என் மலர்
நீங்கள் தேடியது "பிரச்சனை"
- எதையும் ஆராய்ந்தறிந்து செயல்படுவது, பிரச்சனைகளை தீர்ப்பது உள்ளிட்ட பகுத்தறியும் தன்மைகளை விஞ்ஞானிகள் கற்றுத்தந்து வருகின்றனர்.
- Q* தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டமாக ஸ்ட்ராபெரி ஏஐ இருக்கும்.
உலகத்தை ஆட்டிப்படைக்கத் தொடங்கியிருக்கும் ஏஐ தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்பட்டுக்கொண்டே வருகிறது. சோசியல் மீடியா முதல் தொழில்துறை வரை மனித வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறும் நாளை நோக்கி ஏஐ தொழில்நுட்பம் முன்னேறி வருகிறது.
அந்த வகையில் சாட் ஜி.பி.டி.யை உருவாக்கிய முன்னணி ஓபன் ஏஐ நிறுவனம், ஸ்ட்ராபெர்ரி [Strawberry] என்ற பெயரில் பகுத்தறிவு கொண்ட ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஏஐ தொழில்நுட்பம் குறித்து பலர் அச்சம் தெரிவித்து வரும் நிலையில் இந்த பிராஜக்ட் ஸ்ட்ராபெர்ரியை ஓபன் ஏஐ நிறுவனம் மிகவும் ரகசியமாக செய்து வருவதாக ரியூட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஸ்ட்ராபெர்ரி திட்டத்தின் மூலம் ஏஐ மாடல்களுக்கு தன்னிச்சையாக விஷயங்களை புரிந்து கொள்ளுதல், லாஜிக்கல் ரீசனிங், எதையும் ஆராய்ந்தறிந்து செயல்படுவது, பிரச்சனைகளை தீர்ப்பது உள்ளிட்ட பகுத்தறியும் தன்மைகளை விஞ்ஞானிகள் கற்றுத்தந்து வருகின்றனர். சுருக்கமாக சங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தில் ரஜினி ரோபோட்டுக்கு உணர்வுகளையும் பகுத்தறிவையும் கற்றுத்தரும் தருணம் நிஜத்தில் நடந்து வருகிறது.
கிட்டத்தட்ட மனிதனின் அறிவை பிரதி செய்யும் வகையிலான ஏஐ மாடலை உருவாக்க ஓபன் ஏஐ நிறுவனம் முயன்று வருகிறது. கூகுள்,மெட்டா, மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த முயற்சியில் பின்தங்கியுள்ள நிலையில் ஓபன் ஏஐ உருவாக்கிவரும் இந்த புதிய ஏஐ வருங்காலங்களில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், சிக்கலான சாப்டவேர்களை உருவாக்கவும் பயனுள்ளதாக இருக்கும்என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த புதிய ஸ்ட்ராபெர்ரி ஏஐ திட்டம் குறித்து ஓபன் ஏஐ இன்னும் உறுதி செய்யவில்லை.
ஆனால் சமீபத்தில் ஓபன் ஏஐ பரிசோதனை செய்த Q* என்ற புதிய திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட ஏஐ சிக்கலான கணிதம் மற்றும் அறிவியல் கணக்குகளுக்கு எளிதில் விடை கண்டுபிடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த Q* தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டமாக ஸ்ட்ராபெர்ரி ஏஐ இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
- நமக்கு ஆரோக்கியமானதா இல்லையா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
- மக்கள் மத்தியில் சமையலுக்கு ஆலிவ் ஆயில் பயன்படுத்து மோகம் அதிகரித்துள்ளது.
சமையல் எண்ணெய் விஷயத்தில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். ஆரோக்கியத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் அனைவரும் சமையலுக்கு குறைந்த கலோரி எண்ணெயை பயன்படுத்துகின்றனர். அந்தவகையில், மக்கள் மத்தியில் சமையலுக்கு ஆலிவ் ஆயில் பயன்படுத்து மோகம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, ஆலிவ் எண்ணெய் சாலட் டிரஸ்ஸிங்கிற்கு பயன்படுத்தப்பட்டது. ஆலிவ் எண்ணெய் நமக்கு ஆரோக்கியமானதா இல்லையா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
நிபுணர்களின் கூற்றுப்படி, சமையலுக்கு ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல. ஏனெனில், நாம் ஆலிவ் எண்ணெயை சூடாக்கும் போது, அது ஸ்மோக் பாயின்ட்டை விட சூடாகும். இந்நிலையில், ஆலிவ் எண்ணெயின் கலவைகள் தீப்பொறிகளாக உடைகின்றன. இவை ஃப்ரீ ரேடிக்கல்களாக மாறி நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க ஆரம்பிக்கின்றன.
இந்த தீவிர கலவைகள் உடலில் உள்ள டிஎன்ஏ, லிப்பிடுகள் மற்றும் புரதங்களுடன் வினைபுரியத் தொடங்குகின்றன. இதனால், பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருக்கலாம். இதன் காரணமாக, அழற்சி நோய்கள், இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் புற்றுநோய் கூட ஏற்படும் அபாயம் உள்ளது.
- சித்த மருத்துவ மருந்துகளில் வால் மிளகு முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது.
- வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடும்.
வால் மிளகு என்பது இருவித்திலை தாவரம் ஆகும். மிளகின் அடிப்பகுதியில் வால் போன்ற நீட்சியை கொண்டிருப்பதால் வால் மிளகு என்று அழைக்கப்படுகிறது. சித்த மருத்துவத்தில் வால் மிளகு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நம் உடலில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளித்தாலும், அதிகமாக பயன்படுத்தும்போது பல தீமைகளையும் ஏற்படுத்தத்தான் செய்கிறது. எனவே, வால் மிளகின் தீமைகள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இப்பதிவில் அதன் தீமைகள் பற்றி விவரித்துள்ளோம்.
வால்மிளகு என்றால் என்ன.?
வால்மிளகு என்பது மரத்தில் படர்ந்து வளரும் பலபருவக் கொடித் தாவரம் ஆகும். இதனை ஜாவா, தாய்லாந்து, இலங்கை, மேற்கிந்தியத் தீவு போன்ற பகுதிகளில் பயிர் செய்கின்றனர். இது காரமும், சற்று கசப்பு சுவை கொண்டதாகவும் இருக்கிறது.
மூலக் கடுப்பு, வயிற்றுக் கடுப்பு முதலான நோய்களுக்கு பயன்படுத்தப்படும் சித்த மருத்துவ மருந்துகளில் வால் மிளகு முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது.
வால் மிளகு அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்:
• வால் மிளகு காரத்துடன் கூடிய வலுவான சுவையுடையது. எனவே, இதனை அதிக அளவில் உட்கொள்ள கூடாது. அப்படி அதிகமாக உட்கொண்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
• வால் மிளகு கடுமையான எரிச்சலை ஏற்படுத்தக்கூடியது. வயிற்று புண் மற்றும் வயிற்று எரிச்சல் உள்ளவர்கள் வால் மிளகை அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது மேலும், வயிற்று எரிச்சலை அதிகப்படுத்தும்.
• வால் மிளகு ஆண்மை குறைவு பிரச்சனையை சரிசெய்யக்கூடியது. இதனால், பல ஆண்கள் வால் மிளகை அதிக அளவிலும் அடிக்கடியும் உட்கொண்டு வருவார்கள். ஆனால், வால் மிளகை அதிகமாக எடுத்து கொள்ள கூடாது. அப்படி அதிகமாக எடுத்து கொண்டால் ஆண்களுக்கு பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும்.
• வயதானவர்கள், வால் மிளகினை அதிகமாக எடுத்துக்கொண்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடும்.
எனவே, வால் மிளகினை குறைந்த அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அளவுக்கு மீறி பயன்படுத்தினால் மேற்கூரிய பக்கவிளைவுகள் ஏற்படும்.
- மட்டுமின்றி மார்பகத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு வலி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
- நமது உடலில் உள்ள செல்கள் ஸ்வாசிக்கும் வகையில் மென்மையான உள்ளாடைகளை அணிந்து உறங்க வேண்டும்.
பெண்களில் பலரும் ஆடைகளை தேர்வு செய்ய கொடுக்கும் முக்கியத்துவத்தை உள்ளாடைகளை தேர்வு செய்யும் விஷயத்தில் கொடுப்பது இல்லை. இறுக்கமான, அளவில் மாறுதல் உள்ள உள்ளாடைகளை அணியும்போது பெண்கள் உடல் ரீதியாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அது மட்டுமின்றி மார்பகத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு வலி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
மார்பக பகுதி மிகவும் மென்மையான பகுதி என்பதால் இருக்கமான உள்ளாடை அணியும்போது மார்பகத்தின் கீழ் பகுதியில் எரிச்சல், நீர் கட்டி போன்ற விளைவுகள் ஏற்படலாம். அது மட்டுமின்றி பெண்களில் பலர் இருக்கமான உள்ளாடைகளை அணிந்துகொண்டு இரவில் உறங்குவார்கள்.
அது மிகவும் தவறான செயல் மட்டுமின்றி ஆபத்தானதும் கூட. நமது உடலில் உள்ள செல்கள் ஸ்வாசிக்கும் வகையில் மென்மையான உள்ளாடைகளை அணிந்து உறங்க வேண்டும். உதாரணத்திற்கு ஸ்போட்ஸ் ப்ரா போன்ற வகையில் உள்ள உள்ளாடைகளை அணிந்து உறங்கலாம்.
அப்போது நிம்மதியான தூக்கம் கிடைக்கும். மேலும், கோடை காலங்களில் இறுக்கமான ப்ரா அணிந்து தூங்கும்போது வியர்வை வெளியேறும் அளவு அதிகரித்து தோல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படலாம். அது மட்டுமின்றி, செயற்கை இழைகளால் உருவாக்கப்படும் பிராக்களை அணியும்போது இந்த பிரச்சினை அதிகரிக்கும் என்பதால் பெண்கள் காட்டன் பிராக்களை தேர்வு செய்வதுதான் மிகவும் சிறந்தது.
- பெண் குழந்தைகளுக்கு சுற்பிப்போம்" என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
- ஆண் பென் சமத்துவத்தை உறுதிசெய்தல் என்பது ஒரு முக்கியமான நோக்கமாகும்.
கடலூர்:
கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கூட்டரங்கில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தினை அதிகரிக்கும் விதமாக கருத்தரங்கத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து பேசியதாவது - பெண் குழந்தைகள் மற்றும் பெண்களை முன்னே ற்றும் வகையில் "பெண் குழந்தைகளை காப்போம் - பெண் குழந்தைகளுக்கு சுற்பிப்போம்" என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்து வரும் குழந்தை பாலின விகிதம் பிரச்சனையை தீர்க்க மற்றும் குழந்தைகள் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பாலின பாகுபாட்டை தடுக்கும் நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தில் பெண் குழந்தைகள் விகிதத்தை உயர்த்துதல், பாதுகாத்தல், பெண் குழந்தையின் கல்வி மற்றும் ஆண் பென் சமத்துவத்தை உறுதிசெய்தல் என்பது ஒரு முக்கியமான நோக்கமாகும். 2022-2023ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பாலின விகிதம் பிரச்சனையை தீர்க்க பெண் குழந்தைகள் கருவில் அழிக்கப்படுவதை தடுக்கவும், குழந்தை திருமணத்தை தடுத்து பெண் குழந்தைகள் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பாலின பாகுபாட்டை தடுக்கும் நோக்கமாகச் சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்கள், தனியார் டாக்டர்கள் மற்றும் ஸ்கேன் சென்டர் நடத்துபவர்களுக்கு பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தினை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் சாரா செலின் பவுல் , சமூக நலத்துறை அலுவலர் கோமதி , அரசு டாக்டர்கள், துணை மருத்துவ ஊழியர்கள், தனியார் மருத்துவர்கள் மற்றும் ஸ்கேன் சென்டர் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
- ரவி என்பவர் எனது சாவுக்கு காரணம் என்று எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்தது.
- ரவிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாததால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.
விழுப்புரம்:
திண்டிவனம் அவரப் பாக்கம் பகுதியைச் சேர்ந்த வர் நந்தகுமார். இவர் செஞ்சி ரோட்டில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர் திண்டிவனம் பொலகுப்பம் அருகே காலி மனை அருகே உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ரோசனை போலீசார் அங்கு வந்து உடலை மீட்டு திண்டி வனம் அரசு பொது மருத்து வமனைக்கு பிேரத பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்த போலீஸ் விசாரணை செய்தனர். விசாரணையில் நந்த குமார் சட்டை பையில் ஒரு துண்டு சீட்டில் திண்டிவனம் முருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கேண்டீன் ரவி என்பவர் எனது சாவுக்கு காரணம் என்று எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்தது.
அவர் பாக்கெட்டில் இருந்த சீட்டை வைத்து கேண்டீன் ரவியை போலீ சார் விசாரணை செய்தனர். விசாரணையில் கேண்டீன் ரவிக்கும் நந்தகுமாருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்த தாக கூறப்படுகிறது. இதனால் ரவி நந்த குமாருக்கு தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.இதனால் விரத்தி அடைந்த நந்தகுமார் தற்கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதை யடுத்து கேண்டீன் ரவிக்கு திடீரென உடல்நிலை சரி யில்லாததால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதித்து உள்ளனர்.
- கடையின் வெளியே சாலைகள் தெரியும் அளவிற்கு கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
- உங்களுக்கு ரவுடிகளால் ஏதாவது பிரச்சனை வந்தால் உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று போலீசார் -வணிகர்கள் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமை தாங்கி பேசியதாவது :-
கடைகளில் யாராவது பொருட்கள் திருடுகிறார்களா என கண்காணிப்பதற்காக கடையின் உள்ளே கண்காணிப்பு கேமரா பொருத்தி உள்ளீர்கள். அதேபோல் கடையின் வெளியே சாலைகள் தெரியும் அளவிற்கு கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
அப்படி செய்தால் தான் மர்ம நபர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என கண்டுபிடிக்க முடியும். உங்களுக்கு ரவுடிகளால் ஏதாவது பிரச்சனை வந்தால் உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களை கட்டுப்படுத்த போலீஸ் சார்பில் குழு அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து வணிகர்கள் கூறும்போது, போலீசாருக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம். நகரில் இரவு நேரங்களில் அதிக அளவில் போலீசார் ரோந்து செல்ல வேண்டும்.
மாநகரில் 1400 கண்காணிப்பு கேமரா பொருத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து அந்த கேமராக்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.
- நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சனையால் ராஜேந்திரன் மனவேதனை.
- உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு.
தஞ்சாவூர்:
தஞ்சை சீதாநகர் சிவாஜி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 64). இவர் திருச்சியில் உள்ள ஒரு நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அந்த நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சனையால் ராஜேந்திரன் மன வேதனை அடைந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரிவாளுடன் பால் பிள்ளை வீட்டில் சென்று தகராறு செய்துள்ளனர். அப்போது அரிவாளால் பால்பிள்ளையை தாக்கினார்,
- இதுகுறித்து பால்பிள்ளை கருங்கல் போலீசில் புகார் செய்தார்.புகாரின்பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து பால்பிள்ளையை அரிவாளால் வெட்டிய அண்ணன் தம்பிகளான கிருஷ்ண குமார், விஜிகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கருங்கல், அக்.20-
கருங்கல் அருகே பருத்திவிளை மாங்கோடு பகுதியை சேர்ந்தவர் பால்பிள்ளை (வயது 35) இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும், இவரது வீட்டின் அருகில் வசிக்கும் சிவலிங்கம் மகன்கள் கிருஷ்ணகுமார், விஜி குமார் ஆகியோருக்கும் குடும்ப கோவில் சம்மந்தமாக பிரச்சனை இருந்து வந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் கிருஷ்ணகுமார் மற்றும் விஜிகுமார் ஆகியோர் அரிவாளால் தாக்கியதில் பால்பிள்ளை காயமடைந்தார். இது குறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று அவர்கள் அரிவாளுடன் பால் பிள்ளை வீட்டில் சென்று தகராறு செய்துள்ளனர். அப்போது அரிவாளால் பால்பிள்ளையை தாக்கினார்,
இதுகுறித்து பால்பிள்ளை கருங்கல் போலீசில் புகார் செய்தார்.புகாரின்பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து பால்பிள்ளையை அரிவாளால் வெட்டிய அண்ணன் தம்பிகளான கிருஷ்ண குமார், விஜிகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
- அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
- தகுதியுள்ள அனைத்து மனுக்களுக்கும் விரைவில் தீர்வு
கன்னியாகுமரி:
தக்கலை பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள டவுண்ஹால் வளாகத்தில் தீர்வு தளம் நிகழ்ச்சி பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை தலைமையில் நேற்று நடந்தது. பத்மநாபபுரம் நகர்மன்ற தலைவர் அருள் சோபன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது :-
தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்.ஆட்சி பொறுப்புக்கு வந்த நாளிலிருந்து தொலைநோக்கு பார்வையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் குமரி மாவட்டத்தின் கடைகோடி கிராமங்களுக்கும் சென்று அப்பகுதிகளிலுள்ள சாதாரண ஏழை, எளிய மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில் தீர்வுதளம் நிகழ்ச்சி துவங்கப்பட்டது.
பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணப்பட்டுள்ளது. பொதுமக்களுடைய கோரிக்கைகள் எதுவாக இருந் தாலும், அழகிய மண்டபம் மற்றும் கருங்கல்லில் அமைந்துள்ள எனது முகாம் அலுவலகத்தில் நேரில் வந்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களது கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
தீர்வு தளம் திட்டத்தின் நோக்கம் தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகள் பொதுமக்களை சென்றடைய வேண்டும் என்பதே ஆகும். பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் குடிநீர் வசதி, சாலை வசதி, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், விதவை உதவித்தொகை மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, உள் ளாட்சி அமைப்புகளின் வாயிலாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள். நீண்டகாலமாக கிடப்பில் உள்ள பட்டா பிரச்னை, பொதுமக்களின் அன்றாட பிரச்னைகள் உள்பட தகுதியுள்ள அனைத்து மனுக்களுக்கும் விரைவில் தீர்வு காணப்படும்.
குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் பழுநடைந்த சாலைகள் வேகமாக சீரமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.
மாவட்ட சமூக நலத்துறை அலுவவர் சரோஜினி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சகிலா பானு, கல்குளம் வட்டாட்சியர்வினோத், அரசு வழக்கறிஞர்கள் ஜாண்சன், அரசு அலுவ லர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அம்மாபேட்டை பகுதியில் உள்ள அய்யாசாமி பார்க்கில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
- அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, தீயை அணைத்து பஞ்சாமிர்தத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கொண்டலாம்பட்டி:
விருதுநகர் மாவட்டம் அக்கமாகுளம் அடுத்த நாதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனி . இவரது மகன் பஞ்சாமிருதம் (வயது 26). டிரைவர்.
பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு
இவர் சேலம் தாதகாப்பட்டியில் வசித்து வரும் தனது சகோதரர் காளிமுத்து என்பவருடன் தங்கியிருந்து சேலம் மாநகராட்சியில் ஒப்பந்த டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை 3.30 மணி அளவில் பஞ்சாமிர்தம், அம்மாபேட்டை பகுதியில் உள்ள அய்யாசாமி பார்க்கில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீ மளமளவென பரவியது. உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில் பஞ்சாமிர்தம் வலியால் அலறி துடித்தபடி அங்கும், இங்குமாக ஓடினார்.
அந்த வழியாக சென்றவர்கள், இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பதட்டத்தில் கூச்சலிட்டு அக்கம், பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, தீயை அணைத்து பஞ்சாமிர்தத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பரிதாபமாக இறந்தார்
இதை அறிந்த சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற எண்.2 நீதிபதி உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று பஞ்சாமிர்தமிடம் வாக்குமூலம் வாங்கினார்.
இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பஞ்சாமிர்தம் இன்று காலை 6.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
விசாரணை
இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பஞ்சாமிர்தம் குடும்ப பிரச்சனை காரணமாக தீக்குளித்ததாக போலீசார் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. மேலும் ேவறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- பாவடி தெரு ஆறுமுகம் என்பவருக்கும் இடையே வீட்டுமனை தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்தது.
- கடந்த 17-ந்தேதி இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சி 20-வது வார்டு சக்கரை விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்த நெசவு தொழிலாளி செல்வம் (வயது 55). இவருக்கும் கிழக்கு பாவடி தெரு ஆறுமுகம் (45) என்பவருக்கும் இடையே வீட்டுமனை தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்தது .
இதுதொடர்பாக கடந்த 17-ந்தேதி இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் அவர்கள் காயமடைந்து ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பிய நிலையில் இருதரப்பினரும் தாரமங்கலம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் ஆறுமுகம், செல்வம், பாலமுருகன், செல்வம், தங்கமணி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.