பத்தோடு வீட்டை பூட்டி விட்டு சென்றார்.
- பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகை,ரொக்கம் 25 ஆயிரம் ஆகியவை கொள்ளை போயிருந்தது.
சரவணம்பட்டி,
கோவை கணபதி மாநகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (48) கட்டிட காண்ட்ராக்டர். இவர் நேற்று முன்தினம் சத்தியமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு தன் குடும்பத்தோடு வீட்டை பூட்டி விட்டு சென்றார்.இந்த நிலையில் அருகில் உள்ள வீட்டுக்காரர் பழனிச்சாமிக்கு போன் செய்து வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக கூறினார். போனில் வந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த பழனிச்சாமி உடனடியாக வீடு திரும்பினார். தனது வீட்டின் முன்புற கதவு உடைந்திருப்பதை கண்டு வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ திறந்துகிடந்தது.பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகை,ரொக்கம் 25 ஆயிரம் ஆகியவை கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள கலைஞர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் இறந்து விட்டார். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 59). இவரது மகன் வெளி மாநிலத்தில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் அஞ்சுகிராமம் அருகே உள்ள காணிமடத்தில் வசித்து வருகிறார். இதனால் விஜயலட்சுமி மட்டும் இந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று அவர் தனது வீட்டை பூட்டி விட்டு தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டார். இதை பயன்படுத்தி யாரோ சில மர்ம ஆசாமிகள் நேற்று இரவு இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து உள்ளனர். அவர்கள் அங்கிருந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இன்று காலை இவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை அந்த பகுதியில் சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சிஅடைந்தனர். உடனே அவர்கள் இது பற்றி காணி மடத்தில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு தகவர் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து விஜயலட்சுமி அங்கு இருந்து தனது வீட்டுக்கு விரைந்து வந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இது பற்றிய அவர் கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் கன்னியாகுமரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
மேலும் தடைய அறிவியல் நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடையங்களை பதிவு செய்தனர். எவ்வளவு நகை, பணம் கொள்ளை அடிக்கபட்டு உள்ளது என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. இது பற்றி கன்னியாகுமரி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சேலம் அருகே ஆட்டையாம்பட்டி டாக்டர் வீட்டில் கதவை உடைத்து 5 பவுன், ரூ.2.15 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
- டாக்டர் வீட்டின் அருகே இருந்த மற்றொரு டாக்டர் வீட்டிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வக்கீல் வினோத் சேவியர். இவரது மனைவி ஆர்த்தி மரியா. இவர் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர்கள் கடந்த 12-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு, சேலம் மாவட்டம் கொளத்தூரில் உள்ள தங்களது பண்ணை வீட்டின் தோட்டத்திற்கு சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டி்ன் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கம் மாயமாகி இருந்தது.
மர்ம நபர்கள் வீட்டில் நுழைந்து, கொள்ளையடித்துச் சென்றதை அறிந்த அவர்கள், சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் கொள்ளை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏற்கனவே கடந்த 12-ந் தேதி, இவர்களது வீட்டின் அருகில் உள்ள மற்றொரு டாக்டர் வீட்டில் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதே நபர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மர்ம நபர்களின் இந்த தொடர் திருட்டை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.