search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதிரியார்"

    • ஹைட்டியின் மிகவும் ஏழ்மையான மற்றும் வன்முறை நிறைந்த பகுதிகளில் ஒன்றாகும்.
    • அவர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டு தெருவில் எரிக்கப்பட்டது

    மகனுக்கு 'பில்லி சூனியம்' வைத்ததாக . 200 பேரை படுகொலை செய்து தெருவில் போட்டு எரித்த கேங் லீடர்

    கரீபிய தீவுகளில் அமைந்துள்ள ஒரு நாடு ஹைதி. இந்த நாட்டின் தலைநகராக - போர்ட்-ஓ-பிரின்ஸ் உள்ளது. போர்ட்-ஓ-பிரின்ஸ் இல் Cite Soleil என்ற துறைமுக பகுதி மக்கள்தொகை மிகுந்த குடிசைப் பகுதியாகும். ஹைதியின் மிகவும் ஏழ்மையான மற்றும் வன்முறை நிறைந்த பகுதிகளில் ஒன்றாகும். இங்கு பல கும்பல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

     

     

    அதில் வார்ஃப் ஜெர்மி என்ற கும்பலை சேர்ந்த தலைவன் மோனல் மிகானோ பெலிக்ஸ் என்பவன் இந்த கொலைகளுக்கு உத்தரவிட்டுள்ளான். பெலிக்ஸ் உடைய மகன் சமீபத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் வெளியிடத்தில் உள்ள தேவாலயத்தில் ஒரு பாதிரியாரை அணுகியுள்ளான்.

     

    பெலிக்ஸ் மகனுக்கு அப்பகுதியில் உள்ள சூனியக்காரர்கள் [voodoo practitioners] பில்லி சூனியம் [voodoo] வைத்துள்ளதாகக் கூறி அவர்களைக் கொல்ல பெலிக்ஸுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெலிக்ஸ் அப்பகுதியில் உள்ள சூனியக்காரர்கள் அனைவரையும் கொலை செய்ய தனது கும்பலுக்கு உத்தரவிட்டுள்ளான். அதன்படி அந்த கும்பல் ஆண்கள் பெண்கள் என சுமார் 200 பேர் வரை கத்தியால் கொன்று குவித்துள்ளனர்.

     

    Cité Soleil இன் Wharf Jérémie பகுதியில் டிசம்பர் 6-8 க்கு இடையி ல் 127 வயதான ஆண்கள் மற்றும் பெண்கள் உட்படக் குறைந்தது 184 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐநா தனது அறிக்கையில் குறிப்பிட்டு இந்த படுகொலைகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹைதி அரசும் நேற்று இந்த படுகொலைகளை உறுதிசெய்துள்ளது.

    மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் வோல்கர் டர்க், கும்பல் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்தில் அதிகரித்து வரும் இதுபோன்ற வன்முறைகள் கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.

     

    100 க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும், அவர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டு தெருவில் எரிக்கப்பட்டதாகவும் அப்பகுதியிலிருந்து நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான கூட்டுறவு (CPD) அமைப்பு தெரிவித்துள்ளது.

    கொலைக்கு உத்தரவிட்ட வார்ஃப் ஜெர்மி கும்பலுக்கு தலைமை தாங்கும் பெலிக்ஸ் தங்கள் நாட்டுக்குள் நுழைய அண்டை நாடான டொமினிகன் குடியரசு கடந்த 2022 இல் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. 

    • இந்த விற்பனை மூலம் மில்லியன் கணக்கான டாலர்கள் தேவாலயத்துக்கு வந்து குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • அவருக்கு கடவுள் அங்கீகாரம் அளித்தார் எனவும் கூறி தேவாலயம் இந்த விற்பனையில் இறங்கியுள்ளது.

    மெக்சிகோவில் உள்ள தேவாலயம் ஒன்று சொர்க்கத்தில் உள்ள மனைகள் ஒரு சதுரடி 100 டாலர் [சுமார் 8,336 ருபாய்] என்ற கணக்கில் விற்பனை செய்து வருவது அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளது. மெக்சிகோ நாட்டின் இக்லேசியா டிஎம்போஸ் தேவாலயதில் நடந்து வரும் இந்த விற்பனை மூலம் மில்லியன் கணக்கான டாலர்கள் தேவாலயத்துக்கு வந்து குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அந்த தேவாலயத்தின் பாதிரியார் கடந்த 2017 ஆம் ஆண்டு கடவுளை சந்தித்தார் எனவும் அப்போது சொர்க்கத்தில் உள்ள மனைகளை விற்பனை செய்ய அவருக்கு கடவுள் அங்கீகாரம் அளித்தார் எனவும் கூறி தேவாலயம் இந்த விற்பனையில் இறங்கியுள்ளது.

     

    சொர்க்கத்தில் ஒரு சதுரடியின் ஆரம்ப விலை நூறு டாலர்கள், ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஜி.பே ஆப்பிள் பே உள்ளிட்ட தளங்களின் மூலம் ஆன்லைனிலேயே பணம் செலுத்தலாம் என்று விளம்பரப்படுத்தியுள்ளது.

    சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்கி வரும் இந்த தேவாலயம் விளையாட்டாகவே இந்த வியாபாரத்தை தொடங்கியுள்ளது. ஆனால் இதை சீரியஸாக எடுத்துக்கொண்ட பக்தர்கள் - வாடிக்கையாளர்கள் சொர்க்கத்தில் உள்ள மனைகளை வாங்கிக் குவித்து வருகின்றனர். இதற்கிடையில் இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • உறவினர்கள் மற்றும் தேவாலயநிர்வாகிகள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர்.
    • எரிந்து கிடந்த உடலின் அருகே இருந்த சில உடைகள் மற்றும் பொருட்களை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    கம்பம்:

    தமிழகம்-கேரள எல்லை வனப்பகுதியில் உள்ள கம்பம் மேற்கு வனச்சரகம் மந்திப்பாறையில் உடல் கருகிய நிலையில் ஒருவர் எரிந்து கிடப்பதாக கம்பம்மெட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கம்பம் மற்றும் கேரள பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எரிந்து கிடந்த உடலின் அருகே இருந்த சில உடைகள் மற்றும் பொருட்களை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் எரிந்த நிலையில் கிடந்தவர் கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த ஆப்ரகாம் (வயது 55) என தெரியவந்தது. இவர் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார்.

    கடந்த 4 நாட்களாக அவர் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். தேவாலயத்துக்கும் அவர் வராமல் இருந்ததால் அவரது உறவினர்கள் மற்றும் தேவாலயநிர்வாகிகள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். அவர் பயன்படுத்தி வந்த செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மந்திப்பாறை பகுதியில் எரிந்து கிடந்தது மாயமான பாதிரியார் என உறுதியானது.

    அவர் எவ்வாறு இறந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் எரித்து கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்துகிடந்த பாதிரியாருக்கு யாரேனும் விரோதிகள் உள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாதிரியார் ஜெகன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.
    • தலைமறைவான ஜெகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜெகன்(வயது 39). இவர் பாதிரியாராக இருந்து வருகிறார். நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் சொந்தமாக கிறிஸ்தவ சபை கட்டி போதகம் செய்து வருகிறார்.

    இவரது சபைக்கு சில ஆண்டுகளாக 40 வயது பெண் ஒருவர் வந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பெண்ணை தொடர்பு கொள்வதற்காக அவரிடம் செல்போன் எண்ணை ஜெகன் வாங்கி உள்ளார்.

    எப்போதாவது போன் செய்து வந்த ஜெகன், காலப்போக்கில் அந்த பெண்ணுக்கு அடிக்கடி போன் செய்து தொந்தரவு செய்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு கணவர் இல்லை. ஒரு மகன் மட்டுமே உள்ளார் என்பதை அறிந்த மதபோதகர் அந்த பெண்ணி டம் ஆபாசமாகவும் பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் அவரது தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அந்த பெண் நேற்று மாலையில் வீட்டில் இருந்த 40 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    வீட்டில் மயங்கி கிடந்த அவரை, உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி, பாதிரியார் ஜெகன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

    அவரை கைது செய்வதற்காக அவர் தங்கியிருக்கும் தச்சநல்லூர் மங்களா குடியிருப்பில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதையடுத்து தலைமறைவான ஜெகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • சி.எஸ்.ஐ. திருச்சபை மண்டல நிர்வாகத்தின்கீழ் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
    • பாதிரியாரையும், அவரது ஆதரவாளர்களையும் தாக்குவது என்பது கடும் கண்டனத்திற்குரியது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபை மண்டல நிர்வாகத்தின்கீழ் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தத் திருச்சபையின் பிஷப்பாக பர்னபாஸ் இருக்கிறார்.

    திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபையின் கல்வி நிலவரக் குழு செயலாளர் மற்றும் திருச்சபை கட்டுப் பாட்டின்கீழ் வரும் பாளையங்கோட்டை செயின்ட் ஜோசப் பள்ளியின் தாளாளர் பதவிகளை தி.மு.க.வைச் சேர்ந்த திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தி.மு.க. உறுப்பினர் எஸ். ஞானதிரவியம் வகித்து வந்தார்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபை மண்டல பிஷப்பின் ஆதரவாளர்களை தி.மு.க. மக்களவை உறுப்பினர் ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக தாக்குவதும், இந்தத் தாக்குதலில் பிஷப் காட்பிரே நோபிள் மோசமாக தாக்கப்பட்டதும், உதைக்கப்பட்டதும் வீடியோ காட்சிகளாக சமூக வலை தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றன. ஒரு பாராளுமன்ற உறுப்பினரே தனது ஆதரவாளர்கள் மூலம் ஒரு பாதிரியாரையும், அவரது ஆதரவாளர்களையும் தாக்குவது என்பது கடும் கண்டனத்திற்குரியது.

    எனவே அவர்களை கைது செய்யவும் அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, தண்டனையைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சைபர் கிரைம் போலீசார் விசாரணை
    • ரூ.70 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே வாணியக்குடி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 52). மாற்றுத்திறனாளி. இவரது உறவினர் ஜூலியஸ் டெல்லியில் ஒரு ஆலயத்தில் பாதிரியாராக உள்ளார். இவர் அடிக்கடி ஜேம்ஸிடம் செல்போனில் பேசுவாராம்.

    இந்த நிலையில் பாதிரியார் ஜூலியஸின் முகநூல் மூலம் ஜேம்சுக்கு ஒரு தகவல் வந்துள்ளது. ஒரு குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளது. குழந்தையின் மருத்துவ செலவுக்கு ரூ.40 ஆயிரம் தேவைப்படுகிறது. உங்களால் உதவ முடியுமா? என கேட்டுள்ளார்.

    இதனை உண்மை என்று நம்பிய ஜேம்ஸ், மர்ம நபர் அனுப்பிய வேறு ஒரு நபரின் 'கூகுள் பே' செல்போன் எண்ணிற்கு ரூ.40 ஆயிரம் அனுப்பி வைத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட மர்ம நபர் மீண்டும் வேறு உதவிக்கு பணம் வேண்டும் என கேட்டுள்ளார். இதுவும் உண்மை என்று நம்பிய ஜேம்ஸ் மீண்டும் 3 தவணையாக ரூ.30 ஆயிரம் அனுப்பி வைத்தார்.

    மொத்தம் ரூ.70 ஆயிரம் அனுப்பி வைத்த பின்பு பாதிரியார் உண்மையான முகநூல் தளத்திலிருந்து ஜேம்ஸிற்கு 'எனது முக நூல்'தளத்தை யாரோ? பயன்படுத்தி பணம் பறிக்கின்றனர். அதனால் பணம் அனுப்ப வேண்டாம் என வாட்ஸ் அப்பில் தகவல் வந்தது. இதனால் ஜேம்ஸ் தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் இது குறித்து குளச்சல் போலீசில் ஜேம்ஸ் புகார் செய்தார். இந்த புகார் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சைபர் கிரைம் போலீசார் மாற்றுத்திறனாளியிடம் ரூ.70 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர். மாற்றுத்திறனாளியிடம் போலி முகநூல் தளம் மூலம் பணம் பறித்த சம்பவம் வாணியக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெண்களிடம் ஆபாசமாக பேசியது உள்ளிட்ட பல புகார்களை பெண்கள் கூறியதால் தலைமறைவானார்.
    • பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ ஜாமீன் கேட்டு நாகர்கோவில் கோர்ட்டில் விண்ணப்பித்தார்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ(வயது 25) மீது பாலியல் புகார் கூறப்பட்டது. பெண்களிடம் ஆபாசமாக பேசியது உள்ளிட்ட பல புகார்களை பெண்கள் கூறியதால், அவர் தலைமறைவானார். இந்த நிலையில் நாகர்கோவிலில் பதுங்கி இருந்த அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து காவலில் எடுத்தும் விசாரித்தனர். அதன் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ ஜாமீன் கேட்டு நாகர்கோவில் கோர்ட்டில் விண்ணப்பித்தார். மனுவை விசாரித்த நீதிபதி, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    • புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என பா.ஜ.க., நாம் தமிழர் கட்சிகள் கோரிக்கை விடுத்தனர்.
    • கிறிஸ்தவ சிறுபான்மை பள்ளிகளுக்கான சலுகைகளையும் படிப்படியாக முதலமைச்சர் குறைத்து வருகிறார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டத்தில் பாதிரியாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அமலதாஸ். இவர் தற்போது இன்னாசியார்புரத்தில் உள்ள பாதிரியார்கள் ஓய்வு இல்லத்தில் தங்கி உள்ளார். இவர் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    மதுக்கடைகளை மூடுவோம் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் இதுவரை மூடப்படவில்லை. மேலும் கூடுதலாக மதுக்கடைகளை திறந்துவிட்டனர்.

    புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என பா.ஜ.க., நாம் தமிழர் கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் மதுக்கடைகள் மூடப்படவில்லை. மேலும் கிறிஸ்தவ சிறுபான்மை பள்ளிகளுக்கான சலுகைகளையும் படிப்படியாக முதலமைச்சர் குறைத்து வருகிறார்.

    இந்நிலையில் தூத்துக்குடி மறை மாவட்ட பொன்விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைப்பதாக தெரிகிறது.

    அவ்வாறு அழைத்தால் பா.ஜ.க., அ.தி.மு.க., காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி போன்ற அனைத்து கட்சிகளையும் அழைக்க வேண்டும். இல்லையென்றால் கட்சி சார்புடையவர்களாக பொருளாகிவிடும். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைப்பதில் உறுதியாக இருந்தால் அப்படிப்பட்ட கிறிஸ்துவர்களை நம்புவதை விட பா.ஜ.க.வை நம்புவதே மேல் என முடிவு செய்து குருக்களிலேயே கொள்கை உறுதி கொண்ட நாங்கள் பொன்விழா நேரத்திலேயே அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைவோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

    இதுதொடர்பாக பாதிரியார் அமலதாஸ் கூறியதாவது:

    தூத்துக்குடி மறைமாவட்ட பொன் விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மட்டும் அழைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை நான் எதிர்க்கிறேன்.

    கிறிஸ்தவ மதம் அனைவருக்கும் பொதுவானது. எனவே இந்த விழாவிற்கு அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பிறந்த குழந்தையை சிறுமிக்கு தெரியாமல் எடுத்துச் சென்று ரூ.10 லட்சத்திற்கு விற்பனை செய்தார்.
    • சிறுமி தனக்கு நடந்த கொடூரத்தை கிராம மக்களிடம் தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் டாக்டர் அம்பேத்கர் கோன சீமா மாவட்டம் புல்லெட்டி குரு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.

    இந்த கிராமத்தில் விஜயவாடாவை சேர்ந்த பாதிரியார் ஒருவர் தேவாலயம் நடத்தி வருகிறார். 17 வயது சிறுமி அடிக்கடி தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்காக சென்று வந்தார்.

    சிறுமியிடம் நைசாக பேசிய பாதிரியார் பணம் கொடுப்பதாக கூறி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

    பின்னர் சிறுமியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி கர்ப்பமானதால் வயிறு பெரியதாக தெரிந்தது. இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் பாதிரியாரிடம் கேட்டபோது சிறுமிக்கு வயிற்றில் கட்டி இருப்பதாகவும் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

    நிறை மாத கர்ப்பிணியான சிறுமிக்கு கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி அமலாபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

    சிறுமி கர்ப்பமாகி குழந்தை பெற்ற சம்பவம் கிராம மக்களுக்கு தெரிந்தால் பிரச்சனை ஏற்படும் என எண்ணிய பாதிரியார் பிறந்த குழந்தையை சிறுமிக்கு தெரியாமல் எடுத்துச் சென்று ரூ.10 லட்சத்திற்கு விற்பனை செய்தார்.

    இந்த விஷயம் குறித்து அவரது பெற்றோர்களிடம் தெரிவிக்ககூடாது என சிறுமியை மிரட்டி உள்ளார். குழந்தையை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த பணத்தை சிறுமியின் உறவினர்களுக்கும் மற்றும் பிரச்சனை நடத்தும் நபர்கள் யார் என கண்டறிந்து அவர்களுக்கும் கொடுத்தார்.

    இந்நிலையில் சிறுமி தனக்கு நடந்த கொடூரத்தை கிராம மக்களிடம் தெரிவித்தார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த கிராம மக்கள் இதுகுறித்து கலெக்டர் ஹிமான்ஷி சுக்லாவிடம் புகார் அளித்தனர். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க அமலாபுரம் போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    போலீசார் தலை மறைவாக உள்ள பாதிரியாரை தேடி வருகின்றனர்.

    • பெண்களுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது
    • எனக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தார்.

    நாகர்கோவில் :

    கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ. (வயது 29). இவர் பெண்களுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இந்த நிலையில் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது புகார் அளித்தார்.

    பாதிரியார் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்த புகாரில் கூறியிருந்தார். அதன்படி பாதிரியார் மீது 5 பிரிவுகளில் சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை கைது செய்து நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர். பின்னர் பாதுகாப்பு கருதி பாளையங்கோட்டை ஜெயிலுக்கு மாற்றப்பட்டார். அந்த வழக்கு தொடர்பாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை சைபர் கிரைம் போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    அப்போது அவரது லேப்-டாப்பில் உள்ள விவரங்களையும் போலீசார் கேட்டறிந்தனர். விசாரணைக்கு பிறகு மீண்டும் பாளையங்கோட்டை ஜெயிலில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ அடைக்கப்பட்டார். இந்த நிலையில் குமரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். புகாரில் பாதிரியாருடன் செல்போனில் சாட்டிங் செய்தேன்.

    பின்னர் அவரது நடவடிக்கை பிடிக்காததால் ஒதுங்கி கொண்டேன். ஆனால் அவர் எனக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக தொடர்பாக விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் பேரில் பாதிரியார் மீது சைபர் கிரைம் போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • ஸ்டான்லி குமார் சர்ச்சுக்கு வரும் பல பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார் என்ற விபரம் எங்களுக்கு தெரிய வந்துள்ளது.
    • பெண்களை மானபங்கம் படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் மத போதகராக ஸ்டான்லி குமார் (வயது 49) என்பவர் பணியாற்றி வந்தார்.

    இவர் மீது ஆலங்குளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    போதகர் ஸ்டான்லி குமார் சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் செல்போன் எண்களை பெற்றுக்கொண்டு பாலியல் உறவுக்கு அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். எனது 30 வயது மகளுக்கு வயிற்றுவலி என்று சர்ச்சுக்கு அழைத்து சென்றேன். அப்போது அவளிடம் பாலியல் ரீதியில் தவறாக நடக்க முயன்றார்.

    இதுகுறித்து வெளியே சொன்னால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அவர் கூறியதால் விட்டுவிட்டோம். ஆனால் அவர் மற்றொரு கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் குளிப்பதை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு தகாத உறவுக்கு அழைத்துள்ளார்.

    இதுதொடர்பாக அந்த பெண் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் ஸ்டான்லி குமார் சர்ச்சுக்கு வரும் பல பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார் என்ற விபரம் எங்களுக்கு தெரிய வந்துள்ளது.

    சர்ச்சுக்குள் அதிநவீன சுழலும் வீடியோ-ஆடியோ பதிவுகளுடன் கூடிய காமிராக்களை பொருத்தி உள்ளார். அதன் மூலம் சர்ச்சுக்கு வரும் அனைவரையும் வீடியோ பதிவு செய்து பல பெண்களின் புகைப்படத்தினை மார்பிங் செய்து வைத்துள்ளதாக மிரட்டி வருகிறார்.

    எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இதையடுத்து டி.எஸ்.பி. சகாயஜோஸ் உத்தரவின் பேரில் பாவூர்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதந்திரா தேவி விசாரணை நடத்தினார்.

    இதுதொடர்பாக புகார் அளித்த பெண்ணின் செல்போனில் உள்ள ஆதாரங்களான வீடியோ க்கள், புகைப்படங்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    பின்னர் ஸ்டான்லி குமாரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் ஆலயத்திற்கு வந்த பெண்களிடம் பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அவர் மீது பெண்களை மானபங்கம் படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

    கைதான ஸ்டான்லி குமாரின் சொந்த ஊர் குமரி மாவட்டம் தடிக்காரன் கோணம் ஆகும்.

    குமரி மாவட்டத்தில் பல பெண்களிடம் பாலியல் லீலைகளில் ஈடுபட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் தென்காசி மாவட்டத்திலும் போதகர் பாலியல் புகாரில் கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெண்களிடம் செல்போன் எண்களை பெற்றுக்கொண்டு பாலியல் உறவுக்கு அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
    • புகார் அளித்த பெண்ணின் செல்போனில் உள்ள ஆதாரங்களான வீடியோக்கள், புகைப்படங்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

    அதில், 49 வயதான பாதிரியார் ஒருவர், சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் செல்போன் எண்களை பெற்றுக்கொண்டு பாலியல் உறவுக்கு அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். எனது 30 வயது மகளுக்கு வயிற்றுவலி என்று சர்ச்சுக்கு அழைத்து சென்றேன். அப்போது அவளிடம் பாலியல் ரீதியில் தவறாக நடக்க முயன்றார்.

    இதுகுறித்து வெளியே சொன்னால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அவர் கூறியதால் விட்டுவிட்டோம். ஆனால் அவர் மற்றொரு கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் குளிப்பதை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு தகாத உறவுக்கு அழைத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இதையடுத்து டி.எஸ்.பி. சகாயஜோஸ் உத்தரவின்பேரில் பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக புகார் அளித்த பெண்ணின் செல்போனில் உள்ள ஆதாரங்களான வீடியோக்கள், புகைப்படங்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து சம்பந்தப்பட்ட பாதிரியாரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் பல பெண்களிடம் பாலியல் லீலைகளில் ஈடுபட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் தென்காசி மாவட்டத்திலும் பாதிரியார் பாலியல் புகாரில் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×