என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கணினி
- ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது சாதனங்களை உற்பத்தி செய்யும் பணிகளை அதிகப்படுத்தி வருகிறது.
- கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் இருந்து ஆப்பிள் ஏற்றுமதி செய்த சாதனங்கள் மதிப்பு 1 பில்லியன் டாலர்களை எட்டியது.
ஆப்பிள் நிறுவன உற்பத்தியாளரான ஜெபில் இன்க், இந்தியாவில் ஏர்பாட்ஸ் பாகங்களை உற்பத்தி செய்ய துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கிருந்து ஏர்பாட்ஸ்-க்கான பிளாஸ்டிக் பாடி அல்லது மூடிகளை சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாக தனியார் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்து இருக்கிறது.
ஏர்பாட்ஸ் பாகங்கள் உற்பத்தி குறித்து ஆப்பிள் மற்றும் ஜபில் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. உற்பத்தியை சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மெல்ல மாற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தியை 25 சதவீதம் வரை அதிகப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தற்போது ஆப்பிள் நிறுவன சாதனங்களின் இந்திய உற்பத்தி 5 முதல் 7 சதவீதமாக உள்ளது. "ஆப்பிள், மற்றும் ஓர் வெற்றிக்கதை. அவர்களின் இந்திய உற்பத்தி ஏற்கனவே 5 முதல் 7 சதவீதமாக உள்ளது. நான் தவறாக கூறவில்லை எனில், அவர்கள் உற்பத்தியை 25 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளனர். அவர்களின் சமீபத்திய சாதனங்கள், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும்." என மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்து இருக்கிறார்.
முன்னதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி அஸ்வினி வைஷ்னவ் இந்தியாவில் இருந்து ஆப்பிள் ஏற்றுமதி செய்யும் சாதனங்கள் மதிப்பு 1 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரத்து 141 கோடியாக அதிகரித்து இருக்கிறது என டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.
- சாம்சங் நிறுவனம் குவால்காம் உடன் இணைந்து புது மொபைல் பிராசஸரை அறிமுகம் செய்து இருக்கிறது.
- புது ஸ்னாப்டிராகன் பிராசஸர் கேலக்ஸி மாடல்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் எதிர்கால ஸ்மார்ட்போன் மாடல்களுக்காக சாம்சங் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் கூட்டணி அமைத்துள்ளன. முன்னதாக குவால்காம் ஸ்னாப்டிராகன் ப்ரோ சீரிஸ் மாடல்களுக்காக இரு நிறுவனங்கள் கூட்டணி அமைத்து இருந்தன. தற்போது கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களில் "குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃபார் கேலக்ஸி" பெயரில் பித்யேக பிராசஸர் வழங்கப்பட உள்ளன.
புது பிராசஸரின் பெயர் நீண்டு இருக்கும் போதிலும், புது ஃபிளாக்ஷிப் மாடல்களில் விசேஷ சிப்செட் உள்ளதை பயனர்களுக்கு நினைவூட்ட பிரத்யேகமாக மாற்றப்பட்ட ஸ்னாப்டிராகன் லோகோவை சாம்சங் தேர்வு செய்து இருக்கிறது. இந்த லோகோ விளம்பர பொருட்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட இருக்கிறது. அடுத்த வாரத்தில் இருந்தே பயனர்கள் புது லோகோவை விளம்பர பதாகை மற்றும் வலைதளத்தில் காண முடியும்.
இந்த பிராசஸர் சாம்சங் சாதனங்களில் மட்டும் பிரத்யேகமாக பயன்படுத்தப்பட இருக்கிறது. எனினும், இரு நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்தம் பற்றிய தகவல்கள் ரகசியமாகவே உள்ளன. முன்னதாக புது சாம்சங் ஸ்மார்ட்போன் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருந்தது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்களும் வெளியாகி இருக்கிறது.
அதன்படி கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் 6.8 இன்ச் QHD+ 3088x1440 பிக்சல் AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 200MP பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
- போட் நிறுவனத்தின் புதிய இயர்போன் THX டியூனிங் செய்த ஆடியோ அனுபவம் வழங்குகிறது.
- மேலும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, ஆடியோ மோட்களை ஸ்விட்ச் செய்ய விசேஷ பட்டன் உள்ளது.
போட் நிறுவனம் தனது புதிய நெக்பேண்ட், ராக்கர்ஸ் 378 இயர்போனை அறிமுகம் செய்து இருக்கிறது. புது நெக்பேண்ட் இயர்போன் அளவில் பெரிய டைனமிக் டிரைவர்கள், 3D ஸ்பேஷியல் பயோனிக் சவுண்ட் தொழில்நுட்பம், THX சார்பில் டியூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. போட் இம்மார்டல் 121 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் வெளியீட்டை தொடர்ந்து இந்த மாடல் அறிமுகமாகி இருக்கிறது.
போட் ராக்கர்ஸ் 378 மாடல் பயனர்களுக்கு அதிக சவுகரியத்தை வழங்கும் நோக்கில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மென்மையான சிலிகான், எடை குறைந்த ஃபிரேம் கொண்டிருக்கிறது. இதன் நெக்பேண்ட்-இல் இயர்போனை கண்ட்ரோல் செய்வதற்கான பட்டன்கள் உள்ளன. மேலும் இயர்பட்களில் காந்தம் உள்ளது.
ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் போட் ராக்கர்ஸ் 378 மாடல் 200 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 25 மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகிறது. இந்த இயர்போனை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 15 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. ராக்கர்ஸ் 378 மாடலில் உள்ள 10mm டைனமிக் டிரைவர்களை THX டியூனிங் செய்து 3D ஸ்பேஷியல் பயோனிக் சவுண்ட் வழங்குகிறது.
இந்த தொழில்நுட்பம் அதிநவீன சரவுண்ட் சவுண்ட், முப்பரிமாண கோணத்தில் ரியலிஸ்டிக் ஆடியோ மற்றும் பொசிஷனல் அக்யுரசி வழங்குகிறது. இதில் உள்ள ஸ்பெஷல் பீஸ்ட் மோட் ஆடியோ லேடன்சியை 65ms வரை குறைக்கும். மோட்களிடையே மாறிக் கொள்ள பிரத்யேக பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, போட் பாரம்பரிய சவுண்ட் உள்ளிட்டவை கேமிங்கிற்கு ஏற்ற இயர்பட்ஸ் ஆக மாற்றுகிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
போட் ராக்கர்ஸ் 378 மாடல்- ஆக்டிவ் பிளாக், எலெக்ட்ரிக் புளூ, மிட்நைட் புளூ மற்றும் வைப்ரண்ட் ரெட் என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை போட் லைஃப்ஸ்டைல், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 1,299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்த மாத துவக்கத்திலேயே பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- ஸ்மார்ட்போன், டிவி, இயர்பட்ஸ் என தொடர்ந்து புது சாதனங்கள் வெளியீட்டை ஒன்பிளஸ் அறிவித்து வருகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் "கிளவுட் 11" நிகழ்வை பிப்ரவரி 7 ஆம் தேதி நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வில் ஒன்பிளஸ் 11 5ஜி, ஒன்பிளஸ் 11R 5ஜி ஸ்மார்ட்போன்கள், ஒன்பிளஸ் டிவி 65 Q2 ப்ரோ, ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2, ஒன்பிளஸ் மெக்கானிக்கல் கீபோர்டு என ஏராளமான சாதனங்களை ஒன்பிளஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த வரிசையில், ஒன்பிளஸ் நிறுவனம் மற்றொரு சாதனத்தை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.
புது சாதனம் ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் டேப்லெட் மாடல் ஆகும். இது ஒன்பிளஸ் பேட் என அழைக்கப்பட இருக்கிறது. ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் பேட் விவரங்களை இதுவரை அறிவிக்கவே இல்லை. எனினும், இந்த டேப்லெட் விவரங்கள் ஒன்பிளஸ் 11 5ஜி மைக்ரசைட்-இல் இடம்பெற்று இருக்கிறது.
ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் புதிய ஒன்பிளஸ் பேட் மாடலுக்கென பிரத்யேக பக்கம் திறக்கப்பட்டுள்ளது. இதில் புது டேப்லெட் பற்றிய விவரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் பேட் மாடலின் மூன்று புறங்களிலும் மெல்லிய பெசல்கள் வழங்கப்படும் என தெரிகிறது. ஒன்பிளஸ் பேட் பற்றிய தகவல்கள் நீண்ட காலமாக வெளியாகி வந்தது.
இந்த நிலையில், புது சாதனத்தின் வெளியீடு தற்போது உறுதியாகி விட்டது. இந்த டேப்லெட் டெஸ்டிங் இம்மமாத துவக்கத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக 2021 வாக்கில் ஒன்பிளஸ் பேட் டேப்லெட் மாடல் EUIPO டிரேட்மார்க் பெற்று இருந்தது. மேலும் இந்த டேப்லெட் ஏற்கனவே சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஒப்போ டேப்லெட்களின் ட்வீக் செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.
- நாய்ஸ் நிறுவனத்தின் புது கேமிங் இயர்பட்ஸ் 36 மணி நேர பிளேபேக் வழங்கும் பேட்டரி உள்ளது.
- இதில் உள்ள குவாட் மைக் ENC என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை வழங்குகிறது.
நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் ட்ரூ வயர்லெஸ் கேமிங் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நாய்ஸ் ஏர் பட்ஸ் 2 மாடலை தொடர்ந்து அறிமுகமாகி இருக்கும் புது இயர்பட்ஸ் ஆகும். நீண்ட நேர கேமிங் செய்வோருக்காக உருவாக்கப்பட்டு இருக்கும் புது இயர்பட்ஸ் பல்வேறு கூடுதல் அம்சங்களை கொண்டிருக்கிறது.
நாய்ஸ் பட்ஸ் காம்பேட் மாடலில் க்ரிஸ்டர் க்ளியர் ஆடியோ அனுபவம் கிடைக்கும். இத்துடன் லோ லேடன்சி, 36 மணி நேரத்திற்கான பிளே டைம், குவாட் மைக் மூலம் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது கேமிங், அழைப்புகள், விர்ச்சுவல் மீடிங் மற்றும் தடையில்லா தகவல் பரிமாற்றத்திற்கு ஏற்ற இயர்பட்ஸ் ஆகும்.
ஃபெதர்லைட் கேஸ், யுஎஸ்ப டைப் சி ரக சார்ஜிங், IPX5 ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இதில் உள்ள 13mm டிரைவர்கள், ப்ளூடூத் 5.3 தொழில்நுட்பம் எவ்வித தடையும் இன்றி அதிக தரமுள்ள ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. அதிநவீன டிசைன், குவாட் மைக் ENC மற்றும் 36 மணி நேர பேட்டி லைஃப் உள்ளிட்டவை கேமிங் அனுபவத்தை தடையில்லாமல் பார்த்துக் கொள்ளும்.
நாய்ஸ் பட்ஸ் காம்பேட் அம்சங்கள்:
இன்-இயர் டிசைன், ஒன் இயர் டச் கண்ட்ரோல்
13mm ஸ்பீக்கர் டிரைவர்
ப்ளூடூத் 5.3, A2DP, HFP, HSP, AVRCP ப்ரோஃபைல் சப்போர்ட்
அல்ட்ரா லோ-லேடன்சி 40ms
குவாட் மைக் ENC
முழு சார்ஜ் செய்தால் 8 மணி நேர பேக்கப்
சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது 37 மணி நேர பேக்கப்
இன்ஸ்டாசார்ஜ், யுஎஸ்பி டைப் சி சார்ஜிங், சார்ஜிங் இண்டிகேட்டர்
IPX5 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி
விலை மற்றும் விற்பனை விவரம்:
நாய்ஸ் பட்ஸ் காம்பேட் மாடல் அறிமுக சலுகையாக ரூ. 1,499 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸ் ஸ்டெல்த் பிளாக், கவெர்ட் வைட் மற்றும் ஷேடோ கிரே என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் கோநாய்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெறுகிறது.
- ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஏராளமான புது சாதனங்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- சமீபத்தில் ஒன்பிளஸ் 11 ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 11 மற்றும் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடல்களின் இந்திய மற்றும் சர்வதேச வெளியீடு பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில், ஒன்பிளஸ் டிவி 65 Q2 ப்ரோ மாடலும் இதே நாளில் அறிமுகம் செய்யப்படும் என ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. "கிளவுட் 11" நிகழ்வில் புது ஸ்மார்ட்போன், இயர்பட் வரிசையில் தற்போது ஃபிளாக்ஷிப் டிவியும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய ஒன்பிளஸ் டிவி Q சீரிஸ் அதிநவீன தொழில்நுட்பம், பிரீமியம் விஷூவல் மற்றும் சவுண்ட் அம்சங்களை பயனர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஒன்பிளஸ் டிவி 65 Q2 ப்ரோ மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்ட அம்சங்கள், அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.
முன்னதாக ஒன்பிளஸ் Q1 சீரிஸ் மாடல் 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன் Q1 ப்ரோ வெர்ஷன் ஸ்லைடிங் சவுண்ட்பார் கொண்டிருந்தது. தற்போது புதிய Q சீரிஸ் டிவி வித்தியாசமான டிசைன் கொண்டிருக்கும் என ஒன்பிளஸ் வெளியிட்டு இருக்கும் டீசரில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே Q1 மாடலுடன் ப்ரோ மாடல் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது Q2 ப்ரோ மட்டுமே அறிமுகமாகும் என தெரிகிறது.
ஒன்பிளஸ், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் புது ஸ்மார்ட் டிவி-க்காக "Notify Me" பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி இந்தியா முழுக்க ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் புதிய ஒன்பிளஸ் டிவி பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகமாக இருக்கும் நிலையில், அதன் விவரங்கள் வெளியாகி வருகின்றன.
- ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஒன்பிளஸ் நிறுவனம் கீபோர்டு ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 7 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஒன்பிளஸ் கீபோர்டு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய ஒன்பிளஸ் கீபோர்டு புகைப்படமும் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி இந்த கீபோர்டு மெக்கானிக்கல் டிசைன் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. ஒன்பிளஸ் வலைதளத்தில் உள்ள பிரத்யேக மைக்ரோசைட்-இல் இந்த சாதனம் டெஸ்டிங் நிலையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்படும் நிலையில், மார்ச் மாத வாக்கில் உற்பத்திக்கு வரும் என தெரிகிறது.
இந்திய வெளியீட்டை தொடர்ந்து ஒன்பிளஸ் கீபோர்டு மாடல் சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் கீபோர்டு வைட் நிற டிசைன் கொண்டிருக்கும் என தெரிகிறது. புகைப்படங்களின் படி ஒன்பிளஸ் கீபோர்டு ஃபன்ஷன், பேக்ஸ்பேஸ், டெலிட், பேஜ் அப் மற்றும் பேஜ் டவுன் பட்டன்களுடன், ரெட் நிற பட்டன் ஒன்றும் இடம்பெற்று இருக்கிறது.
இந்த கீபோர்டு "டபுள் காஸ்கெட்-மவுண்ட் செய்யப்பட்ட டிசைன்" கொண்டிருக்கும் என்றும் பிரத்யேக லேவுட் மற்றும் ப்ரோஃபைல் கொண்டிருக்கும் என ஒன்பிளஸ் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் கீபோர்டு மேக், லினக்ஸ் மற்றும் விண்டோஸ் என இருவித சாதனங்களுடனும் சீராக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஒன்பிளஸ் கீபோர்டு மேம்பட்ட, கஸ்டமைஸ் செய்யப்பட்ட அம்சங்கள், ஒபன்-சோர்ஸ் ஃபர்ம்வேர் கொண்டிருக்கிறது. இத்துடன் இந்த கீபோர்டு RGB லைட்டிங் வசதி கொண்டுள்ளது.
Photo Courtesy: 91Mobiles
- ஆப்பிள் நிறுவனத்தின் ஹோம்பாட் மினி மற்றும் ஐமேக் மாடல்களின் விலை மாற்றப்பட்டு இருக்கிறது.
- இரு சாதனங்களின் புதிய விலை விவரங்கள் ஏற்கனவே ஆப்பிள் வலைதளத்தில் அமலுக்கு வந்து விட்டன.
ஆப்பிள் நிறுவனம் கடந்த வாரம் இரண்டாம் தலைமுறை ஹோம்பாட் மாடலை அறிமுகம் செய்தது. இத்துடன் மேக்புக் ப்ரோ மற்றும் புது மேக் மினி மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டன. ஆப்பிள் ஏற்கனவே விற்பனை செய்து வரும் ஹோம்பாட் மினி மற்றும் 24 இன்ச் ஐமேக் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
இந்தியா உள்பட சர்வதேச சந்தையில் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. மேலும் உயர்த்தப்பட்ட புது விலை விவரங்கள் ஏற்கனவே ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மாற்றப்பட்டு வட்டது. எனினும், ஆப்பிள் விற்பனையாளர்கள் மற்றும் ஆன்லைன் தளங்களில் இன்னமும் பழைய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆப்பிள் ஹோம்பாட் மினி 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் உண்மை விலை ரூ. 9 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது இதன் விலை ரூ. 1000 உயர்த்தப்பட்டு ரூ. 10 ஆயிரத்து 990 என மாறி இருக்கிறது. ஹோம்பாட் மினி மாடலில் S5 மற்றும் U1 சிப்செட்களுடன் நான்கு மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டு உள்ளன.
24-இன்ச் ஐமேக் மாடல் 2021 ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இது 8 ஜிபி / 16 ஜிபி ரேம் ஆப்ஷன்களில், 8-கோர் சிபியு, 7-கோர் ஜிபியு மற்றும் 8-கோர் சிபியு + 8 கோர் ஜிபியு ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஐமேக் மாடலின் அனைத்து வெர்ஷன்களின் விலையும் ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
விலை உயர்வின் படி பேஸ் வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 900 என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரத்து 900 என மாறி இருக்கிறது.
- டுவிட்டர் சமூக வலைதளத்தில் டுவிட்டர் புளூ சந்தா ஏராள மாற்றங்களை பெற்று இருக்கிறது.
- தற்போது ஐஒஎஸ் பயனர்களுக்கு டுவிட்டர் புளூ கட்டணம் 11 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
டுவிட்டர் புளூ சந்தா ஒருவழியாக ஆண்ட்ராய்டு செயலியில் வழங்கப்பட்டு வருகிறது. வருடாந்திர சந்தா கட்டண முறை அறிவிக்கப்பட்டதை அடுத்து ஆண்ட்ராய்டு தளத்திற்கும் டுவிட்டர் புளூ சந்தா வழங்கப்படுகிறது. ஐஒஎஸ் போன்றே டுவிட்டர் புளூ சந்தாவுக்கான கட்டணம் மாதம் 11 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. டுவிட்டர் புளூ வெப் தளத்திற்கான கட்டணத்தை விட செயலியின் கட்டணம் அதிகம் ஆகும்.
இரு தளங்களின் விலை வேறுபாட்டிற்கான காரணம் பற்றி டுவிட்டர் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இன்-ஆப் பர்சேஸ்களுக்கான பிளே ஸ்டோர் கட்டணத்தை ஈடு செய்யும் வகையில் டுவிட்டர் புளூ கட்டணத்தில் வேறுபாடு இருக்கலாம் என கூறப்படுகிறது.
பலன்களை பொருத்தவரை டுவிட்டர் புளூ பயனர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இத்துடன் டுவிட்களை எடிட் செய்யும் வசதி, 60 நிமிடங்களுக்கான வீடியோ அப்லோட் ( வெப்-இல் மட்டும்) செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் கஸ்டம் ஆப் ஐகான், புக்மார்க் செய்யப்பட்ட டுவிட்களுக்கு எளிய நேவிகேஷன், செயலியில் வித்தியாசமான தீம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
செயலியில் நேவிகேஷன் பார் கஸ்டமைஸ் செய்யும் வசதி, ரீடர் அம்சம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இவை டுவிட்டர் ஒட்டுமொத்த அனுபவத்தை வித்தியாசமாக மாற்றுகிறது. டுவிட்டர் புளூ சந்தா தற்போது ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது.
- ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புது ஹோம்பாட் மாடலை இருவித நிறங்களில் அறிமுகம் செய்தது.
- புது ஹோம்பாட் மாடலில் முற்றிலும் புதிய S7 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது 2nd Gen ஹோம்பாட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இது அந்நிறுவனம் 2017 வாக்கில் அறிமுகம் செய்த ஹோம்பாட் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். 2021 வாக்கில் ஒரிஜினல் ஹோம்பாட் விற்பனை நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது புதிய மாடல் அறிமுகமாகி இருக்கிறது. முந்தைய மாடலை போன்ற தோற்றம் கொண்டிருக்கும் ஹோம்பாட் இருவித நிறங்களில் கிடைக்கிறது.
இதில் முற்றிலும் புதிய S7 சிப், பில்ட்-இன் டெம்பரேச்சர் மற்றும் ஹூமிடிட்டி சென்சார் உள்ளது. இந்த சென்சார் ஹோம்பாட் மினி மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. புது ஹோம்பாட் மாடல் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட மெஷ் ஃபேப்ரிக் கொண்டிருக்கிறது. இத்துடன் வொவன் பவர் கேபிள், பேக்லிட் டச் சர்ஃபேஸ் உள்ளது.
ஹோம்பாட் 2nd Gen அம்சங்கள்:
4-இன்ச் கஸ்டம் என்ஜினியரிங் செய்யப்பட்ட ஹை-எக்ஸ்கர்ஷன் வூஃபர்
20mm டைஃப்ராம் பில்ட்-இன் பேஸ்-EQ மைக்
லோ-ஃபிரீக்வன்சி கலிபரேஷன் மைக்ரோபோன்
நான்கு மைக்ரோபோன் டிசைன்
மேம்பட்ட கம்ப்யுடேஷனல் ஆடியோ
ஸ்பேஷியல் ஆடியோ, டால்பி அட்மோஸ்
S7 சிப்செட்
ரூம் சென்சிங் தொழில்நுட்பம்
பிரிசைஸ் டைரக்ஷனல் கண்ட்ரோல்
அல்ட்ரா வைடு பேண்ட் தொழில்நுட்பம்
அதிகபட்சம் ஆறு குரல்களை கண்டறிந்து கொள்ளும் வசதி
பில்ட்-இன் தட்ப-வெப்ப சென்சார்
வைபை, ப்ளூடூத் 5.0, திரெட்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஆப்பிள் ஹோம்பாட் 2nd Gen மாடலின் விலை ரூ. 32 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை பிப்ரவரி 3 ஆம் தேதி துவங்குகிறது. இத்துடன் ஆப்பிள் ஹோம்பாட் மினி ரூ. 9 ஆயிரத்து 900 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக் மினி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
- புது மேக் மினி மாடல்களில் M2 மற்றும் M2 ப்ரோ சிப்செட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஆப்பிள் மேக்புக் ப்ரோ மாடல்களுடன் புது மேக் மினி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புது மேக் மினி மாடல்களில் M2 மற்றும் M2 ப்ரோ சிப்செட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை அடுத்த தலைமுறை சிபியு மற்றும் ஜிபியு, அதிக மெமரி பேண்ட்வித், சக்திவாய்ந்த மீடியா என்ஜின் உள்ளது.
M2 சிப்செட்-இல் 8-கோர் சிபியு, நான்கு அதீத செயல்திறன் கோர்கள், 10-கோர் ஜிபியு உள்ளது. இது புது மேக் மினி மாடலில் ப்ரோ-ரெஸ் அக்செலரேஷன் வழங்குகிறது. புதிய M2 பிராசஸர் ஒரே சமயத்தில் இரண்டு 8K ப்ரோ-ரெஸ் 422 வீடியோ, அதிகபட்சம் 12 4K ப்ரோ-ரெஸ் 422 வீடியோ ஸ்டிரீமிங் செய்ய முடியும்.
இதனுடன் அறிமுகமாகி இருக்கும் புது M2 ப்ரோ சிப்செட் அதிகபட்சம் 12-கோர் சிபியு மற்றும் எட்டு அதீத செயல்திறன் கோர்கள், அதிகபட்சம் 19-கோர் ஜிபியு, 200 ஜிபி மெமரி பேண்ட்வித் மற்றும் அதிகபட்சம் 32 ஜிபி மெமரி உள்ளது. அடுத்த தலைமுறை நியூரல் என்ஜின் M1 மாடலை விட 40 சதவீதம் வேகமானது ஆகும்.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
மேக் மினி M2 8-கோர் சிபியு, 10-கோர் ஜிபியு, 8 ஜிபி யுனிஃபைடு மெமரி, 256 ஜிபி எஸ்எஸ்டி ரூ. 59 ஆயிரத்து 900
மேக் மினி M2 8-கோர் சிபியு, 10-கோர் ஜிபியு, 8 ஜிபி யுனிஃபைடு மெமரி, 512 ஜிபி எஸ்எஸ்டி ரூ. 79 ஆயிரத்து 990
மேக் மினி M2 ப்ரோ 10-கோர் சிபியு, 16-கோர் ஜிபியு, 16 ஜிபி யுனிஃபைடு மெமரி, 512 ஜிபி எஸ்எஸ்டி ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 900
புதிய மேக் மினி மாடல்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை ஜனவரி 24 ஆம் தேதி துவங்குகிறது. முன்பதிவு ஆப்பிள் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளம், ஆப்பிள் ஸ்டோர் ஆப் உள்ளிட்டவைகளில் நடைபெற்று வருகிறது. இந்தியா உள்பட உலகம் முழுக்க 27 நாடுகளில் புது மேக் மினி மாடல்கள் முன்பதிவு செய்யப்படுகின்றன.
- லெனோவோ நிறுவனத்தின் புது லேப்டாப் மாடல் நான்கு விதங்களில் பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது.
- இதில் 14 இன்ச் OLED டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 4K ரெசல்யூஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
லெனோவோ இந்தியா நிறுவனம் யோகா 9i, 2-இன்-1 லேப்டாப் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. யோகா சிரிசில் அறிமுகமாகி இருக்கும் புது 2-இன்-1 லேப்டாப் 13th Gen இண்டெல் கோர் பிராசஸர் மற்றும் இண்டெல் இவோ சான்று பெற்று இருக்கிறது.
புதிய லெனோவோ யோகா 9i மாடலை- லேப்டாப், ஸ்டாண்ட், டெண்ட் அல்லது டேப்லெட் என நான்கு விதமாக பயன்படுத்த முடியும். இதில் 14-இன்ச் OLED டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 4K ரெசல்யூஷன் வசதி, டால்பி விஷன் சான்று வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் லெனோவோ பிரெசிஷன் பென் 2 வழங்கப்படுகிறது. இதில் உள்ள 13th Gen இண்டெல் கோர் i7-1360P பிராசஸர், 16 ஜிபி LPDDR5 5 ரேம், 1 டிபி M.2 எஸ்எஸ்டி வழங்கப்பட்டு இருக்கிறது.
மேலும் 2MP ஹைப்ரிட் FHD/ இன்ஃப்ராரெட் கேமரா, ஸ்மார்ட் ஃபேஷியல் ரெகோக்னிஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள 75 வாட் ஹவர் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் பத்து மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் திறன் கொண்டுள்ளது.
லெனோவோ யோகா 9i அம்சங்கள்:
14 இன்ச் 4K 3840x2400 பிக்சல் / 2.8K 2880x1080 பிக்சல் OLED 60Hz டச் ஸ்கிரீன்
13th Gen இண்டெல் கோர் i7 1360P பிராசஸர்
இண்டெல் ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ்
அதிகபட்சம் 16 ஜிபி LPDDR5 ரேம்
2x யுஎஸ்பி சி தண்டர்போல்ட் 4
1x யுஎஸ்பி ஏ ஜென் 3.2
1x யுஎஸ்பி சி ஜென் 2
ஹெட்போன் ஜாக்
கிளாஸ் டச்பேட்
2MP FHD+ IR ஹைப்ரிட் கேமரா
4x போவர்ஸ் & வில்கின்ஸ் ஸ்பீக்கர்
டால்பி அட்மோஸ் வசதி
லெனோவோ பிரெசிஷன் 2
வைபை 6E, ப்ளூடூத் 5.2
75 வாட் ஹவர் பேட்டரி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
லெனோவோ யோகா 9i 2-இன்-1 லேப்டாப்கள் ஸ்டாம் கிரே மற்றும் ஓட்மீல் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 74 ஆயித்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை லெனோவோ, க்ரோமா மற்றும் ரிலையன்ஸ் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது. ஜனவரி 29 ஆம் தேதி முதல் அமேசான் தளத்திலும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்