search icon
என் மலர்tooltip icon

    கணினி

    ஐகிளவுட் கட்டணங்களை அதிரடியாக உயர்த்திய ஆப்பிள் - ஆனால் ஒரு டுவிஸ்ட்!
    X

    ஐகிளவுட் கட்டணங்களை அதிரடியாக உயர்த்திய ஆப்பிள் - ஆனால் ஒரு டுவிஸ்ட்!

    • ஆப்பிள் நிறுவனம் தனது ஐகிளவுட் சேவைக்கான கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது.
    • பொருளாதார மந்த நிலையே, இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    ஆப்பிள் பயனர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய சேவைகளில் ஒன்றாக ஐகிளவுட் உள்ளது. ஐகிளவுட் சேவையில் பயனர்கள் 5 ஜிபி வரையிலான டேட்டாவை இலவசமாக பயன்படுத்த முடியும். இதை கடந்து அதிக ஸ்டோரேஜ் வேண்டுமெனில் பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

    இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது ஐகிளவுட் சேவைக்கான கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. தற்போது ஐகிளவுட் சேவை கட்டணம் பிரிட்டனில் மற்றும் குறிப்பிட்ட சில நாடுகளி்ல் உயர்த்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையே, இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    விலை உயர்வில் இந்திய பயனர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தியாவில் ஐகிளவுட் சேவைக்கான கட்டணத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்திய பயனர்கள் முன்பை போன்றே, 50 ஜிபி ஐகிளவுட் ஸ்டோரேஜுக்கு மாதம் ரூ. 75, 200 ஜிபி ஐகிளவுட் ஸ்டோரேஜூக்கு மாதம் ரூ. 219, 2 டிபி ஸ்டோரேஜூக்கு மாதம் ரூ. 749 கட்டணம் செலுத்தினால் போதும்.

    இந்தியா போன்றே அமெரிக்காவிலும் ஐகிளவுட் கட்டணம் மாற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. தற்போதைய விலை உயர்வு பிரிட்டன் மட்டுமின்றி போலாந்து, ரோமானியா, சவுதி அரேபியா, தென்னாப்ரிக்கா, ஸ்வீடன், டான்சானியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளிலும் அமலுக்கு வந்துள்ளது.

    Next Story
    ×